இட்ரியம்(III) ஆக்சைடு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இட்ரியம் ஆக்சைடு (Yttrium oxide) என்பது Y2O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட இட்ரியம் தனிமத்தின் சேர்மமாகும். காற்றில் நிலைப்புத் தன்மையுடன் வெண்மை நிறத்துடன் காணப்படும் இச்சேர்மம் இட்ரியா என்றும் அழைக்கப்படுகிறது. பொருள் அறிவியல் சேர்மங்கள் மற்றும் கனிமச் சேர்மங்கள் ஆகிய இரண்டு வகைச் சேர்மங்களுக்கும் பொதுவானதொரு தொடக்கப் பொருளாக இட்ரியம் ஆக்சைடு விளங்குகிறது.
Remove ads
பயன்கள்
பொருள் அறிவியல்
இட்ரியம் ஆக்சைடு ஒரு மிகமுக்கியமான இட்ரியம் சேர்மமாகும். மற்றும் இது இட்ரியம் ஆர்த்தோ வனேடேட்டு தயாரிப்பில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இரிடியம் ஆக்சைடு பாசுபர்கள், தொலைக்காட்சி படக்குழாய்களில் சிவப்பு வண்ணத்தை வழங்குகிறது. இட்ரியம் இரும்பு கார்னெட்டுகள் , நுண்ணலை வடிப்பிகள் ஆகியனவற்றைத் தயாரிப்பதில் இட்ரியம் ஆக்சைடு பயன்படுத்தப்படுகிறது. உயர் வெப்பநிலை மீக்கடத்திகளானYBa2Cu3O7 தயாரிப்பில் Y2O3 பயன்படுத்தப்படுகிறது. 1-2-3" என அறியப்படும் இக்குறியீடு இதிலுள்ள பகுதிப் பொருட்களின் விகிதத்தைக் குறிப்பிடுகிறது.
- 2 Y2O3 + 8 BaO + 12 CuO + O2 → 4 YBa2Cu3O7
இத்தொகுப்பு வினை 800 0 செ வெப்பநிலையில் நிகழ்கிறது.
இட்ரியம் ஆக்சைடின் வெப்பக் கடத்துத்திறன் 27 வாட்டுகள்/மீட்டர்•கெல்வின்) ஆகும்.[3]
கனிமத் தொகுப்பு வினை
கனிமச் சேர்மங்கள் தயாரிப்பில் இட்ரியம் ஆக்சைடு ஒரு முக்கியமான தொடக்கப் பொருளாக விளங்குகிறது. கரிம உலோக வேதியியலில், இட்ரியம் ஆக்சைடுஅடர் கந்தக அமிலம் மற்றும் அமோனியம் குளோரைடு ஆகியவற்றுடன் சேர்ந்து வினைபுரிந்து YCl3 சேர்மமாக மாறுகிறது.
சீரொளி அல்லது லேசர்கள்
தொலை நோக்கு திண்மநிலை சீரொளிப் பொருளாக Y2O3 கருதப்படுகிறது. குறிப்பாக இட்டெர்பியத்துடன் இணைந்த சீரொளிகள் ஒரு மாசாக தொடர் செயல்பாடு[4] மற்றும் துடிப்புச் செயல்பாடு[5] ஆகிய இரண்டு வகைகளிலும் திறனுள்ள செயல்பாட்டை அனுமதிக்கின்றன. அதிக ச் செறிவு கிளர்ச்சி நிலை (1% ஒழுங்கு) மற்றும் குறைவுக் குளிர்ச்சி நிலை இரண்டிலும் சீரொளி அதிர்வெண் தணிப்பது மற்றும் கட்டுப்படுத்த இயலாத அகண்ட அலைவரிசை உமிழ்வு ஆகியன நடைபெறுகின்றன.[6]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads