இந்தியப் பிரதமர்

இந்தியத் தலைமை அமைச்சர் From Wikipedia, the free encyclopedia

இந்தியப் பிரதமர்
Remove ads

இந்தியப் பிரதமர் அல்லது இந்தியத் தலைமை அமைச்சர் (Prime Minister of India) என்பவர் இந்திய அரசின் செயலாக்கத் தலைவர் ஆவார். இவர் இந்தியக் குடியரசுத் தலைவரின் தலைமை ஆலோசகரும் மத்திய அமைச்சரவையின் தலைவரும் ஆவார். இந்தியாவில் பிரதமர் பதவி என்பது மிக உயர்ந்த, அதிக அதிகாரங்கள் உள்ள பதவியாகும். இந்திய பாராளுமன்றத்தின் மக்களவை உறுப்பினர்களால் இந்தியப் பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார். இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆவார், தற்போதைய பிரதமராக நரேந்திர மோதி பதவியில் உள்ளார்.[2]

விரைவான உண்மைகள் இந்தியப் பிரதமர் Bhārat ke Pradhānamantri, பதவி ...

பிரதமர் பாராளுமன்றத்தின் மக்களவை அல்லது மாநிலங்களவையின் உறுப்பினராக இருத்தல் வேண்டும். இல்லையென்றால் ஆறு மாதத்திற்குள் மக்களவை\மேலவையின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஒரு பிரதமரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும்.[3].

Remove ads

பிரதமர் நியமனம்

Thumb
முதல் பிரதமர் நேருவின் பதவியேற்பு நிகழ்ச்சி, ஆகஸ்ட் 15, 1947

பிரதமர், இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். பாராளுமன்றத்தின் மக்களவையின் பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்ட கட்சியின் தலைவரை மட்டுமே குடியரசுத் தலைவர் ஆட்சி அமைக்க அழைப்பார். எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் இல்லையென்றால் கூட்டணிக்கட்சித் தலைவரையோ அல்லது அதிக மக்களவை உறுப்பினர்களைக் கொண்ட ஒரு கட்சியின் தலைவரையோ அழைப்பார்[4].

Remove ads

அதிகாரங்கள் மற்றும் பணிகள்

  • பிரதமர் அமைச்சரவை உறுப்பினர்களைத் தேர்வு செய்வார், குடியரசுத் தலைவர் அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைப்பார்.
  • பிரதமர் அமைச்சர்களுக்கு துறைகளை ஒதுக்குவார்.
  • அனைத்து அமைச்சர்களின் துறைகளை ஒருங்கிணைப்பது, அமைச்சர்களின் துறைகளுக்கிடையேயான பிரச்சனைகளைக் களைவது பிரதமரின் பணியாகும்.
  • அரசின் கொள்கைகளை பிரதமரே முடிவு செய்வார்.
  • பிரதமர் இந்திய திட்டக்குழுவின் தலைவராவார்[5].
  • பிரதமரின் அறிவுறுத்தலின் பேரில் உயர் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், தேர்தல் ஆணையர், பொது தணிக்கை அதிகாரி ஆகியோர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள்.
  • முக்கிய இராணுவ விடயங்கள்.
  • பொதுப்பணிகள் மற்றும் நிர்வாக சீர்த்திருத்தங்கள் பற்றிய கொள்கை முடிவுகள்.
  • மாநிலங்களுக்கான சிறப்பு நிதிகளை வழங்கல் மற்றும் கண்காணித்தல்.
  • முக்கிய பிரச்சினைகளுக்கு பாராளுமன்றத்தில் பதிலளித்தல்.
  • பிரதமரின் தேசிய நிவாரண நிதி மற்றும் தேசிய இராணுவ நிதி போன்றவற்றை நிர்வகித்தல்.
  • மேற்கண்டவற்றுக்கான ஆதாரங்கள்:[6].
Remove ads

பிரதமர் அலுவலகம்

Thumb
பிரதமர் அலுவலகம் (சவுத் பிளாக்), புது டில்லி

பிரதமர் அலுவலக முகவரி:

சவுத் பிளாக், ராய்சினா ஹில்,
புது டில்லி, இந்தியா - 110 011,
தொலைபேசி: 91-11-23012312.

இந்தியாவின் இரு முக்கியச் செயலகங்களில் சவுத் பிளாக்கும் ஒன்று, மற்றொன்று நார்த் பிளாக். பிரதமர் அலுவலகம், பிரதமருக்கு செயலாக்க உதவிகளைப் புரியும். பிரதமரின் முதன்மைச் செயலாளரின் தலைமையில் இயங்கும். இது ஊழல் தடுப்பு மற்றும் பொது மக்கள் குறைதீர்ப்பு போன்ற பிரிவுகளை உள்ளடக்கியது[6].

பிரதமரின் தேசிய நிதிகள்

பிரதமரின் தேசிய நிவாரண நிதி

1948 ல், பாகிஸ்தானிலிருந்து இடம்பெயர்ந்த இந்தியர்களுக்கு உதவுவதற்காக அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேருவின் வேண்டுகோளுக்கிணங்க பொதுமக்களின் பங்களிப்புடன் உருவாக்கப் பட்டது தான் பிரதமரின் தேசிய நிவாரண நிதி. தற்போது இந்நிதி வெள்ளம், பூகம்பம், புயல் மற்றும் சூறாவளி போன்ற இயற்கை அழிவுகளினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணத்திற்காக வழங்கப்படுகிறது. பெரும் கலவரங்கள் அல்லது பெரும் விபத்து போன்றவற்றினால் பாதிக்கப்பட்டவர்க்கும் இந்நிதி வழங்கப்படுகிறது. இதய அறுவைசிகிச்சை, நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை, புற்று நோய் போன்ற மருத்துவ சிகிச்சைகளுக்கும் இந்நிதி பயன்படுகிறது. பிரதமரின் அறிவுறுத்தலின் பேரில் இந்நிதி பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது.

இந்நிதி முழுக்க முழுக்க பொதுமக்களின் பங்களிப்பை மட்டுமே கொண்டது. இந்நிதி பொதுத்துறை வங்கிகளில் இருப்புக் கணக்கில் முதலீடு செய்யப்படுகிறது. இதற்காக வழங்கப்படும் நிதிக்கு முழுமையான வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது[7].

பிரதமரின் தேசிய இராணுவ நிதி

இந்திய இராணுவப் படையினர், துணை இராணுவப் படையினர் மற்றும் அவர்களின் உறவினர்கள் நலனுக்காக பிரதமரின் தேசிய இரானுவ நிதி உருவக்கப்பட்டது. இந்நிதி, பிரதமரைத் தலைவராகவும், பாதுகாப்பு, நிதி மற்றும் உள்த்துறை அமைச்சர்களை உறுப்பினர்களாகக் கொண்டும் உள்ள செயற்குழுவினால் நிர்வகிக்கப்படுகிறது. நிதி அமைச்சரே இந்நிதியின் பொருளாளரும், இணைச் செயலாளரும் ஆவார்.

இந்நிதி, இந்திய ரிசர்வ் வங்கிக் கணக்கில் வைக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க பொதுமக்களின் பங்களிப்பை மட்டுமே கொண்டது. இதற்காக வழங்கப்படும் நிதிக்கு முழுமையான வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது[7].

Remove ads

பிரதமர்களைப் பற்றிய குறுந்தகவல்கள்

இந்தியாவின் முதல் பிரதமர். தொடர்ந்து அதிக நாட்கள் பதவியில் இருந்தவர் ஆகஸ்ட் 15, 1947 முதல் மே 27, 1964 வரை மொத்தம் 6,131 நாட்கள்.
இருமுறை இடைக்கால (தற்காலிக) பிரதமர் பொறுப்புப் பதவி வகித்த ஒரே பிரதமர்.
இவர் 582 நாட்கள் பதவியில் இருந்தார். 1965 பாகிஸ்தான் போரின் வெற்றிக்குப் பின்னர் இவர் கூறிய ஜெய் ஜவான், ஜெய் கிஸான் (வெல்க போர் வீரர், வெல்க விவசாயி) என்ற வாசகம் புகழ்பெற்றது. வெளிநாட்டில் (தஷ்கந்த், சோவியத் ரஷ்யா) இறந்த ஒரே இந்தியப் பிரதமர் இவரே.
முதல் இந்தியப் பெண் பிரதமர். இவர் 5,831 நாட்கள் பதவியில் இருந்தார், தன் தந்தையும், முதல் பிரதமருமான நேருவைவிட 300 நாட்களே குறைவு.
இந்திய விடுதலைக்குப் பிறகு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் பிரதமர் இந்திரா காந்தி அமல்படுத்திய எமர்ஜென்சி நிலையை எதிர்த்து காங்கிரஸ் கட்சியை முதல் முதலாக தோற்கடித்து வெற்றி கண்ட ஜனதா கட்சியின் பிரதமர்.
மதச்சார்பற்ற ஜனதா கட்சி சார்ந்த இவர். ஜனதா கட்சியில் அமைச்சர்களுக்குள் பல பதவி போராட்ட பிரச்சனைகளால் மொரார்ஜி தேசாய் பிரதமர் பதவியில் இருந்து விலகி கொள்ள சரண் சிங் சிறிது காலம் காங்கிரஸ் கட்சியின் ஆதரவால் பிரதமராக இருந்தார்.
விமான ஓட்டுநராக இருந்த இவர் தனது தாயாரும் பிரதமர் இந்திரா காந்தியின் துன்பியல் மரணத்திற்கு பிறகு காங்கிரஸ் கட்சியின் தலைவர்களின் வேண்டுகோளால் பிரதமர் பதவியை 41 வயதில் எற்ற இந்தியாவின் இளம் வயது பிரதமராவார்.
காங்கிரஸ் கட்சியில் பல அமைச்சர் பதவி வகித்த இவர் மிகவும் கண்டிப்புடன் கடமை ஆற்றியதாலும் இவர் நிதித்துறை அமைச்சராக இருந்த போது பிரதமர் ராஜீவ் காந்தியின் தாராள மையமாக்கள் மற்றும் பணக்கார துவத்தையும் எதிர்த்தும் பின்பு இராணுவ அமைச்சராக இருந்த போது ராஜீவ் ஆட்சியில் நடைபெற்ற போபர்ஸ் பீரங்கி ஊழல் மற்றும் இராணுவ தளவாடங்கள் வாங்கிய ஊழல்களை எதிர்த்து காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி ஜனதா தளம் கட்சியை உருவாக்கி சிறிது காலத்திலேயே பிரதமராக ஆனவர்.
பிரதமர் வி. பி. சிங் மண்டல் கமிஷன் மற்றும் ராமர் ரத யாத்திரை நடத்திய தனது கூட்டணி கட்சியான பாஜக தலைவர் அத்வானிக்கு எதிராக செயல்பட்டதால் ஜனதா தளம் ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை பாஜகவில் தலைவர் அத்வானி விலக்கிக் கொண்டதால். வி. பி. சிங் பிரதமர் பதவியை இழந்தார். பின்பு நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜனதா அரசின் மூத்த தலைவர்களில் ஒருவரான சந்திரசேகர் அந்த வாக்கெடுப்பில் காங்கிரஸ் கட்சி மற்றும் பாரதிய ஜனதா கட்சி ஆதரவளிக்க சமாஜ்வாடி ஜனதா கட்சி சார்பில் சிறிது காலம் பிரதமரானார்.
தென் மாநிலத்தைச் சேர்ந்த முதல் இந்தியப் பிரதமர் இவரே ஆந்திரப் பிரதேசத்தை சேர்ந்த இவர். (ஜூன் 21, 1991 முதல் மே 16, 1996 வரை) பதவியில் இருந்த நேரு குடும்பத்தை சேராத பிரதமர் காங்கிரஸ் கட்சியில் அறுதிபெரும்பான்மை இல்லாமல் தொங்கு பாராளுமன்றமாக அமைந்தபோதிலும், கூட்டணி கட்சிகளின் பேராதரவோடு 5 வருடம் முழுமையாக ஆட்சி செய்த பிரதமர் ஆவார்.
1996 நாடாளுமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால் இந்தியாவில் பல மாநிலங்களில் வெற்றி பெற்ற கட்சிகள் இணைந்து ஐக்கிய முன்னணி என்ற கூட்டணியின் மூலம் பிரதமர் வேட்பாளராக தேர்தலை எதிர்கொள்ளமல் கூட்டணி கட்சி தலைவர்களின் ஏகோபித்த ஆதரவால் ஜனதா தளம் கட்சி சார்பில் பிரதமரானவர்
தேவ கவுடா மீது கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்குள் ஏற்பட்ட எதிர்ப்பால். தேவ கவுடா பிரதமர் பதவியில் இருந்து விலகியவுடன் ஜனதா தளம் கட்சி சார்ந்த ஐ. கே. குஜ்ரால் சிறிது காலம் பிரதமராக இருந்தார்.
இவர் திருமணமாகாத முதல் இந்தியப் பிரதமராவார். காங்கிரஸ் கட்சியை சேராத பாரதிய ஜனதா கட்சியில் தொடர்ந்து 5 ஆண்டுகள் பதவியிலிருந்த முதல் பிரதமர் இவரே.
இவர் காங்கிரஸ் கட்சியை சார்ந்த பிரதமர் மற்றும் உலகளவில் புகழ்பெற்ற பொருளாதார மேதையும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமாவார்.
தனது ஆரம்பக் காலத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு பாரதிய ஜனதா கட்சி சார்பில் குஜராத் மாநிலத்தில் 13 வருடம் முதலமைச்சராக இருந்தார்.
  • மேற்கண்டவற்றுக்கான ஆதாரங்கள்:[8].
Remove ads

இந்தியப் பிரதமர்களின் பட்டியல்

குறியீடு
  • №: பதவியில் உள்ள எண்
  • படுகொலை செய்யப்பட்டார் அல்லது பதவியில் இருக்கும் போது இறந்தார்
  • § முந்தைய தொடர்ச்சியான காலத்திற்குப் பிறகு பதவிக்குத் திரும்பினார்
  • RES பதவி விலகினார்
  • NC நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை தொடர்ந்து பதவி விலகினார்
குறிப்பு
  •   தற்காலிக பிரதமர்
மேலதிகத் தகவல்கள் வ. எண், படம் ...
Remove ads

துணை பிரதமர்

Thumb
வல்லபாய் படேல் இந்தியாவின் முதல் துணை பிரதமராக இருந்தார்.

துணை பிரதமர், இந்திய அரசின் மத்திய அமைச்சரவையில் ஒரு உறுப்பினர் ஆவார். பொதுவாக ஒரு துணை பிரதமர், உள்துறை அமைச்சகம் அல்லது நிதி அமைச்சகம் போன்ற ஒரு முக்கிய அமைச்சரவையை தன் இலாகாவாக வைத்திருப்பார். துணை பிரதம மந்திரி பதவி அதிகாரப்பூர்வமற்றது, இருப்பினும் இது ஒரு கூட்டணி அரசாங்கத்தின் போதும் அல்லது தேசிய அவசர காலங்களிலும், அரசியல் ஸ்திரத்தன்மைக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த பதவியை முதலில் வகித்தவர் வல்லபாய் படேல் ஆவார், இவர் ஜவஹர்லால் நேருவின் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராகவும் இருந்தார்.

Remove ads

இவற்றையும் பார்க்கவும்

குறிப்புகள்

  1. In office
  2. Known as Indian National Congress (R) between 1969–1978 Indian National Congress (I) between 1978–96. [9]
  3. Gulzarilal Nanda twice appointed as acting Prime minister of India following deaths of two prime ministers.
  4. Although the Prime Minister can be a member of either house of the Parliament, they have to command the confidence of the மக்களவை (இந்தியா). Upon dissolution of the Lok Sabha, the outgoing PM remains in office until their successor is sworn in.
  5. The Constituent Assembly of India consisted of 389 members elected in 1946 by the provincial assemblies by a single, transferable-vote system of proportional representation. The Assembly was replaced by the Provisional Parliament of India after adoption of the Constitution on 26 January 1950 until the first general elections.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads