இந்தி விக்கிப்பீடியா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்தி விக்கிப்பீடியா, விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் இந்தி மொழி பதிப்பு ஆகும். சூலை மாதம் 2003ல் இது தொடங்கப்பட்டது. செப்டம்பர் மாதம் 2009ல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை ஐம்பதாயிரத்தை தாண்டியது[1]. கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் நாற்பத்தி மூன்றாவது[2] இடத்தில் இருந்தது இந்தி விக்கி. இந்திய மொழி விக்கிகளில், கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் முதல் இடத்தில் இந்தி விக்கிப்பீடியா இருக்கின்றது. நவம்பர் 11, 2025 அன்று, 1,67,223 கட்டுரைகளைக் கொண்டிருக்கிறது.
Remove ads
காலக்கோடு
- 2003 சூலை 11 – இந்தி விக்கிப்பீடியா தொடக்கம்
- 2005 சனவரி 25 – கட்டுரைகள் எண்ணிக்கை 1,000
- 2007 சனவரி 16 – கட்டுரைகள் எண்ணிக்கை 5,000.
- 2007 மார்ச் 14 – கட்டுரைகள் எண்ணிக்கை 10,000.
- 2007 திசம்பர் 6 – கட்டுரைகள் எண்ணிக்கை 15,000.
- 2008 மே 29 – கட்டுரைகள் எண்ணிக்கை 20,000.
- 2008 சூலை 11 – இந்தி விக்கிப்பீடியா தொடங்கி 5 ஆண்டுகள் நிறைவு
- 2009 மே 9 – கட்டுரைகள் எண்ணிக்கை 30,000.
- 2009 செப்டம்பர் 8 – இந்திய விக்கிகளில் முதலிடத்தைப் பெற்றது.
- 2009 செப்டம்பர் 14 – கட்டுரைகள் எண்ணிக்கை 50,000.
- 2010 பிப்ரவரி 13 – பங்களிப்பாளர்கள் எண்ணிக்கை 25,000
- 2010 சூன் 20 – பங்களிப்பாளர்கள் எண்ணிக்கை 30,000
- 2010 நவம்பர் 26 – பங்களிப்பாளர்கள் எண்ணிக்கை 37,000
- 2011 சனவரி 29 – பங்களிப்பாளர்கள் எண்ணிக்கை 40,000
- 2011 ஆகஸ்டு 14 – பங்களிப்பாளர்கள் எண்ணிக்கை 50,000.
- 2011 ஆகஸ்டு 30 – 100,000க்கும் அதிகமான கட்டுரைகள்
Remove ads
அடையாளச்சின்னம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads

