இந்திய அரிசி ஆராய்ச்சி நிறுவனம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்திய அரிசி ஆராய்ச்சி நிறுவனம் (Indian Institute of Rice Research) (முன்பு அரிசி ஆராய்ச்சி இயக்குநரகம்) என்பது அரிசி ஆராய்ச்சி நிறுவனமாகும். இது தெலங்காணாவின் ஐதராபாத்து அருகே ராஜேந்திரநகரில் அமைந்துள்ளது.
Remove ads
விளக்கம்
1965ஆம் ஆண்டு இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் அகில இந்திய ஒருங்கிணைந்த அரிசி மேம்பாட்டுத் திட்டத்தினை ஐதராபாத்தில் நிறுவியது. நாடு முழுவதும் பயிர் பெருக்கம் பயிர் மேம்பாட்டில் மரபணு மற்றும் தொழில்நுட்பச் சோதனைகள் இந்தியாவின் பல இடங்களில் மேற்கொள்ளவும் ஒருங்கிணைக்கவும் நிறுவப்பட்டது. இந்தத் திட்டம் 1975ஆம் ஆண்டில் அரிசி ஆராய்ச்சி இயக்குநரகமாகத் தரம் உயர்த்தப்பட்டது. அரிசி ஆராய்ச்சி இயக்குநகரம் கூடுதல் ஆராய்ச்சி மையங்களுடன் அகில இந்திய ஒருங்கிணைந்த அரிசி மேம்பாட்டுத் திட்டத்தைத் (AICRIP) தொடர்கிறது. இது மாநில வேளாண் பல்கலைக்கழகங்கள், மாநில வேளாண்மைத் துறை மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி மன்ற பிற ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைந்த 47 மையங்களில் கூட்டு நிதியுடன் செயலில் உள்ளது. பல இடங்களில், சோதனை திட்டத்தில் 50க்கும் மேற்பட்ட தன்னார்வ மையங்கள் பங்கேற்றுள்ளன. ஒட்டுமொத்த அரிசி உற்பத்தி முன்னணியில் இதன் குறிப்பிடத்தக்க பங்களிப்புக்காக இந்திய அரிசி ஆராய்ச்சி நிறுவனம் தனது 50வது ஆண்டு விழாவினை 2015இல் கொண்டாடியது. இது நாட்டிற்கு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்துள்ளது.
இந்திய அரிசி ஆராய்ச்சி நிறுவனம் முக்கியமாக நெல் வளர்ப்பு சுற்றுச்சூழலுக்குப் பொருத்தமான மாறுபட்ட மற்றும் மேலாண்மை தொழில்நுட்பங்களை அடையாளம் காணத் தேசிய அளவில் பல இருப்பிட சோதனைகளை ஒருங்கிணைக்கிறது. இது உற்பத்தி, உற்பத்தித்திறன் மற்றும் இலாபத்தை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தலை நோக்கமாகக் கொண்டது. தேசிய மற்றும் பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் தொடர்பான ஆராய்ச்சி வலையமைப்பினை துவக்கி ஒருங்கிணைக்கிறது. ஆராய்ச்சி பொருள் மற்றும் தகவல்களைப் பரிமாறிக்கொள்வதற்கான முக்கிய மையமாக இந்நிறுவனம் செயல்படுகிறது.
தகவல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் இந்திய அரிசி ஆராய்ச்சி நிறுவனம் தொழில்நுட்ப பரிமாற்ற விகிதத்தினைத் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில், இந்நிறுவனம் அரிசி அறிவு மேலாண்மை தலைவாசலை உருவாக்கியுள்ளது. இது அரிசி அறிவை சமீபத்திய தகவல் தொழில்நுட்பம் மூலம் பயனர்களுக்குப் பகிர்ந்து கொள்வதில் அரிசி துறைக்குத் தகவல் வழியாகச் செயல்படுகிறது. கூட்டு ஆராய்ச்சி திட்டத்திற்காகத் தேசிய, பன்னாட்டு மற்றும் தனியார் நிறுவனங்களுடன் தொடர்ச்சியான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்நிறுவனம் ஆலோசனையும் சேவைகளையும் வழங்கி ஒப்பந்த அடிப்படையில் ஆராய்ச்சியினையும் மேற்கொள்கிறது.[1]
Remove ads
வரலாறு
இந்திய அரிசி ஆராய்ச்சி நிறுவனம் 1965 ஆம் ஆண்டில் அகில இந்திய ஒருங்கிணைந்த அரிசி மேம்பாட்டுத் திட்டமாக (ஏ.ஐ.சி.ஆர்.ஐ.பி) நிறுவப்பட்டது.
ஆய்வுப் பிரிவுகள்
பயிர் மேம்பாடு- மரபியல் மற்றும் பயிர்ப் பெருக்கம், கலப்பின அரிசி, உயிரிதொழில்நுட்ப புள்ளிவிவரம் மற்றும் தேசிய பேராசிரியர் திட்டம்
- மகசூல் மற்றும் அசாதரண சூழல் சகிப்புத்தன்மையின் மரபணு மேம்பாடு (GEY)
- உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி நோக்கத்திற்கான தரத்தின் மரபணு மேம்பாடு (GEQ)
- அரிசி மேம்பாட்டிற்கான உயிரிதொழில்நுட்ப கருவிகளின் பயன்பாடு (ஏபிஆர்)
பயிர் உற்பத்தி-வேளாண், தாவர உடலியல், மண் அறிவியல், பொறியியல் மற்றும் கணினி பயன்பாடுகள்
- வள மற்றும் உள்ளீட்டு பயன்பாட்டு செயல்திறனை மேம்படுத்துதல் (RUE)
- அரிசி உற்பத்தித அமைப்பினை நிலைநிறுத்துதல் (எஸ்.எஸ்.பி)
- காலநிலை மாற்றத்திற்கான பயிர்நிலைப்பாட்டினை மதிப்பீடு செய்தல் மற்றும் நிர்வகித்தல் (சி.சி.ஆர்)
பயிர் பாதுகாப்பு - பூச்சியியல் மற்றும் நோயியல்
- பூச்சிகள் மற்றும் அதன் மேலாண்மை (HRI)
- நோய்க்கிருமிகள் மற்றும் அதன் மேலாண்மை (HRP)
- ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை (ஐபிஎம்)
தொழில்நுட்ப பரிமாற்றம் - தொடர்பு மற்றும் பயிற்சி மையம் (சி.டி.சி) மற்றும் பொருளாதாரம்
- பயிற்சி, தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் தாக்க பகுப்பாய்வு (TTI)
திறன்பேசி பயன்பாடுகள்
- கைப்பேசி அரிசி ஐ.பி.எம்
- அவிசுகர் - கைப்பேசி புகைப்படக் கருவியினை இயக்குவதன் மூலம் நெற்பயின்ரினைத் தாக்கும் பூச்சியைக் கண்டறிய செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான திறன்பேசி பயன்பாடு
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads