விஜய் தொலைக்காட்சி
தமிழ்த் தொலைக்காட்சி From Wikipedia, the free encyclopedia
Remove ads
விஜய் தொலைக்காட்சி (ஸ்டார் விஜய்) என்பது தமிழ் மொழியில் இயங்கும் 24 மணி நேர பொழுதுபோக்குக் கட்டணத் தொலைக்காட்சிச் சேவை ஆகும். இந்த அலைவரிசை நவம்பர் 24, 1994 ஆம் ஆண்டு முதல் சென்னையில் கிண்டியைத் தலைமையகமாகக் கொண்டு உலகளவில் இயங்கி வருகின்றது. இந்த அலைவரிசை ஏசியாநெட் ஸ்டார் கம்யூனிகேசன்சு நிறுவனத்திற்கு சொந்தமானது ஆகும். விஜய் தொலைக்காட்சி தனது உயர் வரையறு தொலைக்காட்சியை மே 29, 2016 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பு தொடங்கியது.
Remove ads
வரலாறு
- விஜய் தொலைக்காட்சியின் சின்னங்கள்
- 2001 முதல் 2017
- 2017 முதல்
இந்தத் தொலைக்காட்சி 1994 ஆம் ஆண்டு நா. பா. வா இராமசுவாமி உடையார் என்பவரால் கோல்டன் ஈகிள் கம்யூனிகேசன் என்னும் பெயரில் ஆரம்பிக்கப்பட்டது.[1] இந்த அலைவரிசையை யுனைடெட் புரூவரீசு குழுமம் 1995 இல் கையகப்படுத்தி விசய் தொலைக்காட்சி என மறு பெயரிட்டது.[2] பின்னர் 1999 இல் யுனைடெட் ப்ரூவரீசு குழுமத்திடமிருந்து ₹180 மில்லியனுக்கு யுடிவி குழுமம் வாங்கியது. பின்னர் 2001 ஆம் ஆண்டில் சுடார் இந்தியா இந்த அலைவரிசையை கைப்பற்ற ஸ்டார் விஜய்[3][4] என்று பெயரிட்டு தனது சேவையை ஒளிபரப்பு செய்தது. விசய் தொலைக்காட்சியின் 51 விழுக்காடு பங்குகளை சுடார் வாங்கியது, மீதி 49 விழுக்காட்டை யுடிவி வைத்திருந்தது. அதை தொடர்ந்து 2004 ஆம் ஆண்டில் யுடிவி சாப்ட்வேர் கம்யூனிகேசன்சு விசய் தொலைக்காட்சியின் அதன் 44 விழுக்காடு பங்குகளை சுடார் இந்தியாவுக்கு ₹31 கோடிக்கு ஏற்றியது.
விஜய் தொலைக்காட்சி தனது உயர் வரையறு தொலைக்காட்சியை மே 29, 2016 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்ப தொடங்கியது.[5] ஆகஸ்ட் 25 2016 அன்று விஜய் சூப்பர் என்ற 24 மணி நேர திரைப்பட தொலைக்காட்சி அலைவரிசையை தொடங்கியது.[6]
ஜூன் 25, 2017 அன்று ஸ்டார் விஜய் தனது சின்னத்தை மாற்றி ஸ்டார் இந்தியாவின் கீழ் உள்ள ஏசியாநெட் ஸ்டார் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமாக்கியது. அக்டோபர் 4, 2020 அன்று விஜய் மியூசிக் என்ற பெயரில் ஒரு இசை அலைவரிசையை தொடங்கியது.[7][8]
Remove ads
நிகழ்ச்சிகள்
இந்தத் தொலைக்காட்சியில் நாடகத் தொடர்கள், ஆன்மீக நிகழ்ச்சிகள், சமையல் நிகழ்ச்சிகள், பேச்சு நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், திரைப்படங்கள், நடன நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்கள் போன்ற பல் சுவை நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்து வருகின்றது.
விஜய் தொலைக்காட்சியில் பல பிரபலமான நெடுந்தொடர்கள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப் படுகின்றன. 2015 ஆவது ஆண்டில் நடைபெறும் பதினொன்றாவது உலகக் கோப்பை துடுப்பாட்ட போட்டிகள் தமிழ் மொழி வர்ணனையுடன் நேரலையாக ஒளிபரப்பாகி வருகிறது.
Remove ads
விருதுகள்
- விஜய் விருதுகள் (2006 - முதல்)
- ஆண்டுதோறும் தமிழ்த் திரைப்படங்களில் சிறப்பான திறமையை வெளிப்படுத்தும் நபர்களுக்கு விஜய் விருதுகள் என்னும் தலைப்பில் 2006 ஆம் ஆண்டு முதல் ஆண்டுக்கு ஒரு முறை விருதுகள் வழங்கப்படுகின்றன.
- விஜய் தொலைக்காட்சி விருதுகள் (2014 - முதல்)
- ஆண்டுதோறும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் சிறப்பான திறமையை வெளிப்படுத்தும் நபர்களுக்கு விஜய் தொலைக்காட்சி விருதுகள் என்னும் தலைப்பில் 2014 ஆம் ஆண்டு முதல் ஆண்டுக்கு ஒரு முறை விருதுகள் வழங்கப்படுகின்றன.
அலைவரிசைகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads