இந்திய உணவு பதனிடும் தொழில்நுட்பக் கழகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்திய உணவு பதனிடும் தொழில்நுட்பக் கழகம் (Indian Institute of Food Processing Technology (IIFPT) இந்திய அரசின் உணவு பதனிடும் தொழில்கள் அமைச்சகத்தின் கீழ், தஞ்சாவூரில் அமைந்த ஒரு முன்னோடி உணவு பதனிடும் தொழில்நுட்பக் கல்வி மற்றும் ஆய்வுக் கழகம் ஆகும். [1])..
Remove ads
துறைகள்
இக்கழகம் ஆறு துறைகள் கொண்டுள்ளது.[2]
- உணவு உற்பத்தி மேம்பாட்டுத் துறை
- உணவு தரம் மற்றும் சோதனை துறை
- உணவு நுண்ணுயிரியல் துறை
- உணவு பொறியியல் துறை.
- கல்வி மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை
- விதை பரவும் தொழில்நுட்பத் துறை
ஆய்வுக் கூடங்கள்
உணவு பதனிடும் ஆய்வு மாணவர்களுக்கு பயன் தரக் கூடிய ஆய்வகங்கள்:
- உணவு உற்பத்தி மற்றும் மேம்பாட்டு ஆய்வகம்
- உணவு நுண்ணுயிரியல் ஆய்வகம்
- உணவு தர மேம்பாடு ஆய்வகம்
- உணவு சேமிப்பு மற்றும் பொதி கட்டுதல் ஆய்வகம்
- உணவு பதனிடும் மற்றும் குஞ்சுபொரிப்பு ஆய்வகம்
- படிம மேம்பாட்டு ஆய்வகம்
- மென் எக்ஸ்-ரே ஆய்வகம் (Soft X-ray Laboratory)
- ஓசை ஆய்வியல் மற்றும் ஒலியலை எதிர்வு ஆய்வகம்
- நவீன அடுமனை ஆய்வகம்
- உணவு பதனிடும் முறை கற்றல் ஆய்வகம்
படிப்புகள்
உணவு பதனிடும் பொறியியல் துறையில் நான்காண்டு இளநிலை படிப்புகளும், இரண்டாண்டு முதுநிலை படிப்புகளும் மற்றும் ஆய்வுப் படிப்புகளும் உள்ளன. இக்கழகம் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப் பெற்றது.
மேலும் பன்னாட்டு நிறுவனங்களுடன் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம், இத்தொழில்நுட்ப கழகத்தின் ஆசிரியர்களும் மற்றும் மாணவர்களும் உலகத் தரம் வாய்ந்த உணவு பதனிதல் மற்றும் மேம்பாட்டுத் துறையின் தொழில்நுட்பங்களை பரிமாற கொள்ளப்படுகிறது.[3] .[4]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads