அறுபத்து நான்கு சிவவடிவங்கள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அறுபத்து நான்கு சிவவடிவங்கள் என்பவை சைவர்களின் இறைவனான சிவபெருமானின் அறுபத்து நான்கு வடிவங்களாகும். இதனை சதுஷஷ்தி மூர்த்திகள் என்று சமசுகிருத மொழியில் அழைப்பர்.
64 வடிவங்கள்
அஷ்டாஷ்ட விக்கிரக லீலை எனும் கேசி முனிவரின் நூலில் சிவபெருமானின் அறுபத்து நான்கு வடிவங்களும், அவ்வடிவங்களின் மூலம் அடியார்களுக்குச் சிவபெருமான் அருளியமையும் குறிப்பிடப்பட்டுள்ளன. ஈக்காடு இரத்தினவேலு முதலியாரின் சிவபராக்கிரமம் எனும் தமிழ் நூலிலும் இந்த அறுபத்து நான்கு வடிவங்கள் கூறப்பட்டுள்ளன.[1]
சதாசிவ வடிவத்தின் ஈசானம், தத்புருடம், அகோரம், வாமதேவம், சத்யோசாதம் போன்ற ஐந்து முகங்களிலிருந்து, முகத்திற்கு ஐந்தாக இருபத்தியைந்து வடிவங்கள் தோன்றின. இவை மகேசுவர மூர்த்தங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த மகேசுவர மூர்த்தங்களுடன் வேறு சில வடிவங்களும் இணைந்து அறுபத்து நான்கு வடிவங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன.[2]
Remove ads
வகைப்பாடு
இந்த அறுபத்து நான்கு சிவவடிவங்களும் போக வடிவங்கள், யோக வடிவங்கள், கோப வடிவங்கள் (வேக வடிவங்கள்) என மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளன.[3]
போக வடிவம்
- உமாமகேஸ்வரர்
- சந்திரசேகரர்
- ரிஷபாரூடர்
- மாதொருபாகர்
யோக வடிவம்
- தட்சிணாமூர்த்தி
- ஞான தட்சிணாமூர்த்தி
- யோக தட்சிணாமூர்த்தி
- வீணா தட்சிணாமூர்த்தி
- சுகாசனர்
கோப வடிவம்
- கங்காளர்
- வீரபத்திரர்
- திரிபுராந்தக மூர்த்தி
- கஜயுக்த மூர்த்தி
- காலந்தக மூர்த்தி
பிற சிவ வடிவங்கள்
64 சிவ வடிவங்கள் தவிர்த்து எண்ணற்ற சிவவடிவங்களை புராணங்கள் கூறுகின்றன. சைவ சமயக் கலைக் களஞ்சியம் கஜாரி, கஜமுக அனுக்கிரக மூர்த்தி, இராவண அனுக்கிரக மூர்த்தி, ஹரிவிரிஞ்சதாரணர், ஏகதசருத்திரர், முயலகவத மூர்த்தி, சர்வ சம்ஹாரர், யக்ஞேசுவரர், உக்கிரர் ஆகியவற்றை பட்டியலிடுகிறது.
Remove ads
காண்க
வெளி இணைப்புகள்
ஆதாரம்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads