இந்திய தேசிய செயற்கைக்கோள் தொகுதி

From Wikipedia, the free encyclopedia

இந்திய தேசிய செயற்கைக்கோள் தொகுதி
Remove ads

இன்சாட் (INSAT) அல்லது இந்திய தேசிய செயற்கைக்கோள் தொகுதி என்பது இந்தியாவின் இஸ்ரோவினால் அனுப்பப்பட்ட பலநோக்குத் திட்ட பூகோள செயற்கைக்கோள்கள் ஆகும். தொலைத்தொடர்பு, ஒhdgdhdhdலி-ஒளிபரப்பு, வானிலை, மற்றும் தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கை தேவைகளை நிறைவு செய்வதற்காக இவ்வகை இன்சாட் செயற்கைகோள்கள் அனுப்பப்பட்டன. 1983ல் ஆரம்பிக்கப்பட்ட இன்சாட் திட்டமானது ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய உள்நாட்டு தகவல் தொடர்பு அமைப்பு ஆகும். இது விண்வெளி துறை, தொலைத்தொடர்பு துறை, இந்திய வானிலை ஆய்வுத் துறை, அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷன் ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும். செயலாளர் மட்டத்தில் அமைந்த இன்சாட் ஒருங்கிணைப்பு குழு, இன்சாட் அமைப்பின் ஒட்டுமொத்த ஒருங்கிணைப்பு மற்றும் மேலாண்மையை நிர்வகிக்கிறது.

Thumb
இன்சாட்-1B

இந்தியாவின் தொலைத்தொடர்பு மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்புப் பயன்பாடுகளுக்கான அலைவாங்கிப் பரப்பிகளை ( சி. எசு, நீட்டித்த சி மற்றும் கேயு வரிசை) இன்சாட் செயற்கைக் கோள்கள் வழங்குகின்றன. சில செயற்கைக் கோள்களில் மீவுயர் தெளிதிறன் நுண்கதிர் வெப்ப அளவி மற்றும் வானிலையியல் மாற்றங்களைக் காட்சிப்படுத்த உதவும் சிசிடிபுகைப்படக் கருவி்களும் பொருத்தப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. தெற்காசிய மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் உருவாகும் இடர்பாடுகளை கண்டறிந்து எச்சரிக்கும் சமிக்ஞைகளை வாங்கிக் கொள்ளும் அலைவாங்கி பரப்பிகளும் இன்சாட் செயற்கைக் கோள்களில் இணைக்கப்பட்டுள்ளன. அனைத்துலக இடர்பாடுகள் கண்டறிந்து எச்சரிக்கும் தகவல் தொடர்பு அமைப்பில் (Cospas-Sarsat) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமும் ஒரு உறுப்பினர் ஆகும்.

Remove ads

இன்சாட் அமைப்பு

இந்திய தேசிய செயற்கைக்கோள் அமைப்பு 1983 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இன்சாட்-1B செயற்கைக்கோள் ஏவுதலுடன் ஆரம்பிக்கப்பட்டது. 1982 ல் அனுப்பப்பட்ட இன்சாட்-1A ஆனது தோல்வியில் முடிந்தது. இன்சாட் அமைப்பு செயற்கைக்கோள்களானது இந்தியாவில் தொலைக்காட்சி, வானொலி, தொலைத்தொடர்பு மற்றும் வானிலை ஆராய்ச்சி துறைகளில் மிகப்பெரிய புரட்சியையே ஏற்படுத்தியது எனலாம். இது தொலைக்காட்சி மற்றும் தொலைத்தொடர்பு அமைப்புகளின் அசுர வளர்ச்சிக்கு வித்திட்டது எனலாம். கல்பனா-1 ஆனது வானிலைக்காக மட்டும் தனியே அனுப்பப்பட்ட செயற்கைக்கோள் ஆகும். ஹசன் மற்றும் போபாலில் உள்ள கட்டுப்பாட்டு அறைகளின் மூலம் இன்சாட் செயற்கைக்கோள்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன. தற்போது 21ல் 11 செயற்கைகோள்கள் இயக்கத்தில் உள்ளன[1]

இன்சாட் செயற்கைக் கோள்களின் பட்டியலுக்கு இந்திய செயற்கைக்கோள்களின் பட்டியலை பார்க்கவும்.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads