இந்திய தொழில்நுட்பக் கழகம் பஞ்சாப்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்திய தொழில்நுட்பக் கழகம் பஞ்சாப் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியாகும். இந்திய அரசின் மனிதவள அமைச்சினால் 2008ஆம் ஆண்டு புதிதாக அமைக்கப்பட்ட ஆறு இ.தொ.கழகங்களில் ஒன்றாகும். 2008-2009 கல்வியாண்டு கல்விதிட்டங்கள் இ.தொ.க தில்லி வளாகத்தில் துவங்கின. இ.தொ.க தில்லி இப்புதிய கழகத்தினை வளர்த்தெடுக்கும் வழிகாட்டியாக செயல்படும்.
Remove ads
வளாகம்
இ.தொ.க பஞ்சாப் தனது இரண்டாம் கல்வியாண்டு திட்டங்களை பஞ்சாப் அரசு தற்காலிகமாக கொடுத்துள்ள ரூப்நகரில் (ரோபார்) உள்ள முன்னாள் மகளிர் பல்கலைதொழில்நுட்ப பயிலக வளாகத்தில் இயங்கும்.இவ்வளாகத்தில் இதற்கான மராமத்து வேலைகள் நடக்கின்றன.
இக்கழகத்திற்கான நிரந்தர இடம் சண்டிகர் நகரிலிருந்து 42 கி.மீ தொலைவில் ரூப்நகர் எனும் மாவட்ட தலைநகரில் பிர்லா வித்துக்கள் பண்ணையில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான அடிக்கல்லை முன்னாள் மனிதவள அமைச்சர் அர்ச்சுன் சிங் 24 பிப்ரவரி அன்று நாட்டினார். இதன் இயக்குநராக இந்திய அறிவியல் கழகம்,பெங்களூருவில் உலோகவியல் துறையின் முனைவர் எம்.கே.சுரப்பா நியமிக்கப்பட்டுள்ளார்.
Remove ads
கல்வி திட்டங்கள்
தனது முதலாண்டில்,2008-2009, மூன்று பட்டப்படிப்பு திட்டங்களை வழங்குகிறது:
- கணினி அறிவியல் மற்றும் பொறியியல்
- மின் பொறியியல்
- எந்திரப் பொறியியல்
இ.தொ.க நுழைவுத்தேர்வு ஒவ்வொரு ஆண்டும் அனைத்து இ.தொ.கவிற்கும் பொதுவாக ஒருங்கிணைந்து நடத்தப்படுகிறது. மிகவும் கடினமானதும் போட்டி மிகுந்ததுமான இத்தேர்வின் அடிப்படையில் பொறியியல் பட்டப்படிப்பு திட்டங்களுக்கு மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
வரும் ஆண்டுகளில் மேலும் கூடுதல் கல்வித்திட்டங்களும் ஆய்வு திட்டங்களும் மற்ற இ.தொ.கழகங்களைப் போன்றே வகுக்கப்படும்.
Remove ads
மேலும் பார்க்க
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads