இந்தி-தமிழ் தொடர்கள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்தி மொழியில் உள்ள பல தொடர்கள் தமிழில் மொழிமாற்றம் செய்து பல தொலைக்காட்சிகள் ஒளிபரப்புகின்றன. இவற்றால் வடநாட்டு மக்களின் கலச்சாரம், வாழ்க்கை முறை ஆகியவற்றை நாம் அறிய முடிகிறது. அழகான உடைகள், அறிமுகமில்லாத புதிய முகங்கள், வித்தியாசமான கதையம்சம், இடையிடையே நகைச்சுவை உணர்வு போன்றவையே இந்தி தொடர்கள் மீது தமிழ் மக்களுக்கு ஈர்ப்பு ஏற்பட காரணம். [1]
இந்தக் கட்டுரையில் சொந்த ஆய்வுக் கருத்துகள் இருக்கலாம். |
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இந்தக் கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்தக் கட்டுரையைத் திருத்தி உதவுங்கள் |
இந்தி தொடர்களால் தமிழ் சின்னத்திரை நடிகர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாமல் போய்விடும் என்பதால் அவர்கள் அதை எதிர்க்கின்றனர். ஆனால் இந்தி தொடர்களுக்கான ரசிகர்கள் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கின்றனர். ஆகவே இந்தி தொடர்களுக்கு இணையான தமிழ்த்தொடர்களை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது இன்றைய தமிழ் சின்னத்திரை உலகம் என்பது நிதர்சனமான உண்மை. இப்போது புகழ்பெற்ற சில இந்தி-தமிழ் தொடர்களைக் காணலாம்.
Remove ads
ராஜ் டி
ராஜ் டிவியில் 6 வருடங்களாகத் தொடர்ந்து ஒளிபரப்பாகி முடிந்த புகழ்பெற்ற தொடர் சிந்து பைரவி. இது சிந்து மற்றும் பைரவி என்ற இரு தோழிகளின் வாழ்க்கையை மையமாகக் கொண்டது. மண்வாசனை என்ற தொடர் குழந்தை திருமணத்தால் ஆனந்தி என்ற பெண்ணின் வாழ்க்கையில் ஏற்படும் விளைவுகளை கூறுகிறது. கருத்தம்மா என்ற தொடர் பெண் சிசுக் கொலையை மையமாகக் கொண்டது. பூவிழி வாசலிலே என்ற தொடர் அடிமைத் தொழிலாளிகள் அனுபவிக்கும் வேதனையை காண்பிக்கிறது. இந்திரா என்ற தொடர் திக்குவாய்ப் பெண்ணின் வாழ்க்கையை மையமாக் கொன்டது.
Remove ads
பாலிமர் டிவி
பாலிமர் தொலைக்காட்சியில் இன்றும் 1950 பகுதிகளைக் கடந்து நீண்டகாலமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர் மூன்று முடிச்சு. இத்தொடரில் தன் புகுந்த வீட்டை பாதுகாக்க ஒரு நல்ல மருமகளாக இருந்து சீமா போராடுகிறார். இரு மலர்கள் தொடரை அறியாதவர்கள் இருக்க முடியாது. அபி-ப்ரக்யா ஆகிய இருவரின் காதல் கதையை மையமாகக் கொண்ட இத்தொடரின் ஒளிபரப்பு உரிமையை தற்போது ஜீ தமிழ் வாங்கியுள்ளது. வாடகைத்தாய் என்ற கருவை மையமாகக் கொண்டது என்னருகில் நீ இருந்தால் தொடர். இத்தொடரில் மண் வாசனை தொடரின் ஷிவ்வும் சிந்து பைரவி தொடரின் பைரவியும் ஜோடியாக நடித்துள்ளனர். மேலும் மதுபாலா, உறவே உயிரே, கல்யாணக் கனவுகள், சாமி போட்ட முடிச்சு போன்ற பல புகழ்பெற்ற இந்தித் தொடர்கள் ஒளிபரப்பாகி முடிந்தன.
Remove ads
விஜய் டிவி
விஜய் டிவியில் என் கணவன் என் தோழன் என்ற தொடர் ஒளிபரப்பானது. மேலும் இது பல மொழிகளில் பல நாடுகளில் ஒளிபரப்பாகிறது. இத்தொடர் ஐ.பி.எஸ் கனவு காணும் சந்தியாவையும் அதை நிறைவேற்ற உதவும் அவர் கணவர் சூர்யாவையும் மையமாகக் கொண்டது. உறவுகள் தொடர்கதை, என் அன்பு தங்கைக்கு போன்ற பல தொடர்கள் ஒளிபரப்பாகி திடீரென நிறுத்தப்பட்டன. சரித்திர தொடர்களான மகாபாரதம், சீதையின் ராமன், சந்திர நந்தினி போன்ற தொடர்களும் புகழ் பெற்றன. தற்போது விஜய் டிவி டப்பிங் தொடர்களை ஒளிபரப்புவதை நிறுத்திக்கொண்டது. ஆனாலும் அதற்குப் பதிலாக விஜய் சூப்பர் தொலைக்காட்சியில் தற்போது பல இந்தி தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.
ஜீ தமிழ்
ஜீ தமிழில் ஒளிபரப்பான ஜான்சி ராணி தொடரை யாரும் மறக்க முடியாது. ஜான்சி ராணியின் வீர வாழ்க்கையை மையமாகக் கொண்ட இத்தொடர் புகழ் பெற்றது. சின்ன மருமகள், மறுமணம் போன்ற தொடர்கள் ஒளிபரப்பாகி முடிந்த தொடர்கள் ஆகும்.
ஜீ தமிழில் ஒளிபரப்பான சி.ஐ.டி என்ற க்ரைம் தொடர் இந்தியில் 18 வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் மெகா தொடர். அபி-பிரக்யாவின் காதல் கதையைக் கூறுகிறது இனிய இருமலர்கள் தொடர். தற்போது இத்தொடர் ஒன்று மட்டுமே ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் டப்பிங் தொடர் ஆகும்.
இந்தி நாடகங்களை மொழிமாற்றம் செய்வதற்கு பதில் மறுதயாரிப்பும் செய்கின்றனர். ஆனால் அவற்றை இந்தி நாடங்களுக்கு இணையாக ஒப்பிட முடியாது. இதற்கு உதாரணமாக விஜய் டிவியில் ஒளிபரப்பான தெய்வம் தந்த வீடு மற்றும் கல்யாணம் முதல் காதல் வரை ஆகிய தொடர்களைச் சொல்லலாம். இவை முதலில் சற்றே புகழ் பெற்றாலும் பிறகு கதையில் தொய்வு ஏற்பட்டதால் பாதியில் நிறுத்தப்பட்டன.
Remove ads
சன் டிவி
சன் டிவியில் ஒளிபரப்பான இராமாயணம் என்ற டப்பிங் தொடர் புகழ் பெற்றது. தற்போது ஒளிபரப்பாகி வரும் ஜெய் வீர ஹனுமான் தொடரும் புகழ்பெற்று வருகிறது. இவ்வாறு இதிகாச தொடர்களை மட்டுமே டப்பிங் செய்துவந்த சன் டிவியில் யாருமே எதிர்பார்க்காத வகையில் ஒளிபரப்பான முதல் டப்பிங் தொடர் நாகினி. அது இந்தியைப் போலவே தமிழிலும் மாபெரும் புகழ் பெற்று நம்பர் ஒன் இடத்தை பிடித்தது. சில எதிர்ப்புகளையும் தாண்டி இறுதிப் பகுதி வரை ஒளிபரப்பாகி முடிந்தது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads