வங்காளதேச விடுதலைப் போர்

From Wikipedia, the free encyclopedia

வங்காளதேச விடுதலைப் போர்
Remove ads

வங்காளதேச விடுதலைப் போர் 1971இல் மேற்கு பாகிஸ்தானுக்கும் கிழக்கு பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கும் இடையில் நடந்தது. இப்போரில் இந்தியாவும் முக்தி பாஹினியும் (வங்காளதேச விடுதலை இராணுவம்) வென்று வங்காளதேசம் உருவாக்கப்பட்டது. மொத்தத்தில் 90,000 போர் கைதிகள் சரணடைந்தனர்.

விரைவான உண்மைகள் வங்காளதேச விடுதலைப் போர், நாள் ...
Remove ads

வரலாறு

பாகிஸ்தான் விடுதலைக்குப் பிறகு பல ஆண்டுகளாகப் பாகிஸ்தான் அரசு கிழக்கு பாகிஸ்தானுக்குக் குறைந்த அளவு நிதியுதவி கொடுத்து உள்கட்டமைப்பை மேம்படுத்தவில்லை என்று கிழக்குப் பாகிஸ்தான் மக்கள் கண்டனம் செய்தனர். பாகிஸ்தான் அரசு வங்காள மொழியை ஆட்சி மொழியாக உறுதி செய்யவில்லை என காரணமாகவும் கிழக்கு பாகிஸ்தான் மக்கள் வெறுப்படைந்தனர். 1970இல் கிழக்கு பாகிஸ்தானின் அவாமி லீக் கட்சி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்றது, ஆனாலும் மேற்கு பாகிஸ்தான் அவாமி லீக் தலைவரை பதவியில் ஏறவிடவில்லை. இதே ஆண்டில் போலா சூறாவளி வங்காளதேசத்தை தாக்கி 300, 000 மக்கள் உயிரிழந்தனர். இந்த அழிவுக்கு மேற்குப் பாகிஸ்தான் சரியாக நிதியுதவி கொடுக்கவில்லை என்று கிழக்குப் பாகிஸ்தானியர்கள் குற்றம்சாட்டினர். இந்த பல நிகழ்வுகள் காரணமாக கிழக்குப் பாகிஸ்தானில் விடுதலை போராட்டம் தொடங்கியது. இந்த நிலையில் வங்காளதேசத்தில் முக்தி பாஹினி என்ற எதிர்ப்பு இராணுவம் உருவாக்கப்பட்டது.

Remove ads

தொடக்கம்

1971இல் மார்ச் 26ஆம் தேதி விடுதலைப் போராட்டத்தை நிறுத்த பாகிஸ்தான் இராணுவம் வங்காள பொது மக்கள் மீது தாக்குதல் செய்தது. இதனால் கிழக்கு பாகிஸ்தான் விடுதலை விளம்பல் வெளியிட்டு இந்த நாள் முதல் வங்காளதேசம் என்ற பெயரால் அழைக்கப்பட்டது. மார்ச் முதல் ஜூன் வரை பல்வேறு வங்காளதேசத் துணைப்படைகள் முக்தி பாஹினியுக்கு இணைந்தன. வங்காளதேசத்தில் இருந்த பாகிஸ்தான் கப்பல்கள் மற்றும் பொருளாதார மையங்கள் மீது முக்தி பாஹினி தாக்குதல் செய்துள்ளது.

Remove ads

நிகழ்வுகள்

இப்போர் நடைபெறும்பொழுது இந்திய இராணுவமும் சோவியத் ஒன்றியமும் முக்தி பாகினிக்கு நிதியுதவி செய்துள்ளது. இதே நேரத்தில் ஐக்கிய அமெரிக்காவும், சீனாவும் பாகிஸ்தானுக்கு உதவி செய்துள்ளது. இதனால் டிசம்பரில் பாகிஸ்தான் இந்தியா மீது செங்கிஸ் கான் நடவடிக்கை அதாவது தாக்குதல் மேற்கொண்டது. இந்திரா காந்தி போர் நிலையை கூறி இந்திய இராணுவம் கிழக்குப் பாகிஸ்தான் மீது படையெடுத்தது. 13 நாட்களிலேயே போர் முடிந்து இந்தியாவும் முக்தி பாஹினியும் வெற்றி பெற்றன. டிசம்பர் 16ஆம் தேதி பாகிஸ்தான் தளபதி நியாசி சரணடைந்து வங்காளதேச மக்கள் விடுதலையை கொண்டாடியுள்ளனர்.

இப்போரில் பல மனித உரிமை மீறல்கள் நடந்தன என்று தெரிவித்துள்ளது. வங்காளதேச அரசு ஆவணங்கள் பொருந்த 3 மில்லியன் வங்காளதேச மக்கள் கொல்லப்பட்டனர், ஆனால் பாகிஸ்தான் அரசு 26,000 மக்கள் மட்டும் கொல்லப்பட்டனர் என்று கூறியுள்ளது. மேலும் 200,000 பெண்கள் வன்புணர்வுக்கு உள்ளாகினர்.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads