இடையினம்

தமிழ் மொழியில், மெய்யெழுத்துக்களின் 3 வகுப்புகளில் ஒன்று. (பிற: வல்லினம் மற்றும் மெல்லினம்). From Wikipedia, the free encyclopedia

Remove ads

இடையினம் என்பது பழந்தமிழ் இலக்கணங்களின் அடிப்படையில், தமிழில் உள்ள மெய்யெழுத்துகளின் மூன்று வகுப்புகளுள் ஒன்று. வல்லினம், மெல்லினம் என்பன ஏனைய இரண்டு வகுப்புகள். தொல்காப்பியமும், அதற்குப் பின்னர் எழுந்த நன்னூல் முதலிய தமிழ் இலக்கண நூல்களும், ய், ர், ல், வ், ழ், ள் எனும் ஆறு எழுத்துகளையும் இடையின எழுத்துகள் என்கின்றன. இவை வல்லினம் பிறக்கும் இடமான மார்புக்கும் மெல்லினம் பிறக்கும் இடமான மூக்கிற்கும் இடைப்பட்ட இடமான கழுத்தில் இருந்து பிறப்பதால் இடையினம் எனப்படுகின்றன. இவற்றை இடை, இடைமை, இடைக்கணம் என்னும் பெயர்களாலும் அழைப்பது உண்டு.[1] "இடைநிகரவாகி ஒலித்தலாலும், இடை நிகர்த்தாய மிடற்று வளியால் பிறத்தலானும் இடையெழுத்து எனப்பட்டது" என்பது தொல்காப்பியத்துக்கு உரை எழுதிய இளம்பூரணரின் விளக்கம்.[2]

Remove ads

மொழியியலும், இடையினமும்

ஒலிப்பிறப்பு

'ய்' என்ற மெய் அடி நா அடி அண்ணத்தைப் பொருந்தப் பிறக்கும். 'ர்,ழ்' அண்ணத்தை நுனி நா வருட பிறக்கும், மேல் அண்பல்லடி அண்ணத்தை நாவின் விளிம்பு வீங்கி ஒற்ற 'ல்' மெய்யும், வீங்கி வருட 'ள்' மெய்யும் பிறக்கும், 'வ்' மேற்பல்லானது கீழ் உதட்டினை வந்து பொருந்தப் பிறக்கும் என்பது தொல்காப்பியத்தின் விளக்கம்.[3] தற்கால மொழியியல் பெருமளவுக்குத் தொல்காப்பியரின் விளக்கத்துடன் ஒத்துப் போனாலும், சில வேறுபாடுகளும் உள்ளன. எடுத்துக்காட்டாகத் தற்கால மொழியியலாளர் "ய"கரத்தின் ஒலிப்புக்கு இடைநாவின் உதவி தேவை என்று கூறுவதுடன், "ல"கார, "ள"காரங்களின் ஒலிப்பின்போது நாவிளிம்பு வீங்குதல் இல்லை என்றும் எடுத்துக்காட்டுகின்றனர்.[4]

மெல்லின எழுத்துக்களின் ஒலிப்பிடம், ஒலிப்பு முறை ஆகியவை குறித்த தகவல்கள் பின்வருமாறு:

மேலதிகத் தகவல்கள் எழுத்து, அதிர்வு ...
Remove ads

இன எழுத்துகள்

இடையின எழுத்துகளுக்கு இன எழுத்துகள் கிடையா.

குறிப்புகள்

உசாத்துணைகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads