இடபாந்திக மூர்த்தி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இறவாமல் இருக்க தர்மதேவதை சிவபெருமானின் ரிஷப வாகனமாக இருக்க வரம் வேண்டி நின்றார், அதனை அங்கிகரித்து தர்மதேவதையை வாகனமாக ஏற்றுக்கொண்ட சிவபெருமானின் திருவுருவம் இடபாந்திக மூர்த்தி என்று அழைக்கப்படுகிறது. [சான்று தேவை]இத்திருவுருவம், அறுபத்து நான்கு சிவ உருவத்திருமேனிகளில் ஒன்றாக சைவர்களால் வணங்கப்படுகிறது. சொல்லிலக்கணம்வேறு பெயர்கள்அறவெள்விடைக்கு அருளிய வடிவம் தோற்றம்சிவபெருமான் காளையின் மீது சாய்ந்தபடி, இடக்காலை ஊன்றி, வலக்காலை ஒய்யாரமாக தாங்கியபடி நிற்கும் வடிவம் இடபாந்திகராகும். இவ்வடிவத்தில் இடபுறம் உமையம்மை காட்சிதருகிறார். உருவக் காரணம்உலகம் அழியும் போது தானும் அழிய நேரும் என்ற பயம் தர்மதேவதைக்கு வந்தது. ஊழிக்காலத்தில் சிவபெருமான் உமாபார்வதியுடன் சேர்ந்து திருநடனம் புரிவார். அந்நாளில் புதுஉலகம் தோன்றுவிக்கப்பெறும். எனவே தர்மதேவதை சிவபெருமானை நோக்கி தவமிருந்து, அவரிடம் சரணடைந்தார். தர்மதேவதை ரிசபமாக மாறிநிற்க, ரிசபத்தின் தலையை சிவபெருமான் தொட்டு ஆசிதந்தார். [1] கோயில்கள்திருவாடுதுறை மாசிலாமணிஸ்வரர் கோயில் - இங்கே அமைந்துள்ள இடபாந்திக மூர்த்தியை வணங்குவோமானால் ஊழிக்காலத்தில் நம்முடைய ஆன்மா சிவபெருமானை தஞ்சமடையும் என்பது ஐதீகம். இவருக்கு திங்கள்,வியாழக்கிழமைகளில் வெண்தாமரை அர்ச்சனையும், பசுவின் பால் நைவேத்தியமும் கொடுக்க குரு தோஷ நிவர்த்தியுண்டாகும். மேலும் சிவபெருமானுக்கு வில்வ நீரால் அபிசேகம் செய்தால் மறுபிறவியிலும் சிவனருள் கிடைக்கும். மேலும் காண்கமேற்கோள்கள்
|
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads