இந்தியாவின் வாயில்

புது தில்லியில் உள்ள வெற்றி வளைவு From Wikipedia, the free encyclopedia

இந்தியாவின் வாயில்map
Remove ads

இந்தியாவின் வாயில் (India Gate) என்பது புதுதில்லியில், ராஜ்பத்தில் அமைந்துள்ள ஒரு நினைவுச்சின்னம் ஆகும். இது முதலில் அனைத்திந்திய போர் நினைவுச்சின்னம் (All India War Memorial) என்றழைக்கப்பட்டது. 1914–21 வரையான காலப்பகுதியில், முதல் உலகப் போர் நடைபெற்றபோது பிரான்ஸ், மெசபடோமியா, ஈரான், கிழக்கு ஆபிரிக்கா போன்ற பகுதிகளில் உயிரிழந்த 82,000 பிரித்தானிய இந்தியப் படைவீரர்களின் நினைவாக அமைக்கப்பட்டது. ஐக்கிய இராட்சியம் சேர்ந்தவர்கள் உட்பட வீரர்களினதும், அதிகாரிகளினதும் 13,300 பேர்கள் இவ்வாயிலில் பொறிக்கப்பட்டுள்ளது.[3][2]

விரைவான உண்மைகள் இந்தியாவின் வாயில், நிறுவப்பட்டது ...
Remove ads

அமர் ஜவான் ஜோதி

Thumb
அமர் ஜவான் ஜோதி கோவில்.

1971 ஆம் ஆண்டில், வங்காளதேச விடுதலைப் போர் நடைபெற்ற பின் ஒரு சிறிய நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டது. இது ஒரு கருப்பு பளிங்கு நினைவுச் சின்னமாக, துப்பாக்கியின் பின் புறத்தில் ஒரு வீரரின் தலைக்கவசம் அமைந்துள்ளது. நினைவுச் சின்னத்தின் நாற்புறத்திலும் தீபங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இக்கட்டமைப்பு "அமர் ஜவான் ஜோதி" (இறப்பற்ற வீரர்) என அறியப்படுகிறது. இது அறியப்படாத வீரரின் கல்லறையாகவும் விளங்குகிறது.

அன்றைய பிரதமரான இந்திரா காந்தியால் ஜனவரி 26, 1972 அன்று திறந்து வைக்கப்பட்டது. இன்று குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் வருகைபுரியும் நாட்டின் சிறப்பு விருந்தினர்கள், நாட்டின் சிறப்பு தினங்களில் அந்த இடத்தில் மரியாதை செலுத்துவது ஒரு வழக்கமாகவுள்ளது. மேலும் ஒவ்வொரு குடியரசு தினத்தன்றும் ராஜ்பாத்தின் ஆண்டு அணிவகுப்பில் இணைந்துகொள்வதற்கு முன்னர் பிரதமர் முப்படைத் தலைவர்களுடன் வீரர்களுக்கு மரியாதை செலுத்துவதுண்டு.

Remove ads

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads