இந்திய ரூபாய்

From Wikipedia, the free encyclopedia

இந்திய ரூபாய்
Remove ads

இந்தியாவின் நாணயம் இந்திய ரூபாய் என அழைக்கப்படுகிறது. இந்திய ரிசர்வ் வங்கி இந்திய ரூபாயை வெளியிடுகிறது. INR என்பது இந்திய ரூபாயின் ஐஎஸ்ஓ 4217 குறியீடு.

விரைவான உண்மைகள் ஐ.எசு.ஓ 4217, குறி ...

ரிசர்வ் வங்கியால் 5, 10, 20, 50, 100, 500 வரையிலான ரூபாய் தாள்கள் அச்சடிக்கப்படுகின்றன. ஒரு ரூபாய் தாள்கள் முதல் இரண்டாயிரம் ரூபாய் வரையிலான நாணயங்களை வெளியிடும் அதிகாரம் இந்திய அரசுக்கு மட்டுமே உண்டு.[9] உலோக நாணயங்கள் 1, 2, 5, 10 மற்றும் 20 வரையிலான மதிப்புகளில் வெளியிடப்படுகின்றன. 20 க்கு அதிகமான மதிப்புடைய நாணயங்கள் புகழ்வாய்ந்த நபர்களையோ அல்லது ஏதேனும் ஒரு நிகழ்வையோ குறிப்பிடும் வகையில் நினைவு நாணயங்களாக வெளியிடப்படுகின்றன. 50 பைசாவுக்கு குறைவான பைசா நாணயங்கள் தற்போது புழக்கத்தில் இல்லை.

Remove ads

சொற்பிறப்பியல்

பாணினி (கிமு 6 முதல் 4 ஆம் நூற்றாண்டு) ரூப்யா (रूप्य) என்ற வார்த்தையை குறிப்பிடுகிறார்.[10] முதல் மௌரியப் பேரரசர் சந்திரகுப்த மௌரியர் (கி.மு. 340-290) காலத்தில் சாணக்கியர் எழுதிய அர்த்தசாத்திரதம் வெள்ளி நாணயங்களைக் ரூப்யா எனக் குறிப்பிடுகிறது.[11] ரூபாய் என்கிற பதம் சமசுகிருத வார்த்தையான "ரூப்யா" என்கிற வார்த்தையிலிருந்து வந்தது. ரூபாயின் உடனடி முன்னோடியான ரூபியா 178 தானியங்கள் எடையுள்ள வெள்ளி நாணயங்களாக வட இந்தியாவில் ஷேர் ஷா சூரியால் 1540 இல் அச்சிடப்பட்டது. இது பின்னர் முகலாயப் பேரரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.[12]

Remove ads

உற்பத்தி

Thumb
மும்பை நாணய அச்சகம்

நாணயங்களையும். ஒரு ரூபாய் நோட்டையும் அச்சடிக்க இந்திய அரசுக்கு மட்டுமே உரிமை உள்ளது. நாணயங்கள் அச்சடிக்கும் உரிமை 1906 ஆம் வருட நாணயச் சட்டதால் அரசுக்கு அளிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மதிப்புகளில் நாணயங்களை வடிவமைத்து அச்சிடுவதும் இந்திய அரசின் பொறுப்பாகும். மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத் மற்றும் நொய்டா ஆகிய நான்கு இடங்களில் நாணயங்கள் அச்சிடப்படுகின்றன.[13] இந்திய ரிசர்வ் வங்கி சட்டம், 1934 அடிப்படையில் ரிசர்வ் வங்கி மூலம் மட்டுமே நாணயங்கள் புழக்கத்திற்கு வெளியிடப்படுகின்றன.[14] இந்திய பாதுகாப்பு அச்சகம் மற்றும் நாணயம் உற்பத்திக் கழகம் நான்கு அச்சகங்களை கொண்டுள்ளது.[15] பணத்தாள் அச்சிடும் அச்சக ஆலை 1928 ஆம் ஆண்டில் நாசிக்கில் நிறுவப்பட்டது.[16] முதல் பணத்தாள் அச்சிடும் அச்சகம் நாசிக்கில் நிறுவப்பட்டது.[17] தேவாஸ், மைசூர் மற்றும் சல்போனியிலும் காகிதப் பணத்தை அச்சிடும் அச்சகங்கள் உள்ளன.[15][18]

Remove ads

மொழிகள்

இந்தியாவில் பெரும்பான்மையாக ருபீ, ரூபாய், ரூபயி போன்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது, ஆனால் கிழக்கு இந்தியாவின் மேற்கு வங்காளம், ஒரிசா, அசாம் போன்ற மாநிலங்களில் "டாக்கா" என்னும் சமசுகிருதப் பெயரிலிருந்து தோன்றிய பெயரால் அழைக்கப்படுகிறது.[19]

பல்வேறு இந்திய மொழிகளில் இந்திய ரூபாய் உச்சரிக்கப்படும் விதம்:

  1. টকা (tôka) அசாமிய மொழி
  2. টাকা (taka) பெங்காலி
  3. ଟଙ୍କା(tanka) ஒரிய மொழி
  4. રૂપિયો (rupiyo) குஜராத்தி
  5. रुपया (rupayā) இந்தி
  6. روپے (rupay) காஷ்மீரி, உருது
  7. ರೂಪಾಯಿ (rūpāyi) கன்னடம், துளு
  8. रुपया (rupayā) கொங்கணி
  9. രൂപ (rūpā) மலையாளம்
  10. रुपये (rupaye) மராத்தி
  11. रुपियाँ (rupiya) நேபாளி
  12. ਰੁਪਈਆ (rupiā) பஞ்சாபி
  13. रूप्यकम् (rūpyakam) சமசுகிருதம்
  14. रुपियो (rupiyo) சிந்தி
  15. ரூபாய் (rūpāi) தமிழ்
  16. రూపాయి (rūpāyi) தெலுங்கு

இந்திய பணத்தாள்களின் முதற்பக்கத்தில் பணத்தின் மதிப்புடன் ரூபாய் என்கிற வார்த்தையும் ஆங்கிலத்திலும், இந்தியிலும் குறிக்கப்பட்டுள்ளது. பணத்தாளின் பின்புறம் மற்ற 15 இந்திய மொழிகளிலும் ஆங்கில அகரவரிசைப்படி எழுதப்பட்டுள்ளது [20].

மேலதிகத் தகவல்கள் Language, ₹1 ...
Remove ads

ரூபாய் தாள்கள்

அசோக ஸ்தூபி வரிசை

1950இல் இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட ரூபாய் தாள்கள் ஆங்கிலேயே ரூபாயின் அம்சங்களுடன், ஜார்ஜ் IV படத்திற்கு பதிலாக ‘அசோக ஸ்தூபி’ சின்னத்தை நீர்க்குறியாக கொண்டிருந்தன. அதன் பின்னர், தொழில்நுட்ப வளர்ச்சியால், இந்தியக் கலை வடிவங்களைக் கொண்ட படங்கள் ரூபாய் தாள்களில் இடம்பெற்றன. 1980இல் “வாய்மையே வெல்லும்” என்று தேசிய சின்னத்தில் பொறிக்கப்பட்டது. இந்த ரூபாய் தாள்கள் யாவும் ‘அசோக ஸ்தூபி’ வரிசை எனப்பட்டன.[21]

மகாத்மா காந்தி வரிசை

1996 முதல் மகாத்மா காந்தி வரிசை ரூபாய் தாள்கள் வெளியிடப்பட்டன. 2005க்கு பிறகு புதிய மகாத்மா காந்தி வரிசை ரூபாய் தாள்கள் வெளியிடப்பட்டன. இவற்றில் மகாத்மா காந்தி நீர்க்குறி இருக்கும்.[21] இவற்றின் பாதுகாப்பு சிறப்பம்சங்கள் பின்வருமாறு

  • ஐம்பது ரூபாய் வரை உள்ள தாள்களில் பாதுகாப்பு நூல் முன்புறம் சாளரம் வடிவில் தெரியும், பின்புறம் மறைந்திருக்கும். புற ஊதாக் கதிரில் பார்க்கும்போது இரு புறத்திலும் இந்த பாதுகாப்பு நூல் மஞ்சள் நிறத்தில் தெரியும். சாதாரண வெளிச்சத்தில் ஒரே நேர்கோடாகத் தெரியும்.
  • நூறிலிருந்து ஆயிரம் ரூபாய் வரை உள்ள தாள்களில் பாதுகாப்பு நூல் இயந்திரத்தால் கண்டறியக்கூடியது. இந்த நூலின் நிறம் வெவ்வேறு கோணங்களில் நீலத்திலிருந்து பச்சையாக மாறும். புற ஊதாக் கதிரில் பார்க்கும்போது வாசகங்கள் பிரகாசமாகத் தெரியும்.
  • காந்தி, ரிசர்வ் வங்கி முத்திரை, உறுதி வாசகம், அசோக ஸ்தூபி, ஆளுநர் கையொப்பம், பார்வையற்றோர்க்கான குறி ஆகியவை செறிவூட்டப்பட்ட இன்டளிக்ளோவில் அச்சிடப்பட்டவை.
  • முன்னும் பின்னும் எண்கள் சரியாக அச்சிடப்பட்டுள்ளதால் எவ்வாறு பார்த்தாலும் ஒன்றுபோல் தெரியும்.[21]

இந்திய அரசாங்கம் மகாத்மா காந்தி தொடரின் அனைத்து ₹500/- மற்றும் ₹1,000/- ரூபாய் நோட்டுகளையும் புழக்கத்தில் இருந்து நீக்குவதாக 2016 ஆம் ஆண்டில் அறிவித்தது.[22][23][24]

மகாத்மா காந்தி புதிய வரிசை

மகாத்மா காந்தி புதிய வரிசை ரூபாய் தாள்கள், நவம்பர் 8, 2016ல் அறிவிக்கப்பட்டது.[25] நவம்பர் 10, 2016ல் இந்திய ரிசர்வ் வங்கியால் 2000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் தாள்கள் மக்கள் பயன்பாட்டிற்கு வெளியிடப்பட்டது. இத்தாள்களின் முகப்பில் மகாத்மா காந்தி படமும், மறுபக்கத்தில் தூய்மை இந்தியா இயக்கத்தின் சின்னமும் இடம்பெற்றிருக்கின்றன.[26][27] பாதுகாப்பு நடவடிக்கையாக, புதிய இந்திய ரூபாய் நோட்டுத் தொடரில் பல்வேறு இடங்களில் நுண் அச்சுக்கள் இடம்பெற்றுள்ளன.

புழக்கத்தில் உள்ள பணத்தாள்கள்

மேலதிகத் தகவல்கள் படம், மதிப்பு ...
மேலதிகத் தகவல்கள் படம், மதிப்பு ...


2023 ஆம் ஆண்டில், இந்திய ரிசர்வ் வங்கி 19 மே அன்று ₹ 2000 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்படும் என்று ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது.[28]

Remove ads

ரூபாயின் மதிப்பு

1947க்கு முன்னர் ஒரு டாலரின் மதிப்பு ஒரு ரூபாயாக இருந்தது. 1952ல் ஒரு டாலர் ரூ4.79 என நிர்ணயிக்கப்பட்டது. 1966ல் ரூபாயின் மதிப்பை ரூ7.57 என்ற அளவுக்கு குறைக்கும் அறிவிப்பை இந்திய அரசு வெளியிட்டது.[29] 1975ம் ஆண்டில் அமெரிக்க டாலர், ஜப்பானிய யென் மற்றும் ஜெர்மன் மார்க் ஆகிய மூன்று நாணயங்களின் பரிவர்த்தனை மதிப்புடன் இந்திய ரூபாய்க்கு இணைப்பு ஏற்படுத்தப்பட்டது.[30] 1993ல் தாராளமயக் கொள்கையின் அடியொற்றி பரிவர்த்தனை மதிப்பினை பணச்சந்தை தீர்மானிக்கும் என்று அறிவிக்கப்பட்டது.[31] அதே நேரத்தில் கடுமையான ஏற்ற இறக்கங்களை தவிர்க்கும் விதத்தில் தலையிடுவதற்கான உரிமை ரிசர்வ் வங்கிக்கு வழங்கப்பட்டது.1995ல் ஒரு டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 32.42 ஆக இருந்தது. 2000 முதல் 2010 வரை இது சற்றே குறையாக ரூ.45 என்ற நிலையில் இருந்து வந்தது. 2013 ஆகத்தில் 50 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சியடைந்து ஒரு டாலர் 68 ரூபாய் என்ற நிலையிலான கடும் சரிவை எதிர்கொண்டது.[32][33]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads