இந்திய அஞ்சல் கட்டண வங்கி

From Wikipedia, the free encyclopedia

Remove ads

இந்தியா அஞ்சல் கட்டண வங்கி (India Post Payments Bank) என்பது இந்திய அரசின் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் அஞ்சல் துறையின் உரிமையின் கீழ் செயல்படும் இந்தியத் தபால் துறையின் வணிக பிரிவாகும். 2018-ல் துவங்கப்பட்ட இந்த வங்கி சேவையில் சனவரி 2022 நிலவரப்படி 6 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

விரைவான உண்மைகள் வகை, சேவை வழங்கும் பகுதி ...
Remove ads

வரலாறு

Thumb
2017ஆம் ஆண்டு இந்திய அஞ்சல் கட்டண வங்கியின் தொடக்கத்தின் போது வெளியிடப்பட்ட தபால்தலை.

19 ஆகத்து 2015 அன்று, இந்திய அஞ்சல் துறை இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து பணம் செலுத்தும் வங்கியை நடத்துவதற்கான உரிமத்தைப் பெற்றது. 17 ஆகத்து 2016 அன்று, பணம் செலுத்தும் வங்கியை அமைப்பதற்காக பொது வரையறுக்கப்பட்ட அரசு நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டது.[1] இந்திய அஞ்சல் கட்டண வங்கி தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் இந்திய அஞ்சல் துறையுடன் செயல்படுகிறது.[1][2]

இந்திய அஞ்சல் கட்டண வங்கியின் முன்னோட்டத் திட்டம் 30 சனவரி 2017 அன்று ராய்பூர் மற்றும் ராஞ்சியில் தொடங்கப்பட்டது.[1] வங்கியை அமைப்பதற்காக ஆகத்து 2018-ல், மத்திய அமைச்சரவை 1,435 கோடி (ஐஅ$170 மில்லியன்) ரூபாய்க்கு ஒப்புதல் அளித்தது.[3] முதல் கட்டமாக 650 கிளைகள் மற்றும் 3,250 தபால் நிலையங்களை வங்கியின் அணுகல் மையமாக 1 செப்டம்பர் 2018 அன்று திறக்கப்பட்டது.[4][5] முதற்கட்டமாகப் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தபால்காரர்கள் இச்சேவைக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.[6][7] திசம்பர் 2020க்குள் சுமார் 4 கோடி வாடிக்கையாளர்களை வங்கி பெற்றுள்ளது.[8] சனவரி 2022-ல், இந்தியா அஞ்சல் கட்டண வங்கி 8 கோடி வாடிக்கையாளர்களைக் கடந்துள்ளது.[9]

Remove ads

சேவைகள்

Thumb
மெக்சனாவில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் வங்கியின் கிளை

இந்திய அஞ்சல் கட்டண வங்கியானது இந்தியாவின் 155,015 தபால் நிலையங்களையும் வங்கியின் அணுகல் மையமாகவும், 3 லட்சம் தபால்காரர்கள் மற்றும் கிராம தபால் ஊழியர்களை வங்கி சேவைகளை வழங்கவும் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.[1][2]

Thumb
Thumb
இந்தியப் பிரதமர், நரேந்திர மோதி, 1 செப்டம்பர் 2018 அன்று புது தில்லியில், இந்தியா அஞ்சல் கட்டண வங்கியின் தொடக்க விழாவில், தகவல் தொடர்புத் துறை இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா, செயலாளர் (அஞ்சல்), அனந்த நாராயண் நந்தா மற்றும் இந்திய அஞ்சல் கட்டண வங்கி செயல் அலுவலர் மற்றும் நிர்வாக இயக்குநர் சுரேஷ் சேத்தி

இந்திய அஞ்சல் கட்டண வங்கி சேமிப்புக் கணக்குகள், பணப் பரிமாற்றம் மற்றும் மூன்றாம் தரப்பினர் மூலம் காப்பீடுகள், இரசீது மற்றும் பயன்பாட்டுக் கொடுப்பனவுகளை வழங்குகிறது.[1][10][11]

இந்த வங்கி கீழே குறிப்பிட்ட அம்சங்களையும் வழங்குகிறது:

இந்திய அஞ்சல் கட்டண வங்கியானது சுமார் 17 கோடி அஞ்சல் சேமிப்பு வங்கிக் கணக்குகளை தன் கணக்குகளுடன் இணைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.[12]

Remove ads

மேலும் பார்க்கவும்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads