இந்திய தொழில்நுட்பக் கழகம் பட்னா

From Wikipedia, the free encyclopedia

Remove ads

இந்திய தொழில்நுட்பக் கழகம் பட்னா (இ.தொ.க. பட்னா, IIT Patna அல்லது IITP ) இந்தியாவின் பீகார் மாநில தலைநகர் பட்னாவில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியாகும். இந்திய மனிதவள அமைச்சினால் 2008ஆம் ஆண்டு புதிதாக அமைக்கப்பட்ட ஆறு இ.தொ.கழகங்களில் ஒன்றாகும்[1]. 2008-2009 கல்வியாண்டு முதல் பட்னாவின் பாடலிபுத்திரா காலனியில் அமைந்துள்ள நவீன் அரசு பல்தொழில்நுட்பப் பயிலக வளாகத்தில் இ.தொக.குவகாத்தி வழிகாட்டுதலில் இயங்கத் துவங்கியுள்ளது.[2]

விரைவான உண்மைகள் குறிக்கோளுரை, வகை ...
Remove ads

வளாகம்

இ.தொ.க பட்னா ஜூலை 25,2008 அன்று பதிவு செய்யப்பட்டு ஆகஸ்ட் 6, 2008[3] முதல் இ.தொ.க குவகாத்தி வழிகாட்டுதலில் இயங்குகிறது[4].

பட்னாவின் புறநகரில் 600 ஏக்கர் நிலப்பரப்பில் நிரந்தர அமைவிடம் கண்டறியப்பட்டுள்ளது.45000 ச.அடி கட்டிடப் பரப்பு கட்டுமானத்தில் உள்ளது. ஜூலை 2010 முதல் புதிய இடத்திலிருந்து இ.தொ.க இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆடவருக்கும் மகளிருக்கும் இரு விடுதிகளும் தயார்நிலையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Remove ads

கல்வி திட்டங்கள்

தனது முதலாண்டில்,2008-2009, மூன்று பட்டப்படிப்பு திட்டங்களை வழங்குகிறது:


இ.தொ.க நுழைவுத்தேர்வு ஒவ்வொரு ஆண்டும் அனைத்து இ.தொ.கவிற்கும் பொதுவாக ஒருங்கிணைந்து நடத்தப்படுகிறது. மிகவும் கடினமானதும் போட்டி மிகுந்ததுமான இத்தேர்வின் அடிப்படையில் பொறியியல் பட்டப்படிப்பு திட்டங்களுக்கு மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

வரும் ஆண்டுகளில் மேலும் கூடுதல் கல்வித்திட்டங்களும் ஆய்வு திட்டங்களும் மற்ற இ.தொ.கழகங்களைப் போன்றே வகுக்கப்படும்.


Remove ads

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads