இதிகாசம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இதிகாசம் எனப்படுவது கடவுள், கடவுள் அவதாரம் அல்லது பெரும் வீரர்கள் நிகழ்த்திய அரும்பெரும் வீரச் செயல்களையும், நீதிநெறிகளையும் விவரிக்கும் புராண வரலாறாகும் (Pre-historic Period).[1] இதி-ஹ-ஆஸ என்பதற்கு இப்படி உண்மையில் இருந்தது என்று அர்த்தமாகும்.[2] இந்தியாவைப் பொறுத்தளவில் இராமாயணமும், மகாபாரதமும் இதிகாசங்கள் என்றழைக்கப்படுகின்றன.
நில உடமைச் சமுதாயம் ஒரு காலகட்டம் வரை இருந்து அடுத்த கட்டத்திற்கு மாறி செல்லும்போது அதன் பரிணாமங்கள், நிகழ்வுகள், மாறுதல்கள்,அனைத்தும் வாய்மொழியாக ஒருகாலகட்டம் வரையிலும் குருவின் மூலமாக சீடர்களுக்கு சொல்லி வைக்கப்பட்டு, செவி வழிச் செய்தியாக சில காலம் வரையிலும் இருந்து சமுதாய பரிணாம வளர்ச்சியை தனதாக்கிக்கொண்டு பல ஆயிரம் ஆண்டுகள் கால ஓட்டத்தையும், அதன் சமூக நியதிகளை இதிலிருந்து எடுத்து மேற்கோள்கள் காட்டிடவும், நீதி சொல்லவும், சமுதாய சட்டங்களாகவும் காலத்தை கடந்தும், தெளிவாகவும், எளிமையாகவும், சிக்கலான, நெருடலான, மனிதகுலச் சிந்தனைகளை உள்வாங்கி, உயர்ந்து நிற்கிற வரலாற்றுப் பெட்டகமே இதிகாசமாகும்.
Remove ads
மகாபாரதம்
ஒரு மகன் தன் தந்தையின் விருப்பத்திற்காக தந்தைக்கு மறுமணம் செய்து கொள்ள வேண்டி தனது சிற்றின்ப நுகர்வையும்,அரசாளும் உரிமையையும் தியாகம் செய்கிறான் (பீஷ்மர்). தன் ஆண்மையால் குழந்தை பிறக்காது என்று அறிந்த பாண்டு, மனைவியான குந்தி தேவிக்கு கடவுள்களை நினைத்ததால் கடவுள்களின் அம்சத்தில் குழந்தைகளை தத்தெடுக்கின்றனர். குந்தி தேவி பெற்ற வரத்தினால் (பாண்டு குந்தி தேவி). ஒரு பெண் தன் கணவன் பார்வையிழந்த நிலைக்காக தானும் கண்களை கட்டிக்கொள்கிறாள் (காந்தாரி). ஓர் ஆணின் ஆண்தன்மை ஓராண்டுக்குப் பயனற்றுப்போக வைக்கப்படுகிறது (அருச்சுனன்) பெண் ஒரு சபையின் நடுவில் துகில் உரியப்படுகிறாள் (திரௌபதி). ஒரு மாணவன் (ஏகலைவன்) தேரோட்டியின் மகன் என்பதினால் கல்வி மறுக்கப்படுகிறது. தகுதி இருந்தும் (கர்ணன்) போட்டிக்கு அனுமதியும் மறுக்கப்படுகிறது. சொத்துக்காக ஒரு குடும்பம் (கௌரவர், பாண்டவர்) பிரிந்தும், புதிய நகரை உருவாக்க மிகப்பெரிய(காண்டவப்பிரஸ்தம்)காடு அழிக்கப்படுகிறது. ஓர் அரசன் தன் இராச்சியத்தையே சூதாட்டத்தில் இழக்கிறான்,(தர்மன்). ஓர் அரசி, யயாதியின் அரண்மனையில் பணிப்பெண்ணாக சேவை செய்கிறாள்.(அசுரர்களின் அரசனான விருஷபர்வனின் மகள் சர்மிஷ்டை) தோற்றவர்கள் சொர்க்கத்துக்குச் செல்கிறார்கள் (கௌரவர்). வென்றவர்கள் தங்கள் குழந்தைகளை இழக்கிறார்கள் (பாண்டவர்). நிலம் இரத்தத்தால் குளிப்பாட்டப்படுகிறது (குருச்சேத்திரப் போர்). கடவுள் ஒரு பெண்ணால் சபிக்கப்படுகிறார்(கிருட்டிணன்), அருச்சனனின் அறியாமையை நீக்க போர்க்களத்தில் பிறக்கிறது பகவத் கீதை, மகாபாரதக்கதையை சிறப்பு செய்வது கதைமாந்தர்கள் பலர் செய்யும் சபதங்களும், முனிவர்கள் கதைமாந்தர்களுக்கு விடும் சாபங்களுமே.
Remove ads
இராமாயணம்
காண்க
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads