இந்திரா பார்த்தசாரதி
சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்திரா பார்த்தசாரதி (பிறப்பு: சூலை 10, 1930) தமிழ்நாட்டிலுள்ள கும்பகோணத்தில் பிறந்த தமிழ் எழுத்தாளர் ஆவார். இந்தியாவின் உயரிய இலக்கிய விருதுகளில் ஒன்றான சாகித்ய அகாதமி விருது தமிழ்நாட்டரசு விருது, சரஸ்வதி சம்மான் விருது ஆகியன போன்ற பல விருதுகளைப் பெற்றவர். 40 ஆண்டுகள் டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றியவர். போலந்து நாட்டில் வார்சா நகரில் அமைந்துள்ள வார்சா பல்கலைக்கழகத்தில் ‘இந்தியத் தத்துவமும் பண்பாடும்’ கற்பிக்கும் ஆசிரியராக அயலிடப்பணியில் பணியாற்றியவர். 17 புதினங்கள், 6 சிறுகதைத் தொகுப்புகள், சில நாடகங்கள், பல கட்டுரைகளைப் படைத்துள்ளார். .
Remove ads
கல்வி
இந்திரா பார்த்தசாரதி கும்பகோணத்தில் பள்ளிப்படிப்பை நிறைவுசெய்தார். அப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றிய எழுத்தாளர் தி. ஜானகிராமனிடம் இவர் பயின்றார்.
பணி
1952ஆம் ஆண்டில் திருச்சியிலுள்ள தேசியக்கல்லூரியில் தனது ஆசிரியப்பணியைத் தொடங்கினார்.[3] தில்லி பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் 1960ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வந்தார். பின்னர் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் உள்ள சங்கர்தாஸ் சுவாமிகள் நாடகப் பள்ளியில் நிகழ்கலைத் துறைத் தலைவராகவும் பேராசிரியராகவும் பணியாற்றி ஓய்வுபெற்றார்.
படைப்புகள்
இவர் முதலில் ஆனந்த விகடன் போன்ற கிழமை இதழ்களில் (வார இதழ்களில்) எழுதத்தொடங்கினார். பின்னர் தீபம், கல்கி, கணையாழி ஆகிய இதழ்களில் எழுதிவந்தார். 'மழை' நாடகம் இவர் படைத்த முதல் நாடகம் ஆகும். நிலம் என்னும் நல்லாள் எனும் தலைப்பில் நாவலாக எழுதிப் பின்னர் நண்பர் ஒருவர் நாடகமாக எழுதச்சொன்னதால் நாடகமாக எழுதினார். பிற்காலத்தில் இவர் எழுதிய "நந்தன் கதை" , ராமானுஜர், ஔரங்கசீப் என்னும் நாடங்களும், "ஏசுவின் தோழர்கள்" போன்ற படைப்புகளும் நல்ல வரவேற்பைப் பெற்றன.
நாடக நூல்கள்
- மழை
- போர்வை போர்த்திய உடல்கள்
- காலயந்திரங்கள்
- நந்தன் கதை
- ஒளரங்கசீப்
- ராமானுஜர்
- கொங்கைத்தீ
- பசி
- புனரபி ஜனனம் புனரபி மரணம்
- தர்மம்
- கோயில்
- இறுதியாட்டம் - சேச்சுபியர் எழுதிய கிங் லியர் நாடகத்தின் தமிழாக்கம்
- புயல் - சேச்சுபியர் எழுதிய டெம்பஸ்ட் நாடகத்தின் தமிழாக்கம்
- இந்திரா பார்த்தசாரதி நாடகங்கள் (இரு தொகுப்புகள்)
புதினங்கள்
- அக்னி
- ஆகாசத்தாமரை (1991 - கல்கி இதழில் வெளிவந்த தொடர்)
- ஏசுவின் தோழர்கள்
- காலவெள்ளம்
- கிருஷ்ணா கிருஷ்ணா
- குருதிப்புனல்; 1975; தமிழ்ப்புத்தகாலயம், சென்னை.[4]
- சத்திய சோதனை
- சுதந்தர பூமி
- தந்திர பூமி
- திரைகளுக்கு அப்பால்
- தீவுகள்
- மாயமான் வேட்டை
- வெந்து தணிந்த காடுகள்
- வேதபுரத்து வியாபாரிகள்
- வேர்ப்பற்று
- ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கி விட்டன
சிறுகதைத் தொகுதிகள்
- நாசகாரக்கும்பல்
- மனித தெய்வங்கள்; 1967 திசம்பர்; தமிழ்ப்புத்தகாலயம், சென்னை.
- முத்துக்கள் பத்து: இந்திரா பார்த்தசாரதி; அம்ருதா பதிப்பகம், சென்னை
கட்டுரைத் தொகுதிகள்
- இந்திரா பார்த்தசாரதி கட்டுரைகள் (முதல் பதிப்பு 2013)
- கடலில் ஒரு துளி (தமிழ் இலக்கியம், இந்திய இலக்கியம், உலக இலக்கியம், அரசியல்-சமூகம், நாடகம் என ஐந்து தலைப்புகளில் மொத்தமாக 42 கட்டுரைகள் கொண்ட தொகுப்பு.)
- தமிழிலக்கியத்தில் வைணவம் - முனைவர் பட்ட ஆய்வேடு
மொழிபெயர்ப்புகள்
- Ashes and Wisdom
- Wings in the Void
- Into this Heaven of Freedom
சிறுகதைகள்
Remove ads
படைப்புகளில் எடுத்தாண்ட கருத்துக்கள்
இந்திரா பார்த்தசாரதி படைப்புகளில் பெரும்பாலும் நடுத்தர வர்க்க மக்களின் மனக்குழப்பங்கள், உறவுப் பிறழ்ச்சிகள் முதலானவை இவரது நாடகங்களில் முக்கியக் கருத்தாக இடம் பெறுகின்றன. உள்மன உறுத்தல்கள், தன்முனைப்புப் போராட்டம், தளைகளிலிருந்து விடுபட விரும்பும் விடுதலை மனநிலை ஆகியவை இவருடைய நாடகங்களில் வெளிப்படுகின்றன. விரக்தி, தற்கொலை, மரணம், தோல்வி, தனிமை, நோய், துன்பம், மனஉளைச்சல் என்னும் கூறுகள் மிகுதியாக வெளிப்படுத்தப்படுகின்றன. பசி நாடகத்தில் தற்கொலை, மழை நாடகத்தில் பொருந்தாக் காதல், மரணம், விரக்தி, காலயந்திரம் நாடகத்தில் புற்றுநோய், தற்கொலை முயற்சி, தோல்வி, நந்தன் கதையில் அடிமைத்தனம், சாதியை அழிக்கமுடியாது என்ற விரக்தி, கோயில் நாடகத்தில் அறியாமை, ஏமாற்று, போர்வை போர்த்திய உடல்கள் நாடகத்தில் விபச்சாரம், பெண்ணடிமை, மரணம், ஒளரங்கசீப் நாடகத்தில் கதைத் தலைவனின் தனிமை என்று திறனாய்வாளர்கள் எடுத்துக்காட்டுகின்றனர். நிகழ்ச்சிகளுக்குப் பின்னால் ஓடும் உளவியல் அசைவுகளை இவர் நாடகங்கள் சித்திரிக்கின்றன. இவர் எழுத்துகளில் பொதுவாகக் காணப்படும் பண்பு நிறைவின்மை.
Remove ads
விருதுகள்
1977ல் குருதிப்புனல் என்னும் புதினத்திற்கு இந்திய சாகித்ய அகாதமி விருது பெற்றார்.[5]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads