இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம்

From Wikipedia, the free encyclopedia

இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம்
Remove ads

இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் (Ministry of Civil Aviation) (Hindi: नागर विमानन मंत्रालय, naagar vimaanan mantraalay) என்பது இந்திய அரசின் அமைச்சகங்களில் ஒன்றாகும். இதன் தற்போதைய மூத்த அமைச்சராக ஜோதிர் ஆதித்யா மாதவராவ் சிந்தியா மற்றும் இணை அமைச்சராக விஜய் குமார் சிங் உள்ளனர்.

விரைவான உண்மைகள் துறை மேலோட்டம், ஆட்சி எல்லை ...
Remove ads

பணிகள்

இந்தியாவில் சிவில் விமானப் போக்குவரத்து வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறைக்கான தேசிய கொள்கைகள் மற்றும் திட்டங்களை உருவாக்குவதற்கு பொறுப்பான மத்திய அமைச்சகம் ஆகும். இது நாட்டில் சிவில் விமானப் போக்குவரத்தின் ஒழுங்கான வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்திற்கான திட்டங்களை வகுத்து செயல்படுத்துகிறது. வான் பாதுகாப்பு, விமான நிலைய வசதிகள், விமான போக்குவரத்து சேவைகள் மற்றும் பயணிகள் மற்றும் பொருட்களை விமானம் மூலம் கொண்டு செல்வதை மேற்பார்வையிடுவது இந்த அமைச்சகத்தின் பணியாகும்.

இந்த அமைச்சகத்தின் கீழ் சிவில் விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரகம் செயல்படுகிறது.[2] மேலும் இந்த அமைச்சகத்தின் கீழ் விமான நிலையங்களின் பொருளாதார ஒழுங்குமுறை ஆணையம் செயல்படுகிறது.[3]

அமைச்சகத்துடன் இணைக்கப்பட்ட நிறுவனங்கள்

  • விமானப் போக்குவரத்து பாதுகாப்பு செயலகம்
  • விமான விபத்து விசாரணை செயலகம்

பயிற்சி நிறுவனங்கள்

  • இந்திராகாந்தி தேசிய விமானப் பயிற்சி நிறுவனம்[4]

சட்டப்பூர்வ அமைப்புகள்

பொதுத்துறை நிறுவனங்கள்

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads