இடிமழை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இடிமழை (thunderstorm, அல்லது பொதுவாக storm) எனப்படுவது புவி வளிமண்டலத்தில் இடி அல்லது மின்னலுடன் கூடிய மழையைக் குறிக்கும்.[1] இது இடிமின்னல் மழை எனவும் அழைக்கப்படும். புவியைத் தவிர வெள்ளி மற்றும் வியாழன் ஆகிய கிரகங்களிலும் இது ஏற்படும்.


.
வாழ்க்கை வட்டம்

குளிர்ந்த வளியை விட வெப்பம் அதிகமான வளி அடர்த்தி குறைந்தது. எனவே வெப்பம் அதிகமான வளி மேலெழும்பும் குளிர்ந்த வளி கீழே தங்கும்.[2] இவ்விளைவை வெப்பக் காற்று பலூனில் அவதானிக்கலாம்.[3] வெப்பக் காற்று அதிகளவான நீராவியையும் கொண்டிருக்கும். இவ்வளி மேலெழும்பும் போது இந்நீராவி ஒடுங்கி முகில்களை உருவாக்கும்.[4] நீராவி ஒடுங்குகையில் ஆவியாகு மறைவெப்பம் வெளியிடப்பட்டு மேலெழும்பும் காற்று அதனைச் சூழ்ந்துள்ள காற்றை விடக் குளிர்வடையும்.[5] வளிமண்டலத்தில் இவ்வாறு கிடைக்கக்கூடிய சலன நிலை ஆற்றல் தொடருமாயின் மழையை உருவாக்கும் திரள் முகில் தோன்றும்.[6] இவை மின்னல் மற்றும் இடியை உருவாக்கும். பொதுவாக இடியுடன் கூடிய மழை உருவாக பின்வரும் காரணிகள் அவசியமாகும்.
- நிலையற்ற தன்மை கொண்ட வளித் திரள்
- ஈரப்பதன்
- மேலெழும்ப உதவும் சக்தி (வெப்பம்)
திரள் முகில் நிலை
இதுவே இடியுடன் கூடிய மழையின் முதலாவது நிலை ஆகும். இந்நிலை ஈரப்பதனுடன் கூடிய காற்று மேலெழுவதால் உருவாகும். காற்றிலுள்ள ஈரப்பதன் மிக உயரத்திற்குச் செல்லும்போது குளிர்ந்து ஒடுக்கமடைந்து நீர்த்துளியாக உருமாறி திரள் முகில்களாகத் தோன்றும். இவ்வாறு உருவாகும் நீர்த்துளிகள் வெளியிடும் ஆவியாகு மறைவெப்பத்தால் அதனைச் சூழ்ந்துள்ள காற்று வெப்பமடைந்து மேலெழும்பும். இதனால் ஏற்படும் வெற்றிடத்தின் விளைவினால் குறைந்த காற்றழுத்த மண்டலம் உருவாகும். பொதுவாக இந்நிலையில் 5×105 டன் நீராவி புவியின் வளிமண்டலத்தில் மேலெழும்பும் விசை காரணமாகச் சேர்க்கப்படும்.[7]
வளர்ச்சியடைந்த நிலை


சூடாக்கப்பட்ட வளி தொடர்ந்து மேலெழும்பி, தொடர்ந்தும் மேலெழும்ப முடியாத நிலையை அடையும். பொதுவாக அடிவளிமண்டலத்தின் எல்லையில் இது அமைந்திருக்கும். இதனால் வளி அவ்விடத்தில் பரவி ஒரு அடைக்கல் வடிவத்தை இடியுடன் கூடிய மழையின் வளர்ச்சியடைந்த நிலைக்குக் கொடுக்கும். சிறிய நீர்த் துளிகள் ஒன்று சேர்ந்து பின்னர் உறைந்து பனிக்கட்டிகளை உருவாக்கும். இவை புவியீர்ப்பின் காரணமாக கீழே விழும்போது உருகி மழையைக் கொடுக்கின்றது. சிலவேளைகளில் ஆலங்கட்டி மழை அல்லது சுழற்காற்றுகளும் இந்நிலையில் உருவாகும். பொதுவாக அதிகரிக்கும் மழை காரணமாக முகில் தனது அழிவடையும் நிலையை அடையும்.[8] சிலவேளைகளில் மேலெழும்பும் வளி கீழ்வரும் வளியில் இருந்து காற்றின் வேகம் அல்லது திசை காரணமாகப் பிரிக்கப்படுமாயின், மீகலன் முகிலாக மாற்றமடைந்து தனது நிலையை பல மணித்தியாலங்கள் தக்கவைத்துக் கொள்ளும்.[9]
கலையும் நிலை
கலையும் நிலையில் கீழாகப்பாயும் வளித்திரளால் முகில் ஆதிக்கம் செலுத்தப்படும். இது குளிர்ந்த காற்றையும் மழையையும் நிலப்பகுதிக்குக் கொண்டுவரும். இவ்வாறான காற்று இடியுடன் கூடிய மழைக்கு உள்ளீடாக மேலாகப்பாயும் காற்றைத்தடுக்கின்றது. இதனால் 20-30 நிமிடங்களில் இடியுடன் கூடிய மழையின் ஆயுட்காலம் முடிவடையும்.[10]
Remove ads
வகைகள்
இடியுடன் கூடிய மழை அதன் முகில் வகைகளைக் கொண்டு வகைப்படுத்தப்படும்.

ஒருகலன் முகிலின் இடியுடன் கூடிய மழை
ஒரு மேலெழும்பும் காற்றை மாத்திரம் கொண்ட முகிலைக் கொண்ட இடியுடன் கூடிய மழையே ஒருகலன் அல்லது தனிக்கலன் எனப்படும். இவற்றை மிதமான காலநிலைப் பிரதேசங்களில் அதிகமாக அவதானிக்கலாம். சிலவேளைகளில் குளிருடன் கூடிய நிலையற்ற வளித்திணிவுகளிலும் அவதானிக்கலாம். இவை அவ்வளவாகப் பயங்கரமானவை அல்ல. இவை பொதுவாக 20 முதல் 30 நிமிடங்களுக்கு நீடிக்கும்.[11]
பல்கல முகிற்கூட்டம்
இடியுடன் கூடிய மழைகளில் இதுவே மிகவும் பொதுவானதாகும். வளர்ச்சியடைந்த முகில்கள் கூட்டத்தின் மத்தியில் காணப்படும். இவ்வகைக் கூட்டம் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மீகல முகில்களாக மாற்றமடையலாம்.

மீகல முகிலின் இடியுடன் கூடிய மழை
வேறாகப் பிரிக்கப்பட்ட மேலெழும்பும் மற்றும் கீழ்வரும் வளி நிரல்களை உடைய பெரும் முகிலே மீகல முகிலாகும். இவை பெரும் சேதத்தை உண்டாக்கும் சுழல் காற்றுகளையும் அதிக மழையையும் உண்டாக்கக் கூடியன. இவை பொதுவாக 24 கி.மீ. வரை பரந்திருப்பவை. இம்முகிலின் காற்றுத் திசை உயரத்திற்கு ஏற்ப வேறுபடக்கூடியது. சிலவேளைகளில் மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் கூட காற்று வீசலாம். இடியுடன் கூடிய மழைகளில் இதுவே அதிக சக்தி வாய்ந்ததாகும்.

Remove ads
திசை
இடியுடன் கூடிய மழை இரு வகைகளில் பாதையை மாற்றக் கூடியது. வளர்ச்சியடைந்த முகில்கள் அதிக வேகத்துடன் செல்ல மாட்டா.
சீரழிவுகள்
இடியுடன் கூடிய மழை பல வகைக் கேடுகளை ஏற்படுத்தக்கூடியன. இவை சிலவேளைகளில் உயிரிழப்பையும் ஏற்படுத்தும்.
முகிலிலிருந்து நிலத்திற்கு ஊடுருவும் மின்னல்

இடியுடன் கூடிய மழையின் போது அதிகமாக நடைபெறும் நிகழ்வே இதுவாகும். இதில் மிக முக்கியக் கேடு காட்டுத்தீயாகும்.[12] பொதுவாக வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், வறட்சியின் இறுதியில் இடியுடன் கூடிய மழை சிறிதளவில் பொழியும். அதிகம் ஈரமடையாத மரங்கள் மின்னலின் போது எரிய ஆரம்பிக்கும்.[13] சிறிதளவு மழையே பொழிவதால் நெருப்பு அணையாமல் பரவி காட்டுத்தீயாகலாம். இந்நிகழ்வு கலிபோர்னிய பகுதிகளில் அதிகம் நடைபெறும். நேரடி மின்னல் தாக்கத்தாலும் உயிரிழப்புகள் ஏற்படும்.
பெரும் ஆலங்கட்டி மழை

சில முகில்கள் ஆலங்கட்டி மழையை உருவாக்கும்.[14] இவை பச்சைநிறத் தோற்றத்தை முகில்களில் உருவாக்கும். இந்நிகழ்வு மலைப்பிரதேசங்களில் அதிகமாக நடைபெறும்.[15] இமயமலைகளில் அதிக தடவைகள் நடைபெறுவதாகும்.[16] அதிக பாரமுள்ள ஆலங்கட்டியால் உயிரிழப்புகளும்[17] பொருட்சேதமும் ஏற்படலாம்[18]
சுழல் காற்று

சிலவேளைகளில் காற்று மேகமூட்டத்திலிருந்து தரைநோக்கிய கூம்புவடிவத்தூண் போன்ற அமைப்பில் சுழன்றடிக்கும்.[19] பொதுவாக 64 முதல் 177 கி.மீ. விரைவில் சுழலும் ஒரு மைல் விட்டம் கொண்ட இச்சுழல்கள் 100 கி.மீ. தொலைவுக்கு நகரக்கூடும்.[20][21][22] இவை செல்லுமிடங்களில் மரங்களையும் வீடுகளையும் நிலைகுலைத்துவிடும்.
திடீர் வெள்ளம்
வழக்கமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கேற்படும் காலங்களிலல்லாது, ஒரு பகுதியில் பெருமழை காரணமாக சடுதியில் எதிர்பாராவண்ணம் ஏற்படும் வெள்ளப்பெருக்கைத் திடீர்வெள்ளம் என்பர். ஊரகப்பகுதிகளில் இவை ஏற்படும்போது உயிருக்கும் உடமைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.[23]
கீழ் நோக்கிய பெருங்காற்று

சில வேளைகளில் அடர்த்தி அதிகமான காற்று மிகுந்த அழுத்தத்துடன் கீழ்நோக்கிவிரைந்து தரையில் மோதி, பின் தரைக்கு இணையாக விரையும்.[24] இது மரங்களையும், கட்டடங்களையும் சாய்க்கவல்லது. கீழே அழுந்தும் காற்று தரையிறங்கும் விமானங்களையோ மேலேயெழும்பும் விமானங்களையோ தாக்கி வீழ்த்திவிடக்கூடும். பிற வாகனங்களும் பாதிக்கப்படலாம்.
Remove ads
சான்றுகள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads