பயிர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வேளாண்மைத் துறையில், பயிர் என்பது, உணவு, கால்நடைத் தீவனம் ஆகியவற்றைத் தரும் தாவரத்தைக் குறிக்கும். குறிப்பாக, இது வாழ்வதற்காகவோ அல்லது ஈட்ட (இலாப) நோக்கத்துக்காகவோ பேரளவில் பயிரிடப்படும் தாவரத்தையே குறிக்கும். சிலவேளைகளில் இது வளர்ப்பு விலங்கான கால்நடையையும் பூஞ்சை, நுண்ணுயிரிகளையும் குறிப்பதற்காகப் பயன்படுதலும் உண்டு.[1] நெல், கோதுமை, சோளம் போன்றவை உணவுக்காக பயிரிடப்படும் தாவரங்கள் ஆகும். பருத்திப் பயிர் ஆடைத் தொழிலுக்கு மூலப் பொருளான பஞ்சை விளைவிக்கப் பயிரிடப்படுகின்றது. மக்களின் உடல்நலத்துக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய புகையிலை போன்ற பயிர்களும் அவற்றிலிருந்து கிடைக்கக்கூடிய கவர்ச்சிகரமான வருமானத்துக்காகப் பயிரிடப்பட்டு வருகின்றன.
பெரும்பாலான பயிர்கள் நிலத்திலோ நீரிலோ வேளாண்மை செய்யப்படுகின்றன. பயிர் (crop) காளானையும் பாசிவகையையும் உள்ளடக்கும்படி விரிவாக்கப்பட்ட சொல்லாகும். மிகப் பொதுவாக பயிர் மாந்தருடன் பயின்றுவரும் வளர்ப்பினங்கள் அனைத்தையும் குறிப்பதாகும்.
பெரும்பாலான பயிர்கள் மாந்தர் உணவாகவோ கால்நடையின் தீவனமாகவோ அறுவடை செய்யப்படுகின்றன. இதே நோக்கங்களுக்காக சில பயிர்கள் காட்டில் இருந்து செறிவாகத் திரட்டப்படலும் உண்டு. (எ.கா. கின்செங்.)
முதன்மை வாய்ந்த உணவல்லாத பயிர்களாக தோட்ட வளர்ப்புப் பயிர்களும் பூவளர்ப்புப் பயிர்களும் தொழிலகஞ் சார்ந்த பயிர்களும் அமைகின்றன. தோட்ட வளர்ப்புப் பயிர்களில் பழமரங்களும் அடங்கும். பூவளர்ப்புப் பயிர்களில் அழகுப் படுகைத் தாவரங்கள், வீட்டுத் தாவரங்கள், பூந்தோட்ட, குட வளர்ப்புத் தாவரங்கள், பூத்தொடுக்கும் இலைத் தாவரங்கள் ஆகியன அடங்கும். தொழிலகஞ் சார்ந்த பயிர்கள் உடைக்காகவும் நாரிழைக்காகவும் உயிர் எரிபொருளுக்காகவும் மூலிகைக்காகவும் பயிரிடப்படுகின்றன.
Remove ads
வரலாறு
புதிய கற்காலப் பயிர்கள்
புதிய கற்கால முதன்மை வீட்டினமாக்கப் பயிர்களாக எட்டு தாவர இனங்கள் அமைந்தன. இவை முழுப் புத்தூழிகாலத்தில் முந்துபானைப் புதுக்கற்காலம் அ-பிரிவு, முந்துபானைப் புதுக்கற்காலம் ஆ-பிரிவு குமுகாயங்களில் தென்மேற்கு ஆசியாவின் செம்பிறைப் பகுதியில் வீட்டினமாக்கப்பட்டன. இவை நடுவண் கிழக்குப் பகுதி, வட ஆப்பிரிக்கா, இந்தியா, பாரசீகம், ஐரோப்பா ஆகிய பகுதிகளில் முறையான வேளாண்மை உருவாக அடிப்படையாக அமைந்தன]. இந்த எட்டில் ஆளி, மூன்று கூலங்கள், நான்கு பருப்புகள் ஆகியன அடங்கும். உலகிலேயே இவை தாம் முதன்முதலில் வீட்டினமாக்கப் பயிர்கள் ஆகும்...[2] புல்லரிசி(Secale cereale) பழைய கற்கால முடிவில் தெல் அபு குரேய்ரா பகுதியில் மிக முந்திய காலத்தில் வீட்டினமாக்கப்படடிருந்தாலும்,[3] இது தென்மேற்கு ஆசியாவில் புதிய கற்காலத்தில் அருகியே விளைவிக்கப்பட்டது. இது வட ஐரோப்பாவில் வேளாண்மை பரவிய பிறகே, அதாவது பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரே பரவலாக வழக்கில் வந்தது.[4]
Remove ads
பயிர்ப் பட்டியல்
கூலங்கள்
- மாக்கோதுமை (Triticum dicoccum, (T. dicoccoides) எனும் காட்டுவகையில் இருந்து தோன்றியது.
- ஒருவிதைக் கோதுமை (Triticum monococcum, descended from the wild T. boeoticum)
- காடைக்கண்ணி (Hordeum vulgare/sativum, descended from the wild H. spontaneum)
பருப்புகள்
- பயறு (Lens culinaris) அல்லது மைசூர்ப் பருப்பு
- பட்டாணி (Pisum sativum)
- மூக்குக் கடலை (Cicer arietinum)
- காரக் கீரை (Vicia ervilia)
பிற
- ஆளி (Linum usitatissimum)
Remove ads
உலகின் முதன்மை உணவுப் பயிர்கள்
ஒரு பயிரின் முதன்மை பெரிதும் உலகின் குறிப்பிட்ட வட்டாரத்தைப் பொறுத்ததாகும். உலகளாவிய நிலையில் பின்வரும் பயிர்கள் பேரளவில் மாந்தருக்கு உணவு வழங்குகின்றன ( அடைப்புக் குறிக்குள் 2013 ஆம் ஆண்டில் ஒருநாளைக்கு ஒருத்தருக்கு வழங்கும் கிலோகலோரியளவு தரப்பட்டுள்ளது): அரிசி (541 கி.க), கோதுமை (527 கி.க), கரும்பு இன்னும்பிற இனிப்புப் பயிர்கள் (200 கி.க), மக்காச்சோளம் (கூலம்) (147 கி.க), சோயா அவரை எண்ணெய் (82 கி.க), இன்னும்பிற காய்கறிகள் (74 கி.க), [[உருளைக்கிழங்கு (64 கி.க), பனையெண்னெய் (52 கி.க), கசாவா (37 கி.க), பருப்பு வகைகள் (37 கி.க), சூரிய காந்தி விதை எண்னெய் (35 கி.க), கடுகு எண்ணெய் (34 கி.க), பழங்கள், (31 கி.க), சோளம் (28 கி.க), தினை (27 கி.க), வேர்க்கடலை (25 கி.க), அவரைகள் (23 கி.க), வள்லிக்கிழங்குகள் (22 கி.க), வாழைகள் (21 கி.க), கொட்டை வகைகள் (16 கி.க),சோயா அவரை]] (14 கி.க), பருத்திவிதை எண்ணெய் (13 கி.க), கடலை எண்ணெய் (13 கி.க), சாமை (13 கி.க).[5] பல உலக அளவில் சிறுபயிர்களாக உள்ளவை வட்டார அளவில் மிகவும் முதன்மை வாய்ந்தனவாக அமைகின்றன. காட்டாக ஆப்பிரிக்காவில் ஒரு நாளைக்கு ஒருத்தருக்கு 421 கிலோகலோரிகள் தரும் கிழங்கு வகைகளும் 135 கிலோகலோரிகள் தரும் சோளமும் 90 கிலோகலோரிகள் தரும் தினைகளும் முதன்மை வாய்ந்த பயிர்களாக உள்ளனவாகும்.[5]
விளைச்சல் எடையைப் பொறுத்து, பின்வரும் பயிர்கள் உலக முதன்மைப் பயிர்களாக அமைகின்றன ( எடை, ஆயிரம் பதின்ம டன்களில்):[6]
பயிர் சுழற்சி
பயிர் சுழற்சி (crop rotation) என்பது ஒரே நிலத்தில் வெவ்வேறு பயிர்களை அடுத்தடுத்துப் பயிரிடும் முறையாகும். ஒரே பயிரைப் பயிரிடுவதால் களைச் செடிளின் ஆதிக்கம் அதிகமாகும். உழவு முறைகள் களைச் செடிகள் பரவுதலை இடையூறு செய்து, அவற்றைக் கட்டுப்படுத்த உதவும். இவ்வாறு பயிர் சுழற்சி களைகள் கட்டுப்பாட்டை எளிமையாக்குகிறது.[1] ஒரு குறிப்பிட்ட நிலத்தில் ஒரே வகையான பயிர்களைப் பயிரிடாமல் சுழற்சி முறையில் பயிரிட வேண்டும். இயற்கை வேளாண்மையின் முத்ன்மை கூறுபாடு பயிர் சுழற்சி முறை ஆகும். முதல் பருவத்தில் நெல், அடுத்த பருவத்தில் உளுந்து, அதற்கடுத்து பயறுவகைகள் என மாறி மாறி பயிரிடும் பயிர் சுழற்சி முறையினால் மண்ணின் வளம் கூடுகிறது.
Remove ads
மேற்கோள்கள்
மேலும் படிக்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads