இந்திய-இலங்கை ஒப்பந்தம், 1987

From Wikipedia, the free encyclopedia

Remove ads

இந்திய இலங்கை ஒப்பந்தம், 1987 அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இலங்கை ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தனாக்கும் இடையே யூலை 29, 1987ம் ஆண்டு ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்கும் நோக்குடன் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் ஆகும்.[1] இந்த ஒப்பந்தம் இலங்கை ஒரு பல்லின, பல்மத, பல்மொழி நாடாக ஏற்று வடகிழக்கை தமிழ் முஸ்லீம் மக்களின் இணைந்த தாயகப்பிரதேசமாக ஏற்று தமிழ் மொழியை அரச மொழியாக ஏற்று மாகாண சபைகளுடான அதிகாரப் பரவலாக்கத்தை முன்வைக்கின்றது.[2] இவ்வொப்பந்தம் மூலம் ஏற்படுத்தப்பட்ட வடகிழக்கு மாகாண சபை பின்னர் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால் செயல்படாமல் போனது.

விரைவான உண்மைகள்
Remove ads

ஒப்பந்தம்

இந்தியக் குடியரசின் பிரதம மந்திரி திரு.ராஜிவ்காந்தியும், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி திரு.ஜே,ஆர் ஜயவர்தனவும் 1987ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் திகதி கொழும்பில் சந்தித்தார்கள். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பாரம்பரிய நட்புறவை ஆதரித்துத் தீவிரப்படுத்தி மேலும் வலுப்படுத்துவதின் முக்கியத்துவத்தை கருத்திற் கொண்டும், இலங்கையின் இனப்பிரச்சினைக்கும் அதன் விளைவான வன்செயல்களுக்கும் தீர்வு காண வேண்டியதன் தவிர்க்க முடியாத அவசியத்தையும் இலங்கையிலுள்ள சகல சமூகங்களையும் சேர்ந்த மக்களின் பாதுகாப்பு, நழன்புரி நடவடிக்கைகள், சுபீட்சம் ஆகியவற்றை உணர்ந்தும்,

இந்த நோக்கங்களை நிறைவேற்றுவதற்காகப் பின்வரும் உடன்படிக்கையை இந்தத் தினத்தில் ஏற்படுத்திக் கொண்டார்கள்.
1. இலங்கையின் ஐக்கியம், இறைமை, பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றைப் பேணிக்காக்க விரும்பி,

2. இலங்கை சிங்களவர், தமிழர், முஸ்லீம்கள், பறங்கியர் ஆகியோரைக் கொண்ட பல்லின, பன்மொழி சமூகங்கள் வாழும் நாடு என்பதை உணர்ந்து,

3. மிகக் கவனமாகப் பேணிக் காப்பாற்ற வேண்டிய தனித்தனிக் கலாசாரம்,மொழி அடையாளங்களை ஒவ்வொரு இனமும் கொண்டுள்ளதென்பதையும்,

4. வடக்கு, கிழக்கு மாகாணங்கள் அங்கு ஏனைய இனக்குழுக்களுடன் எல்லாக் காலத்திலும் ஒன்றாக வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுப்பூர்வமான வசிப்பிடங்கள் என்பதையும் அங்கீகரித்து,

5. இலங்கையின் ஐக்கியம், இறைமை, பிரதேச ஒருமைப்பாடு ஆகிய அம்சங்களைப் பலப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த சகல பிரஜைகளும் சமத்துவமாகவும், பாதுகாப்பாகவும், ஒற்றுமையாகவும் சுபீட்சத்துடன் தங்கள் அபிலாசைகளை நிறைவேற்றி வாழும் பல இன, பல மொழி பேசும் பல மதங்களைக் கடைப்பிடிக்கும் தன்மையைப் பேணி,

பின்வரும் உடன்பாட்டிற்குவருகிறோம்:

1. இலங்கை அரசாங்கம் அருகருகேயுள்ள மாகாணங்களை ஒரு நிர்வாக அலகாகச் சேர்த்துக் கொள்ளக்கருதும் கீழ் விவரிக்கப்பட்டவாறு வடக்கு, கிழக்கு என்று அவற்றைப் பிரிக்கும் பட்சத்தில் சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்துவது என்றும்,

2. மாகாண சபைக்கான தேர்தல் நடத்தப்படும் திகதியில் இருந்து 3இல் தெரிவிக்கப்பட்டவாறு சர்வஜன வாக்குரிமை நடத்துவது திகதி வரையான காலப்பகுதி இடைக்காலப்பகுதியென்று கருதப்படும். 8ம் வாசகத்திற்கு அமைய சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும் வரை தற்போதுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ஒரு மாகாண சபையை உள்ளடக்கிய ஒரு நிர்வாக அலகாக இருக்கும். இத்தகைய அலகில் ஓர் ஆளுநர், ஒரு முத்லமைச்சர், ஓர் அமைச்சரவை ஆகியன செயற்படும்.

Remove ads

வெளி இணைப்புகள்

மேற்சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads