ஜோதிர் ஆதித்யா மாதவராவ் சிந்தியா
1971 இல் பிறந்த இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜோதிர் ஆதித்யா மாதவராவ் சிந்தியா (Jyotiraditya Madhavrao Scindia, பிறப்பு 1 சனவரி 1971) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் இந்தியாவின் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆவார். இவர் , ஒரு காலத்தில் குவாலியரை ஆட்சிசெய்த சிந்தியா குடும்பத்தைச் சேர்ந்தவர். மேலும் இவர் மத்தியப் பிரதேசத்தின் குணா நாடாளுமன்றத் தொகுதியின் முன்னாள் மக்களவை உறுப்பினர். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இதற்கு முன் , இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக இருந்தார்.
இவர் மன்மோகன் சிங்கின் அமைச்சரவையில் , மின்சாரத் துறைக்கான தனிப்பொறுப்புடன் கூடிய இணையமைச்சராக 2012 அக்டோபர் முதல் 2014வரை இருந்தார். மேலும் இவர் குவாலியரின் கௌவ அரசர் பட்டதுடன் இருக்கிறார். அதாவது குவாலியர் சமஸ்தானத்தை இந்திய ஒன்றியத்துடன் இணைக்கப்படாமல் இருந்திருந்தால் இன்று அவர் அதன் அரசராக இருந்திருப்பார்.[1][2]
Remove ads
ஆரம்ப வாழ்க்கை
மராத்தா குடும்பத்தில் 1971 சனவரி முதல் நாளன்று பம்பாயில் சிந்தியா பிறந்தார்.[3] இவரது பெற்றோர் மாதவராவ் சிந்தியா மற்றும் மாதவி ராஜே சிந்தியா ஆவர். இவர் மாநகரின் காம்பியன் பள்ளியிலும் தேராதூனின் டூன் பள்ளியிலும் படித்தார்.[4] ப1993இல் இவர் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பொருளியல் பட்டம் பெற்றார். 2001இல், இவர் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் முதுகலை வணிக மேலாண்மை பயின்று பட்டம் பெற்றார்.[5][6]
1947இல் இந்திய ஒன்றியத்துடன் இணைக்கப்பட்ட சமஸ்தானமான குவாலியரின் கடைசி மகாராஜாவாக இருந்த ஜிவாஜிராவ் சிந்தியா. இவருக்கு, சுதந்திர இந்தியாவில் மற்ற இளவரசர்களைப் போலவே பட்டம் மற்றும் சலுகைகள், ஆண்டு மானியம் போன்றவை வழங்கப்பட்டன. 1961இல் இவரது மரணத்துக்குப் பிறகு இவரது மகனான மாதவ்ராவ் சிந்தியா (ஜோதிர் ஆதித்யா மாதவராவ் சிந்தியாவின் தந்தை) குவாலியர் மகாராஜா என்ற பட்டத்தைப் பெற்றார். 1971 ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்ட 26 வது திருத்தத்தின்படி,[7] இந்தியாவின் முன்னாள் மன்னர்களின் பட்டங்கள் மானியங்கள் போன்றவை ஒழிக்கப்பட்டன.[8]
ஜோதிர் ஆதித்யா மாதவராவ் சிந்தியா வடோதராவின் கெய்க்வாட் குடும்பத்தைச் சேர்ந்த பிரியதர்ஷினி ராஜே சிந்தியாவை மணந்தார்.
Remove ads
அரசியல் வாழ்வு
இந்திய காங்கிரசு கட்சி (2001-2020)
இவருது தந்தை மாதவ ராவ் சிந்தியா மறைவுக்குப் பிறகு 2002 பெப்ரவரியில் குணா தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[9] இவர் 2004 இல் மீண்டும் இத்தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்,[9] பின்னர் 2007இல் தகவல்தொழில்நுட்பத் துறை இணையமைச்சர், 2009இல் வணிகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சராகப் பதவிவகித்தார். 2012இல் மின்சாரத் துறைக்கு தனிப்பொறுப்பு வகித்து இணையமைச்சரானார்.[9]
2014 ஆம் ஆண்டில், குணா தொகுதியில் இருந்து சிந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அந்த இடத்தை கிருஷ்ண பால் சிங் யாதவிடம் 2019 இல் இழந்தார்.[10]
பாரதிய ஜனதா கட்சி (2020-தற்போது வரை)
இந்திய தேசிய காங்கிரசின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு தனது பதவிவிலகல் கடிதத்தை அனுப்பியதன் மூலம் இவர் இந்திய தேசிய காங்கிரசில் இருந்து விலகினார்.[11] 2020 மார்ச் 9 தேதியிட்ட ராஜினாமா கடிதம் மார்ச் 10 அன்று பகிரப்படுத்தப்பட்டது, அதைத் தொடர்ந்து இந்திய தேசிய காங்கிரஸ் ஒரு அறிக்கையை வெளியிட்டது, அதில் இவரை "கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக" நீக்கப்படுவதாக கூறப்பட்டது. இவர் 2020 மார்ச் 11, 2020 அன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.[12]. இவரைத் தொடர்ந்து இவருக்கு ஆதரவாக இருந்த காங்கிரசு கட்சியின் மத்திய பிரதேச சட்டமன்ற உறுப்பினர்கள் சிலரும் , தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து பா.ஜ.க - வில் இணைந்ததால்[13] ,மத்திய பிரதேசத்தின் அப்போதைய காங்கிரசு முதல்வர் கமல் நாத் பெரும்பான்மையை இழந்தார்[14]. இதைத் தொடர்ந்து மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க ஆட்சி அமைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
20 ஜூன் 2020 அன்று , இவர் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்[15].
07 சூலை 2021 அன்று , இந்திய அரசின் விமான போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார்[16].
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads