இந்தியத் தேசிய காங்கிரசு (சேக் அசன்)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

இந்தியத் தேசிய காங்கிரசு (சேக் அசன்) (Indian National Congress (Sheik Hassan)) என்பது கோவாவைச் சேர்ந்த அரசியல் கட்சியாகும். இது ஆகத்து 17, 2002 அன்று எதிர்க்கட்சியான இந்தியத் தேசிய காங்கிரசிலிருந்து பிரிந்து தோற்றுவிக்கப்பட்டது.[1]

இந்த குழுவிற்குக் கோவா சட்டசபையின் முன்னாள் சபாநாயகர் ஹாஜி சேக் அசன் அரூன் தலைமை தாங்கினார். ஐந்து சட்டமன்ற உறுப்பினர்கள் காங்கிரசிலிருந்து பிரிந்து புதிய கட்சியினைத் தோற்றுவித்து பாரதிய ஜனதா கட்சி (பாஜக) - கோவா மக்கள் காங்கிரசு அரசாங்கத்திற்கு ஆதரவைத் தந்தனர். இருப்பினும், இவர்களில் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் சேக் அசனைக் கைவிட்டு, கோவாவில் ஆட்சியிலிருந்து பாஜகவில் சேர்ந்தனர்.

அக்டோபர் 2002-ல் இந்திய தேசிய காங்கிரசு (சேக் அசன்) கோவா அரசாங்கத்தில் பங்கேற்றது. சேக் அசன் தொழில்துறை மற்றும் கைவினைத் துறை அமைச்சராகவும், இவரது கட்சி சகாவான பிரகாசு வெலிப், கூட்டுறவு, அலுவல் மொழிகள் மற்றும் பிற துறைகளுடன் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டனர்.

2002 மாநிலத் தேர்தலில் சேக் அசன் அரூன் பாஜக வேட்பாளராக நின்று தோல்வியடைந்தார். பின்னர், கர்ச்சோரிமில் முசுலிம்களுக்கு எதிரான வகுப்புவாதக் கலவரங்களைத் தொடர்ந்து, சேக் அசன் 2006 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பாஜக அரசிலிருந்து கர்ச்சோரிம் வன்முறையைக் காரணம் காட்டிவிலகினார். இக்கட்சியின் தற்போதைய நிலை தெளிவாக இல்லை.

Remove ads

மேலும் பார்க்கவும்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads