இந்திய எண் முறைமை

From Wikipedia, the free encyclopedia

Remove ads

இந்திய எண் முறைமை (Indian numbering system) என்பது இரண்டு பதின்ம நிலைகளாக எண்களைக் குழுக்களாக்கும் மறை எண் முறைமையை அடிப்படையாகக் கொண்ட இந்தியத் துணைக்கண்டத்தில் (இந்தியா, பாக்கித்தான், வங்காளதேசம், நேப்பாளம் ஆகிய நாடுகள் உள்ளடங்கலாக) பயன்படுத்தப்படும் எண் முறைமை ஆகும். உலகின் ஏனைய பெரும்பாலான இடங்களில் மூன்று பதின்ம நிலைகளாக எண்களைக் குழுக்களாக்கும் முறை பெருமளவிற் பயன்படுத்தப்படுகின்றது. ஆனாலும் தென்னாசிய எண் முறைமையில் பயன்படுத்தப்படும் இலட்சம் (Lakh), கோடி (Crore) முதலிய சொற்கள் இந்திய ஆங்கிலத்திலும் பாக்கித்தானிய ஆங்கிலத்திலும் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன.

எடுத்துக்காட்டாக, இந்தியாவில் 30 மில்லியன் (மூன்று கோடி) உரூபாய் என்பது இந்திய உரூபாய் 30,000,000 என்பதற்குப் பதிலாக 3,00,00,000 அல்லது இந்திய உரூபாய் 3,00,00,000 என்று ஆயிரம், நூறாயிரம், கோடி ஆகிய நிலைகளில் காற்புள்ளிகள் இடப்பட்டு எழுதப்படுகின்றது; ஒரு பில்லியன் (100 கோடி=நூறு கோடி) என்பது 1,00,00,00,000 என்று எழுதப்படுகின்றது. தென்னாசிய எண் முறைமையிற் பெரிய தொகை பெரும்பாலும் நூறாயிரத்திலும் கோடியிலுமே குறிப்பிடப்படும்.

Remove ads

பிரிப்பான்களின் பயன்பாடு

இந்திய எண் முறைமையானது அராபிய எண் முறைமையிலிருந்து வேறுபட்ட முறையில் பிரிப்பான்களைப் பயன்படுத்துகின்றது. முழுவெண் பகுதியில் மூன்று குறைந்த மதிப்புறு இலக்கங்களையடுத்து, ஒவ்வொரு மூன்று இலக்கங்களுக்கும் பதிலாக ஒவ்வோர் இரண்டு இலக்கங்களுக்கும் இடையில் பின்வருமாறு காற்புள்ளி இடப்படுகின்றது.

மேலதிகத் தகவல்கள் இந்திய முறைமை, அராபிய முறைமை ...

ஆயிரம், நூறாயிரம், பத்து மில்லியன் போன்றவற்றிற்கு அலகுகளைக் கொண்ட இந்திய எண் முறைமையை இது ஒத்துள்ளது.

Remove ads

எண்களின் பெயர்கள்

கீழேயுள்ள வரிசைப் பட்டியலில் ஒரு பில்லியனானது ஆயிரம் மில்லியனுக்குச் சமனாக உள்ள குறுகிய அளவைப் பின்பற்றுகின்றது. இந்தியாவிலோ, பண்டைய பிரித்தானியப் பயன்பாட்டைப் பின்பற்றியபடி, ஒரு பில்லியனானது மில்லியன் மில்லியனுக்குச் சமனாக உள்ள நீண்ட அளவு பின்பற்றப்படுகின்றது.

மேலதிகத் தகவல்கள் இந்தி/உருது (ஒலிபெயர்ப்பு) தமிழ், இந்திய உரு ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads