இந்தியாவில் கால்நடை வதை

From Wikipedia, the free encyclopedia

இந்தியாவில் கால்நடை வதை
Remove ads

பலி மற்றும் இறைச்சிக்காக கால்நடைகளை வதைத்தல் (ஆங்கிலம்: Cattle slaughter in India) என்பது வரலாற்று முக்கியம் வாய்ந்த ஒன்றாகும்.[1] ஏனெனில் இந்து சமயத்தில் பசுவானது கடவுளின் சிறந்ததொரு படைப்பாகக் கருதப்படுகிறது; பாலிலிருந்து தயாரிக்கப்படும் உணவுப்பொருட்களை அதிக அளவில் பயன்படுத்தவும் செய்கின்றனர். மேலும் அதில் அதிக அளவிலான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 48வது பிரிவானது பசுக்கள், கன்றுகள், இதர கறவை மற்றும் இழுவை கால்நடைகளைக் கொல்வதைத் தடை செய்கின்றது.[2].[3] அக்டோபர் 26, 2005 அன்று, இந்தியாவின் உச்ச நீதிமன்றம் இந்தியாவில் பல்வேறு மாநில அரசாங்கங்களால் இயற்றப்பட்ட பசுவதைத் தடை சட்டங்கள் செல்லும் என உறுதிபடுத்தியது..[4][5][6][7]

Thumb
மேற்கு வங்காளத்தில் துர்கா பூஜையின் போது பலியிடப்படும் எருமைக் கன்று

29 மாநிலங்களில் 24 மாநிலங்கள் மாடுகளை விற்பனை செய்வதில் பல்வேறு விதமான சட்டங்களை இயற்றியுள்ளனர்.[8][9][10][11][12]

Remove ads

பண்டைய இந்தியா

Thumb
A bull seal from the Indus Valley Civilization.
Thumb
A 2nd Century A.D sculpture of Nandi bull.

பண்டையகால இந்தியாவில் மாடு என்பது செல்வத்தின் சின்னமாக இருந்துள்ளது.[13] தற்போது இக்கருத்து முழுவதுமாக மீறப்படவோ அல்லது போற்றப்படவோ இல்லாத நிலையில் உள்ளது.[14][15] வேத காலத்தில் பசுக்கள், எருமைகள் மற்றும் எருதுகள் போன்ற விலங்குகள் நுகர்வு மற்றும் பலி போன்றவற்றிற்காகக் கொல்லப்பட்டன. ஆனால் புத்தர் விலங்குகள் பலியிடப்படுவதை முற்றிலும் தவறாகக் கருதினார். பௌத்த மதத்தின் முக்கிய கொள்கையாகக் கொல்லாமை மாறியது. பின்னர் கொல்லாமையை இந்து சமயமும் ஏற்றுக்கொண்டது.[16][17][18][19]

Remove ads

சட்டங்கள்

Thumb
இந்தியாவில் மாநில வாரியாக் கால்நடைகளின் வதை நிலைமை: சிவப்பு நிறம் - பசு, எருமை மற்றும் எருதுகளை வதை செய்ய அனுமதிக்காத மாநிலங்கள்: மஞ்சள் நிறம் - அரசின் அனுமதியுடன் கால்நடைகளை வதை செய்யும் மாநிலங்கள்: பச்சை நிறம் - கால்நடைகளை வதைப்பதற்கு அரசு அனுமதி தேவையற்ற மாநிலங்கள்

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பசு தடைவதை சட்டம் இருந்த போதிலும், மகாராட்டிரா, குஜராத்,இராஜஸ்தான், பஞ்சாப், அரியானா, இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் மாநிலங்களில் மட்டும் பசு, எருமை மற்றும் காளைகளை முற்றிலும் வதை செய்ய அனுமதிக்காத மாநிலங்கள் ஆகும்.

தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், பிகார், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர்]] மற்றும் ஒடிசா போன்ற மாநிலங்களில் பசு தவிர பிற கால்நடைகளான ஒட்டகம் எருமை, எருமை மற்றும் எருதுகளை இறைச்சிக்காக, அரசின் அனுமதி பெற்ற வதைக் கூடத்தில் வைத்து வதை செய்ய அனுமதி உள்ளது.

கேரளா, மேற்கு வங்காளம், அசாம், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், [[நாகாலாந்து, மேகாலயா, திரிபுரா போன்ற மாநிலங்களில் அரசு அனுமதி இன்றி அனைத்து கால்நடைகளை இறைச்சிக்காகவும், பலியிடுவதற்கும் வதைக்க அனுமதியுள்ளது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 15 ஆவது பிரிவின் 7 வது அட்டவணையில் கால்நடைகளை பராமரித்தல், பாதுகாத்தல், மற்றும் அவைகளை வதை செய்வதை தடை செய்வதை பற்றி அந்தந்த மாநிலங்களே சட்டம் இயற்ற முழு அதிகாரம் வழங்கியுள்ளது.[20][21]

Remove ads

மேலும் படிக்க

  • Marvin Harris (1998). Good to Eat: Riddles of Food and Culture. Waveland Press.
  • Michael Tobias|Michael Charles Tobias. World War III: Population and the Biosphere at the End of the Millennium. Bear & Co., 1994, Second Edition, Continuum.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads