இந்திய-சீன எல்லைப் பிணக்குகள்

From Wikipedia, the free encyclopedia

இந்திய-சீன எல்லைப் பிணக்குகள்
Remove ads


இந்திய-சீன எல்லைப் பிணக்குகள் (Indo china border disputes) 1947ஆண்டு முதல் இந்தியா மற்றும் சீனா நாடுகளின் எல்லைப் பகுதிகளின் உரிமைகள் குறித்து பிணக்குகள் ஏற்பட்டது. குறிப்பாக இந்தியாவின் லடாக்கின் வடமேற்கே இமயமலையில் அமைந்த அக்சாய் சின் பிரதேச உரிமை குறித்து இரு நாடுகளுக்கும் 1962 முதல் பிணக்குகள் ஏற்பட்டது. பிரித்தானிய இந்தியா- திபெத் இராச்சியத்தினர் 1914-இல் செய்து கொண்ட சிம்லா உடன்படிக்கைப் படி, இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசம் - திபெத் எல்லைக்கோட்டை வரையறுக்கும் மெக்மோகன் கோட்டை சீனா இதுவரை ஏற்கவில்லை. மேலும் இந்த உடன்படிக்கையின் போது, சீனாவின் கருத்தை கோரப்படவில்லை எனக்காரணம் காட்டி, சீனா, அருணாச்சலப் பிரதேசத்தை தனதென உரிமை கோரி, இந்தியாவுடன் பிணக்கு கொண்டுள்ளது.[1]

Thumb
இந்திய-சீனா எல்லைப் பிணக்குகள் கொண்ட பகுதிகள் கொண்ட வரைபடம்
Thumb
இந்திய சீன போரின் போது அக்சாய் சின் பகுதியில் இந்திய சீன எல்லையையும், மகார்த்னே-மெக்டொனால்ட் (Macartney–MacDonald Line) எல்லையையும் மற்றும் போரின் போது சீனா ஆக்கிரமிப்பு செய்த இடத்தையும் காட்டும் வரைபடம்

1962-இல் நடைபெற்ற இந்திய சீனப் போர் குறிப்பாக லடாக் மற்றும் அருணாச்சலப் பிரதேசப் பகுதிகளில் கடுமையாக நடைபெற்றது. எல்லைப் பிணக்கை முடிவுக்கு கொண்டு வருவதற்கு 1996-இல் இந்தியா-சீனா இடையே உள்ள உண்மையான எல்லைக்கட்டுப்பாடு கோட்டை ஏற்றது. 2006-இல் இந்தியாவிற்கான சீன தூதுவர், அருணாச்சலப் பிரதேசம் சீனாவின் பகுதி என உரிமை கொண்டாடினார்.[2][3]

அந்த நேரத்தில் இரு நாட்டுப் படைகளும், சிக்கிமின் வடக்கெல்லையில் சில கிலோ மீட்டர் பரப்பளவை தங்களது என உரிமை கோரினர்.[4] 2009-இல் இந்திய-சீன எல்லை நெடுகிலும் இந்தியா கூடுதல் படைப்பிரிவுகளை நிறுத்தப் போவதாக அறிவித்தது.[5]இந்திய-சீனா எல்லைப் பிணக்குகளை தீர்க்க, 2014-இல் இந்தியா அறிவித்த ஒரு தேசம் என்ற கொள்கையை சீனா ஏற்றுக் கொள்ளவேண்டும் என அறிவித்தது.[6][7]


Thumb
இந்திய-சீன எல்லைப் பிணக்குள்ள லடாக்கின் அக்சாய் சின் பிர்தேசத்தை காட்டும் வரைபடம்
Thumb
இந்திய-சீனாவின் வடக்கெல்லையைக் குறிக்கும், மெக்மோகன் கோடு மற்றும் எல்லைப் பிணக்குகள் கொண்ட பகுதி (சிவப்பு நிறம்)
Remove ads

எல்லைப் பிணக்குகள் மற்றும் பேச்சுவார்தைகள்

1947–1962

1950-இல் சீனா தனது வடமேற்கு பகுதியான சிஞ்சியாங் பகுதியிலிருந்து மேற்கு திபெத்திற்கு 1200 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலை அமைத்தது. அதில் இந்தியா தனது பகுதி எனக்கோரும் அக்சாய் சின் வழியாக 179 கிலோ மீட்டர் சாலை சீனா அமைத்ததை, 1957-இல் தான் இந்தியாவிற்கு தெரிந்தது. மேலும் சீனா 1958-இல் தனது வரைபடத்தில் அக்சாய் சின் சாலை குறித்த விவரம் வெளியிட்டது.[8][9].[10]

இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு அக்சாய் சின் பகுதி, பல நூற்றாண்டுகளாக லடாக்கின் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளது என அறிவித்தார். எனவே அக்சாய் சின் எல்லைப் பிணக்கு குறித்து எவரிடமும் பேச்சு வார்த்தை நடத்தப் போவதில்லை என அறிவித்தார்.[9]

சீனப் பிரதமர் சோ என்லாய் மேற்கு எல்லையை ஒருபோதும் பிரிக்கப்படவில்லை என்றும், சீனப் பகுதியான அக்சாய் சின்னை விட்டு வெளியேறிய மாகார்ட்னி-மெக்டொனால்ட் கோடு, சீன அரசாங்கத்திற்கு இதுவரை முன்மொழியப்பட்ட ஒரே வரி அக்சாய் சின் என்றும் வாதிட்டார்.[9]

1960-இல் இந்திய-சீனா எல்லைப் பிணக்குகளை தீர்க்கும் வகையில, இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேருவுக்கும், சீன பிரதமர் சூ என்லாய்க்கும் இடையே ஒரு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.[11] மேற்கு எல்லைப் பகுதிகளில் (லடாக்) பெரிய அளவிலான நீர்நிலைகளை ஆதாரமாகக் கொண்டு எல்லைகளை வரையறுப்பதற்கு இந்திய - சீனா நாடுகள் இணங்கவில்லை.[11]:96 The Chinese statements with respect to their border claims often misrepresented the cited sources.[12]


1967 நாது லா மோதல்கள்

முன்னர் 11 செப்டம்பர் 1967-இல் இந்தியாவின் பாதுகாப்பில் இருந்த சிக்கிம் நாட்டின் வடக்கில் திபெத்தை ஒட்டியுள்ள நாதூ லா கணவாய் பகுதியை கைப்பற்ற முயன்ற சீனத் துருப்புகளுக்கும், இந்தியத் துருப்புகளுக்கும் கைகலப்பு ஏற்பட்டது.[13][14]இந்த மோதல்களில் இந்திய இராணுவம், சீனர்களை பின்னுக்குத் தள்ளி, முன்னேற விடாமல் செய்தது.[15]

1967 சோ லா மோதல்

இந்திய ராணுவத்திற்கும், சீன ராணுவத்திற்கும் இடையே 1 அக்டோபர் 1967 ஆம் ஆண்டில், இந்தியாவின் பாதுகாப்பில் இருந்த சிக்கிம் இராச்சியத்தின் சோ லா பகுதியில் மூண்ட சிறு போரில், இந்தியத் தரப்பில் 83 பேர் மரணமடைந்தனர்; 163 பேர் படுகாயமடைந்தனர். சீன தரப்பில் 300 பேர் மரணமடைந்தனர்; 450 பேர் நாதூ லாவிலும், 40 பேர் சோ லாவிலும் படுகாயமடைந்தனர்.[16] இச்சம்பவத்தின் முடிவில் சீனாவின் மக்கள் விடுதலை ராணுவம் சிக்கிம் இராச்சியத்திலிருந்து பின்வாங்கியது

1968–2017

Thumb
இந்திய-சீன எல்லைப் பிணக்குகள் குறிதது சிஐஏ வெளியிட்ட நூல், 1963

1975-இல் அருணாச்சலப் பிரதேச எல்லையில் ரோந்துப் பணி மேற்கொண்டிருந்த 4 இந்தியத் துருப்புகளை துலாங் எனுமிடத்தில் சீனத்துருப்புகளால் கொல்லப்பட்டனர்.[17][18][19]

1996-இல் உண்மையான கட்டுப்பாட்டுக் கோடுக்கு 2 கிலோமீட்டருக்கு அருகில் துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டுகளை வீசக்கூடாது இரு நாடுகள் இடையே ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது.

2013-இல் சீனத்துருப்புகள் உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டைத் 10 கிலோ மீட்டர் வரை தான்டி, இந்தியப் பகுதியில் அமைந்த லடாக்கின் தவுலத் பெக் ஓல்டியில் ஊடுருவி முகாம்கள் அமைத்தனர். இதனை இந்தியா எதிர்த்த போது, சீனா அரசினர் அவ்வாறு தாங்கள் எல்லை மீறவில்லை என வாதிட்டனர்.[20][21] [22] செப்டம்பர் 2014-இல் இந்திய-சீனா எல்லையில், டெம்சோக் எனுமிடத்தில், இந்தியா சாலை அமைக்கையில், சீன துருப்புகளின் துணையுடன் சீனர்கள் எதிர்த்தனர்.[23] The Indian army claimed that the Chinese military had set up a camp 3 km inside territory claimed by India.[24][25]

செப்டம்பர் 2015-இல் லடாக் பகுதியின் கிழக்கே சீனத்துருப்புகள், பிரச்சனைக்குரிய இடத்தில் அமைத்திருந்த காவல் கோபுரத்தை, இந்தியத் துருப்புகள தகர்த்தனர்.[26]

2017 டோக்லாம் இராணுவ மோதல்கள்

16 சூன் 2017-இல் இந்தியாவின் பாதுகாப்பில் உள்ள பூட்டான் நாட்டின் மேற்கு எல்லைப் பகுதியான டோக்லாமில் சாலை அமைக்க வந்த சீனத்துருப்புகளை, இந்தியத்துருப்புகள் நேருக்கு நேர் தள்ளுமுள்ளு செய்து, அத்துமீறிய சீனத்துருப்புகளை டோக்லாமிலிருந்து வெளியேற்றினர்.[27][28]

2020 மோதல்கள்

இந்தியாவின் லடாக்கில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோடுக்கு அருகில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில், 16 சூன் 2020 அன்று, திங்கள் இரவு, சீனத்துருப்புகள் இந்திய எல்லையை ஊடுருவியதை தடுக்க முயன்ற இந்தியத்துருப்புகள் மீது, சீனத்துருப்புகள் கற்கள், ஆணிகள் கொண்ட தடிகளால் தாக்கியதில் 20 இந்தியத் துருப்புகளும், 43 சீனத்துருப்புகள் காயமடைந்தனர் அல்லது இறந்தனர்.[29][30][31]

2022 பூம் லா கணவாய் மோதல்

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

ஆதார நூற்பட்டியல்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads