கோழிக்கோடு
இது கேரள மாநகராட்சிகளுள் இரண்டாவது மிகப்பெரிய மாநகராட்சி ஆகும் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கோழிக்கோடு (மலையாளம்:കോഴിക്കോട്, ஆங்கிலம்:Kozhikode) என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தில் அமைந்துள்ள கோழிக்கோடு மாவட்டத்தில் இருக்கும் ஒரு மாநகராட்சி ஆகும் மாநிலத்தில் கொச்சினுக்கு அடுத்து மூன்றாவது பெரிய நகரமாகும்
Remove ads
பெயர்க்காரணம்
கோயில் கோட்டை என்பதே கோழிக்கோடு மருவியதாகக் கூறப்படுகிறது. முற்காலத்தில் சுள்ளிக்காடு எனவும் தமிழர்களால் கள்ளிக்கோட்டை எனவும் அழைக்கப்பெற்றது. ஆங்கிலேயர்களாலும் சீனர்களாலும் பிறராலும் வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்பெற்றாலும், மலையாளிகள் இதை கோழிக்கோடு என்றே அழைக்கின்றனர்.
புவியியல்
கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 34.47 மீட்டர் (113.09 அடி) உயரத்தில், 11.2588°N 75.7804°E என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு அமையப் பெற்றுள்ளது.
மக்கள் வகைப்பாடு
2001ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 436,527 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[6] இவர்களில் 49% ஆண்கள்; 51% பெண்கள் ஆவார்கள். கோழிக்கோடு மக்களின் சராசரி கல்வியறிவு 84% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 85%; பெண்களின் கல்வியறிவு 82% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விடக் கூடியதே. கோழிக்கோடு மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். மலையாளமே இந்நகர மக்களின் தாய்மொழியும், ஆட்சிமொழியும் ஆகும். எனினும், பெரும்பான்மையானவர்கள் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளை புரிந்துகொள்ளக் கூடியவர்கள் என்று அறியப்படுகிறது.
ஊடகம்
முக்கிய மலையாள நாளிதழ்கள் அனைத்தும் இங்கு கிடைக்கின்றன. தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நாளிதழ்கள் கிடைக்கின்றன. அனைத்திந்திய வானொலி மற்றும் தனியார் வானொலிகளும் நிகழ்ச்சிகளை ஒலிபரப்புகின்றன. பெரும்பாலான மலையாள எழுத்தாளர்கள் கோழிக்கோட்டைச் சேர்ந்தவர்களே.

கல்வி
இங்குள்ள நூறு சதவீத மக்கள் கல்வியறிவு பெற்றுள்ளனர்.
சான்றுகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads