இந்திய தேசிய இராணுவக் கல்லூரி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இராஷ்டிரிய இந்திய இராணுவக் கல்லூரி (Rashtriya Indian Military College (RIMC)[1] இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூனின் செயல்படும் ஆண் பையன்களுக்கான இராணுவப் பயிற்சிப் பள்ளி ஆகும். இது பிரித்தானிய இந்திய அரசால் நிறுவப்பட்டதாகும்.[2]
ஐக்கிய இராச்சியத்தின் வேல்ஸ் இளவரசர் எட்டாம் எட்வர்டு, இராஷ்டிரிய இந்திய இராணுவக் கல்லூரியை 1922-இல் துவக்கி வைத்தார். இதனை இந்திய அரசு நடத்துகிறது. 138 ஏக்கர் பரப்பளவில் உள்ள இக்கல்லூரியில் சேர 11.5 வயது நிறைவடைந்த ஆண் பையன்களை, ஆண்டுதோறும் இருமுறை, நுழைவுத் தேர்வு மூலம் அனுமதிக்கப்படுகின்றனர். இக்கல்லூரியில் 8 முதல் 12-ஆம் வகுப்புகள் வரை வழக்கமான அறிவியல் பாடங்களுடன், அடிப்படை இராணுவப் பயிற்சியையும் வழங்குகிறது. இக்கல்லூரியில் 12 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம் உள்ளனர். இக்கல்லூரியின் முன்னாள் மாணவர்களில் மிகவும் புகழ் பெற்றவர்கள் ஜெனரல் கே. எஸ். திம்மையா மற்றும் அக்சர் கான் போன்றவர்கள் ஆவார்.[1]
Remove ads
நுழைவுத் தேர்வு
ஆறு மாதத்திற்கு ஒரு முறை 25 ஆண் மாணவர்களை மட்டும் எட்டாம் வகுப்பிற்கு, அகில இந்திய நுழைவுத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர்.[3] வகுப்பு துவங்கும் போது மாணவர்களின் வயது 11.5 முதல் 13-க்குள் இருத்தல் வேண்டும். நுழைவுத் தேர்வில் ஆங்கிலம் (125 மதிப்பெண்), கணக்கு (200) மற்றும் பொது அறிவு (75) என மூன்று பாடங்கள் கொண்டிருக்கும். மாணவர்கள் ஒவ்வொரு பாடத்திலும் குறைந்த பட்சம் 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். மேலும் நேர்முகத் தேர்வு (Viva-Voce) 50 மதிப்பெண்கள் கொண்டிருக்கும். மாநிலத் தலைநகரங்களில் மட்டும் நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் உடல் தகுதிச் சான்றிதழ் பெற வேண்டும்.[4]
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads