இணையத் தொலைக்காட்சி

From Wikipedia, the free encyclopedia

Remove ads

இணையத் தொலைக்காட்சி (Internet television, Internet TV, அல்லது Online TV) எனப்படுவது இணையம் வழியாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை எண்ணிம முறையில் வழங்குதலாகும். இது பல்வேறு நிறுவனங்களும் தனிநபர்களும் உருவாக்கிடும் குறுநிகழ்ச்சிகள் அல்லது ஒளிதங்களைக் குறிக்கும் வலைத்தள தொலைக்காட்சியினின்றும் மாறானது; அதேபோல தொலைக்காட்சி ஒளிபரப்பாளர்களுக்கு ஓர் தொழினுட்ப சீர்தரமாக உருவாகி வரும் இணைய நெறிமுறைத் தொலைக்காட்சியினின்றும் மாறானது. பல வழைமையான ஒளிபரப்பாளர்கள் ஒளித ஓடை தொழினுட்பத்தை பயன்படுத்தி பொதுவான இணையம் வழியாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் பிற ஒளித உள்ளடக்கங்களையும் காட்டுவதை இணையத் தொலைக்காட்சி எனப் பொதுவாகக் குறிப்பிடுகிறோம். இது பயன்படுத்தப்படும் தொழினுட்பத்தை விவரிப்பதில்லை. அயர்லாந்தில் ஆர்டிஈ பிளேயர், ஐக்கிய இராச்சியத்தில் பிபிசி ஐபிளேயர், 4oD, ஐடிவி பிளேயர், யுடிவி பிளேயர், டிமாண்டு ஃபைவ் ஆகியனவும் ஐக்கிய அமெரிக்காவில் ஹூலூ, நெதர்லாந்தில் நெதர்லாந்து 24, ஆத்திரேலியாவில் ஏபிசி ஐவியூ மற்றும் ஆத்திரேலியா லைவ் டிவி போன்ற நிறுவனங்கள் இச்சேவையை வழங்கி வருகின்றன.

Remove ads

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads