இந்தியாவின் விடுதலை நாள்
இந்தியா விடுதலை பெற்ற நாள் From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்திய விடுதலை நாள் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 1947 ஆகஸ்ட் 15-ல் பிரித்தானிய ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்து தனி விடுதலை நாடானதை குறிக்கும் இந்த நாள் அரசு விடுமுறையாகும். இந்த நாளில் நாடு முழுவதும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்படும்.[1]

இந்த நாளில் இந்தியப் பிரதமர் தில்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். அப்போது சுதந்திர போராட்ட தியாகிகள் நினைவுகூரப்பட்டு மரியாதை செலுத்தப்படுவர். பிரதமர் சென்ற ஆண்டு நாடு அடைந்த வளர்ச்சியையும், வரும் ஆண்டிற்கான குறிக்கோள்களையும் நாட்டு மக்களுக்கு அறிவிப்பார்.
ஒவ்வொரு மாநிலத் தலைநகரத்திலும் மாநில முதலமைச்சர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதுடன் நலத்திட்ட உதவிகளையும் வழங்குவர். இதுபோல் மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சித் தலைவர்களும், அரசு அலுவலகங்களில் அதன் உயரதிகாரிகளும், பள்ளி, கல்லூரிகளில் தலைமை ஆசிரியர்/முதல்வர் அல்லது சிறப்பு விருந்தினராக அழைக்கப் பெற்றவர்கள் கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றுவர்.[2][3]
Remove ads
மேலும் பார்க்க
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads