இந்தியாவில் பயங்கரவாதம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

பயங்கரவாதத்தின் ஒரு பொதுவான வரையறை, வன்முறையை முறையாக அல்லது அச்சுறுத்தும் வகையில் பயன்படுத்தி, மக்கள் அல்லது அரசினை மிரட்டி, அதன் மூலம், அரசியல், மத, அல்லது கருத்தியல் மாற்றங்களை ஏற்படுத்துவதாகும்.[1][2] உள்துறை அமைச்சகத்தின் கருத்துப்படி, இந்தியாவில் பயங்கரவாதம், (Terrorism in India) ஒரு மாநிலத்தில் குறிப்பிடத்தக்க ஆபத்தை விளைவிக்கும். இந்தியாவில் பயங்கரவாதம் அடிப்படையில் வெளி மற்றும் உள், என்று பிரிக்கப்பட்டது. ’வெளி பயங்கரவாதம்’ அண்டை நாடுகளால் நிகழ்த்தப்படுவது. ’உள்நாட்டு பயங்கரவாதம்’ மத அல்லது வகுப்புவாத வன்முறை மற்றும் நக்சலைட் மாவோயிச எழுச்சி ஆகியவற்றைக் குறிக்கும். பயங்கரவாத நடவடிக்கைகளில் இந்திய அல்லது வெளிநாட்டு குடிமக்கள் ஈடுபட்டிருக்கலாம்.

நீண்ட கால தாக்குதல்களை மேற்கொண்ட பகுதிகள் ஜம்மு காஷ்மீர், மும்பை, மத்திய இந்தியா (நக்சலிசம்) மற்றும் ஏழு சகோதரி மாநிலங்கள் ஆகும். 2006 ஆம் ஆண்டில், நாட்டின் 608 மாவட்டங்களில் குறைந்தது 232 மாவட்டங்கள் பல்வேறு கிளர்ச்சி மற்றும் பயங்கரவாத இயக்கங்கள் மூலம், மாறுபட்ட தாக்குதலுக்கு ஆளாகப்பட்டது. ஆகஸ்ட் 2008 ஆம் ஆண்டில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம். கே. நாராயணன் 800க்கும் மேற்பட்ட பயங்கரவாத செயல்கள் நம் நாட்டில் நடைமுறையில் உள்ளன என்று கூறியுள்ளார்.[3]

இந்தியாவில் பயங்கரவாதம் பெரும்பாலும் பாக்கிஸ்தானின் நிதியுதவியால்தான் என்று குற்றம் சாற்றப்பட்டுள்ளது. இந்தியாவில் பெரும்பாலான பயங்கரவாத செயல்கள் நடந்த பின்னர், பல பத்திரிகையாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் பாக்கிஸ்தானின் உளவு நிறுவனத்திற்கு அதில் பங்கு உண்டு என்று கூறுகின்றனர். சமீபத்தில், அமெரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் ஆப்கானிஸ்தானில் நடக்கும் பயங்கரவாத செயல்களுக்கு பாக்கிஸ்தானைச் குற்றம் சாட்டியது.

Remove ads

மேற்கு இந்தியா

மகாராட்டிரம்

மும்பை

பெரும்பாலான பயங்கரவாத அமைப்புகள் குறிப்பாக, பாக்கிஸ்தானின் பிரிவினைவாத சக்திகளின் முதன்மையான இலக்கு மும்பையாக உள்ளது. ஜூலை 2006 ல் உள்ளூர் ரயில்களில் குண்டு வெடிப்பு, 26 நவம்பர் 2008 அன்றின் மிக சமீபத்திய மற்றும் முன்னோடியில்லாத தாக்குதல்கள் (தெற்கு மும்பையில் இரண்டு பிரதம விடுதிகள், ஒரு மைல்கல் ரயில் நிலையம், மற்றும் ஒரு யூத சபாத் வீடு, ஆகியவற்றை தாக்கி முற்றுகையிட்டனர்) முதலிய தொடர் தாக்குதல்கள் கடந்த சில ஆண்டுகளில் நிகழ்ந்தன.

மும்பையில் பயங்கரவாத தாக்குதல்கள்
  1. 12 மார்ச் 1993 - 13 வெடி குண்டுகள் கடுமையாக வெடித்ததில் 257 பேர் பலியாகினர்
  2. 6 டிசம்பர் 2002 - கட்கோபர் எனும் இடத்தில் பேருந்தில் வெடிகுண்டு வெடித்ததில் 2 பேர் பலியாகினர்
  3. 27 ஜனவரி 2003 - வைல் பார்லேவில் ஒரு மிதிவண்டியில் வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் கொல்லப்பட்டார் .
  4. 14 மார்ச் 2003 - முலுண்டில் ரயில் குண்டு வெடிப்பில் 10 பேர் பலியாகினர்,
  5. 28 ஜூலை 2003 - காட்கோபரில் பேருந்தில் வெடிகுண்டு வெடித்ததில் 4 பேர் பலியாகினர் .
  6. 25 ஆகஸ்ட் 2003 - இந்தியா மற்றும் ஜாவேரி பஜார் நுழைவாயில் அருகே காரில் இரண்டு வெடிகுண்டு வெடித்ததில் 50 பேர் கொல்லப்பட்டனர்
  7. 11 ஜூலை 2006 - தொடர் 209 கொலை, ரயில்களில் ஏழு குண்டுகளில் போகவில்லை
  8. 26 நவம்பர் 2008 முதல் 29 2008 நவம்பர் வரை - ஒருங்கிணைந்து நிகழ்த்தப்பட்ட தொடர் தாக்குதலில், குறைந்தது 172 பேர் கொல்லப்பட்டனர்.
  9. 13 ஜூலை 2011 - வெவ்வேறு இடங்களில் மூன்று ஒருங்கிணைந்த குண்டு வெடிப்புகள்; 26 பேர் கொல்லப்பட்டனர்

புனே

மகாராஷ்டிர புறநகரப் பகுதிகளில் பயங்கரவாத தாக்குதல்கள்: •13 பிப்ரவரி 2010 - புனே ஜெர்மன் பேக்கரியில் ஒரு குண்டு வெடிப்பு ; பதினான்கு பேர் கொல்லப்பட்டனர்; குறைந்தது 60 திற்கும் மேற்பட்டோர் காயம். •1 ஆகஸ்ட் 2012 - புனே ஜேஎம் சாலையில் பல்வேறு இடங்களில் நான்கு குண்டு வெடிப்பு ; 1 நபர் காயம்

Remove ads

ஜம்மு &காஷ்மீர்

ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆயுத கிளர்ச்சியால் இன்றைய தேதி வரை பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

வடக்கு மற்றும் வடமேற்கு இந்தியா

பீகார்

சிபிஐ-எம்எல் (CPI-ML), மக்கள் போர், மற்றும் எம்சிசி (MCC) போன்ற சில கிளர்ச்சி குழுக்கள், அடிக்கடி உள்ளூர் காவற்துறையினர் மற்றும் அரசியல்வாதிகளை தாக்குவது ஒரு பெரும் பிரச்சனையாக உள்ளது. பீகாரில் நிர்வாகத் திறன் குறைபாடு மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள், போராளிகளுக்கு ஏற்படும் அச்சுறுத்தலை அதிகமாக உருவாவதற்கு காரணமாக அமைந்தது. இம் மாநிலம் இந்த குழுக்களால் ஏற்பட்ட பல படுகொலைகளை கண்டுள்ளது. மாநில காவற்துறை விண்டேஜ் 303 துப்பாக்கிகளைக் கொண்டு ஏகே 47 -கள் மற்றும் ஏகே 56 -கள் கொண்ட போராளிகளைச் சமாளிக்க போதிய வசதிகள் இல்லை. தீவிரவாதிகள் காவற்துறையை மறைந்திருந்து கொல்ல நிலக்கண்ணி வெடிகளையும் பயன்படுத்தினர் .

சாதிக் குழுக்கள் இடையே உருவாகும் வேறுபாடே இம்மாநிலத்தில் தீவிரவாத நடவடிக்கைகள் உண்டாக மூல காரணமாய் உள்ளது. சுதந்திரத்திற்கு பிறகு, நில சீர்திருத்தங்கள் மூலம் உயர்சாதி மக்கள் பெரும்பாலும் கையாண்ட நிலங்களில் தாழ்ந்த சாதி மற்றும் ஏழைகளுக்கும் ஒரு பங்கு கொடுத்து, நடைமுறைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். எனினும், மாநிலத்தில் சாதி அடிப்படையிலான பிரிவினை அரசியலின் காரணமாக, நில சீர்திருத்தங்களை ஒழுங்காக செயல்படுத்தப்படவில்லை. இதுவே பிற்படுத்த சாதிகளுக்கு இடையே ஒடுக்கப்பட்ட உணர்வு வளர வழிவகுத்தது.

கம்யூனிச அமைப்புகளான சிபிஐ-எம்எல் (CPI-ML), மக்கள் போர், மற்றும் எம்சிசி (MCC) போன்ற அமைப்புகள் இதை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்டு பிற்படுத்தப்பட்ட சாதி மக்களை, உயர்சாதி மக்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தத் தூண்டிவிட்டனர். இது செல்வந்தர்களின் கையிலுள்ள ஆயுதமாகக் கருதப்படுகிறது. அவர்கள், உயர்சாதி மக்களை கொன்று, நிர்ப்பந்தப்படுத்தி நிலங்களை ஆக்கிரமிக்க தொடங்கினர். உயர் சாதி மக்கள் நக்சலைட்டுகளை எதிர்கொள்ள தங்களுக்கென ’ரன்வீர் சேனா’ எனும் சொந்த ராணுவப்படையை உருவாகினர். இம்மாநிலம் படுகொலைகளின் மூலம் அவர்களது மேலாதிக்கத்தை நிரூபிக்க முயற்சிசெய்த காலங்களை கண்டுள்ளது. எந்த நடவடிக்கையும் எடுக்க வழி இல்லை என்பதால் காவற்துறை, இந்த கொலைகளுக்கு ஒரு ஊமை சாட்சியாக இருந்தது.

ரன்வீர் சேனாவின் தலைவர்கள் கைது செய்யப்பட்டதால் வலுவிழந்தது. மற்ற குழுக்கள் இன்னும் தீவிரமாக உள்ளன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக, டெல்லி மற்றும் மும்பை காவல்துறையினரால் இவர்கள் கைதுசெய்யப்படுவது, தீவிரவாதிகள் இந்த மாநிலம் முழுவதும் இவர்களது வலையமைப்பைப் பரப்பி இருப்பதை சுட்டிக்காட்டுகிறது. இதிலிருந்து, நேபாளத்திலிருந்து வரும் சிறு ஆயுதங்கள், கள்ள நோட்டு மற்றும் போதை மருந்து விநியோகஸ்தர்கள் மற்றும் தீவிரவாதிகள் நேபாள மற்றும் வங்காளதேசம் வழியாக ஊடுருவுவதற்கும் ஒரு வழியாக பீகார் இருக்கலாம் என்ற சந்தேகம் வலுக்கிறது.

சமீப ஆண்டுகளில், பல்வேறு சாதி அமைப்புகளின் தாக்குதல்கள் அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் தடுக்கப்பட்டது. .[4][5]

Remove ads

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads