இதயத்தசை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இதயத்தில் மாத்திரம் காணப்படும் தசை வகையே இதயத்தசை (Cardiac muscle) ஆகும். இது தன்னியக்கமாகச் செயற்படக் கூடியதுடன் ஒருவரால் இதனைக் கட்டுப்படுத்த முடியாது. இதன் ஒவ்வொரு கலங்களும் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டிருக்கும். பொதுவாக இக்கலங்கள் ஒன்று அல்லது இரண்டு கருக்களைக் கொண்டிருந்தாலும் அரிதாக அவ்வெண்ணிக்கைக்கு அதிகமாகவும் கொண்டிருக்கலாம். இத் தசையின் ஒன்றிணைந்த முயற்சி காரணமாகவே இதயம் இரத்தத்தை உடல் முழுவதும் விநியோகிக்கக் கூடியதாக உள்ளது. இது ஏனைய தசை வகைகளைப் போல விரைவாகக் களைப்படையாது. உடலின் அனைத்து திசுக்களைப் போல இதயத்தசையும் இரத்த ஓட்டத்தையே உணவுக்காகவும் ஆக்சிசனுக்காகவும் நம்பியுள்ளது.[1][2][3]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads