இந்திய ஐந்து ரூபாய் நாணயம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

இந்திய ஐந்து ரூபாய் நாணயம் (Indian 5-rupee coin) என்பது ரூபாயின் ஒரு வடிவம் ஆகும். 2005-இல் பத்து ரூபாய் அச்சிடப்படும் வரை இந்திய ரூபாயில் பெருமதிப்பு கொண்ட நாணயமாக கருதப்பட்டது.

நாணயத்தின் வடிவமைப்பு

நாணயத்தின் முன்பகுதியில் 5 என்ற எண் பெரியதாக பொறிக்கப்பட்டுள்ளது. 5 என்ற எண்ணின் இருபக்கமும் தாமரை மலரும், மொட்டும் ஒருங்கிணைந்தவாறு பொறிக்கப்பட்டுள்ளது. 5 என்ற எண்ணின் மேலே இந்தியில் ரூபாய் எனவும், கீழே ஆங்கிலத்தில் RUPEES எனவும் பொறிக்கப்பட்டுள்ளது. பின்பகுதியின் நடுவே அசோகரின் தூணில் உள்ள சிங்கம் பொறிக்கப்பட்டுள்ளது. அதன் இருபுறமும் இந்தியிலும், ஆங்கிலத்திலும் இந்தியா என பொறிக்கப்பட்டுள்ளது.

இந்த நாணயம் இந்திராகாந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு அவரது முகமும், ஜவகர்லால் நேருவின் முகம் அவரது 100 ஆவது பிறந்த நாள் நுற்றாண்டு விழாவின் போது வெளியிடப்பட்டது.[1]

Remove ads

சிறப்பியல்புகள்

  • இந்தியா ஐந்து ரூபாய் நாணயம் குப்ரோநிக்கலால் செய்யப்பட்டது.
  • இதன் விட்டம் 23 மில்லிமீட்டர்.
  • ஒன்பது கிராம் எடை கொண்டது.
  • இந்நாணய அமைப்பு வட்ட வடிவம் கொண்டது.[2]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads