இந்திய நாணயவியல் ஆய்வு நிறுவனம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்திய நாணயவியல் ஆய்வு நிறுவனம் (Indian Institute of Research in Numismatic Studies) இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் நாசிக் நகருக்கு அருகில் அமைந்துள்ள நாணயவியல் ஆய்வு தொடர்பான நிறுவனம் ஆகும். உள்நாட்டில் இந்த அருஙகாட்சியகம் நாணய அருங்காட்சியகம் அல்லது பண அருங்காட்சியகம் என்று அழைக்கப்படுகிறது. இது முதன்மையாக ஒரு பொது மக்கள் பார்வைக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஆய்வு மையமாக அமைந்துள்ளது.
Remove ads
வரலாறு
இந்திய நாணயவியல் ஆய்வு நிறுவனம் 1980 ஆம் ஆண்டில் நாணயவியல் நிபுணர் பரமேஸ்வரி லால் குப்தா மற்றும் தொழிலதிபர் கே.கே. மகேஸ்வரி ஆகியோரின் முயற்சியால் நிறுவப்பட்டது. நாசிக் அருகே அஞ்சநேரியில் உள்ள தற்போதைய இடத்திற்கு இது 1984 ஆம் ஆண்டில் இட மாற்றம் செய்யப்பட்டது. [1] மகாராஷ்டிரா அரசாங்கத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட அறக்கட்டளையான இந்திய நாணயவியல் வரலாற்று மற்றும் கலாச்சார ஆராய்ச்சி அறக்கட்டளை (ஐ.என்.எச்.சி.ஆர்.எஃப்) இதை இயக்குகிறது. இந்த அறக்கட்டளை யானது 2005 ஆம் ஆண்டில்ல் நிறுவப்பட்ட இந்தியன் ராக் ஆர்ட் ஆராய்ச்சி மையத்தையும் இயக்குகிறது. [2]
நாணயவியல் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதும், அதற்காக அறிவியலாளர்கள் மற்றும் பல்கலைக்கழக ஆய்வாளர்களுக்கு ஆதரவு தருவதும் இதன் நோக்கமாக அமைந்துள்ளது. அவர்களுக்கு பயிற்சியளிப்பதையும் இந்நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த நிறுவனத்தில் ஒரு அருங்காட்சியகம் மற்றும் ஒரு நூலகம் ஆகியவை இயங்கி வருகின்றன. [1]
Remove ads
வசதிகள்
பண்டைய, ஆரம்ப கால இடைக்கால, இடைக்கால மற்றும் பின் இடைக்காலம் ஆகிய பல்வேறு காலங்களைச் சேர்ந்த போன்ற நாணயவியல் துறையில் நிபுணத்துவம் பெற்ற அறிஞர்கள், ஆய்வாளர்களுக்கு பயிற்சி தருகின்றனர். இந்தியாவில் காணப்படும் எந்தவொரு நாணயம் அல்லது நாணயத் தொடர்பானவர்கள் அஞ்சல் மூலமாகவோ அல்லது வேறு விதமாகவோ கேட்கும் எந்தவொரு விசாரணைக்கும் இந் நிறுவனத்தார் இலவசமாக சேவைகளை வழங்கி வருகின்றனர். நாணயவியல் மற்றும் அதனுடன் தொடர்புடைய நூல்களின் நல்ல தொகுப்பைக் கொண்ட ஒரு வசதியான நூலகமும் இந்திய நாணயவியல் ஆய்வு நிறுவனத்தில் செயல்பட்டு வருகிறது. [3]
அருங்காட்சியகம் மற்றும் நூலகம்
காட்சிக்கூடத்தில் இரு வகையான காட்சிப் பொருள்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் காட்சிப் பொருளாக அமைவது நிறுவனத்தின் சேகரிப்புகளாக இந்தியாவிலிருந்து பெறப்பட்ட பணம் தொடர்பானது ஆகும். மற்றொரு காட்சிப் பொருளாக அமைவது கே.ஜி. மகேஸ்வரியின் புகைப்படங்கள் ஆகும்.
இந்திய நாணயவியல் ஆய்வு நிறுவனம் இந்தியாவில் மிக முக்கியமான நாணயவியல் நூலகத்தைக் கொண்டுள்ள நூலகம் ஆகும். இது ஆய்வாளர்களின் பயன்பாட்டிற்கு மிகவும் உதவியாக உள்ளது. இந்த நிறுவனத்தில் விருந்தினர் மாளிகைகளும் உள்ளன. இதில் இந்திய மற்றும் இந்தியரல்லாத நாணயவியல் படைப்புகள் மற்றும் ஸ்லைடுகள், கோப்பு அட்டைகள் மற்றும் நாணயவியல் சேகரிப்பின் பிற பதிவுகள் ஆகியவை சேகிரத்து வைக்கப்பட்டுள்ளன. இந்த நூலகத்தில் சுமார் 1,50,000 எண்ணிக்கையிலான நாணயங்களின் புகைப்பட அட்டைகளைக் கொண்டுள்ளன. அவை வரிசை வாரியாக அமைக்கப்பட்டுள்ளன. எந்தவொரு அறிஞரும் அல்லது சாதாரண நபரும் அவர்களைப் பார்வையிடுவதற்கும் அவர்களின் வசதிகளைப் பயன்படுத்துவதற்கும் மிகவும் எளிதாக இருக்கும் வகையில் அது அமைந்துள்ளது. இந்நிறுவனத்தார் தங்கள் வளாகத்தில் அனைத்து நவீன வசதிகளையும் கொண்ட அறிஞர்களுக்கா வசிப்பிடத்தைக் கொண்டுள்ளனர், நாணயங்களைப் பற்றி ஆய்வு மேற்கொள்ள விரும்பும் ஆய்வாளர்கள் இதனை குறைந்த அளவு கட்டணம் செலுத்தி பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு உள்ளது. [3]
Remove ads
வெளியீடுகள்
இந்த நிறுவனம் பல நூல்களையும் இதழ்களையும் வெளியிடுகிறது. அவற்றுள் முதன்மையானது நாணயவியல்.தொடர்பானதாகும். இது வருடாந்திர வெளியீடான நியூமிஸ்மாடிக் டைஜெஸ்டை வெளியிடுகிறது. இது சர்வதேச கருத்தரங்குகளில் நடைபெற்ற கட்டுரைகளின் தொகுப்பினையும் அது வெளியிட்டுள்ளது. அது 1987, 1991 மற்றும் 2001 ஆகிய ஆண்டுகளைச் சேர்ந்தவையாகும். அதன் சில வெளியீடுகள் பின்வருமாறு அமையும்: [1]
- கே.கே. மகேஸ்வரி மற்றும் கே.டபிள்யூ விக்கின்ஸ், மராத்தா மிண்ட்ஸ் மற்றும் நாணயங்கள் (1989).
- அமிதேஷ்வர் ஜா மற்றும் சஞ்சய் கார்க், காங்க்ராவின் கட்டோச் ஆட்சியாளர்களின் நாணயங்களின் பட்டியல் (1991).
- அமிதேஷ்வர் ஜா மற்றும் திலீப் ராஜ்கோர், மேற்கு க்ஷத்திரபாக்களின் நாணயங்களில் ஆய்வுகள் (1994).
- பால் மர்பி, கோசலா மாநில மண்டலம், கிமு 600–470: வெள்ளி பஞ்ச்மார்க் செய்யப்பட்ட நாணயங்கள்
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
மேலும் காண்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads

