2003
From Wikipedia, the free encyclopedia
Remove ads
2003 ஆம் ஆண்டு (MMIII) கிரிகோரியன் நாட்காட்டியின் படி புதன் கிழமையில் தொடங்கிய ஒரு சாதாரண ஆண்டாகும். இது கிபி 2003ஆம் ஆண்டு என்றும் அழைக்கப்பட்டது. இது மூன்றாம் ஆயிரவாண்டின் 3ஆம் ஆண்டும், 21ஆம் நூற்றாண்டின் 3ஆம் ஆண்டும், 2000களின் 4ம் ஆண்டும் ஆகும்.
இவ்வாண்டு அனைத்துலக நன்னீர் ஆண்டாக அறிவிக்கப்பட்டது.
Remove ads
நிகழ்வுகள்
- ஜனவரி 8 - யூஎஸ் ஏர்வேய்சு விமானம் 5481 சார்லட் டக்லசு விமான நிலையத்தில் வீழ்ந்ததில் அனைத்து 21 பேரும் கொல்லப்பட்டனர்.
- ஜனவரி 16 - கொலம்பியா விண்ணோடம் தனது கடைசிப் பயணத்தை ஆரம்பித்தது.
- ஜனவரி 18 - கான்பரா நகரில் காட்டுதீ பரவியதில் 4 பே கொல்லப்பட்டனர்.
- ஜனவரி 23 - நாசாவின் பயனியர் 10 விண்கலத்தில் இருந்து கடைசிக் குறிப்பு 7.5 பில்லியன் மைல் தூரத்தில் இருந்து பெறப்பட்டது.
- பெப்ரவரி 1 - கொலம்பியா விண்ணோடம் பூமிக்குத் திரும்ப் வரும் வழியில் டெக்சசுக்கு மேல் வெடித்ததில் அனைத்து 7 விண்ணோடிகளும் கொல்லப்பட்டனர்.
- பெப்ரவரி 9 - தார்ஃபூர் போர் ஆரம்பமானது.[1]
- பெப்ரவரி 18 - தென் கொரியாவில் தொடருந்து ஒன்றில் தீ பரவியதில் 190 பேர் கொல்லப்பட்டனர்.
- மார்ச் 19 - ஈராக் போர் ஆரம்பமானது.
- ஏப்ரல் 14 - மனித மரபணுத்தொகைத் திட்டம் முடிவடைந்தது.
- சூலை 22 - சதாம் உசைனின் இரு மகன்கள் அமெரிக்கப் படையினரால் கொல்லப்பட்டனர்.
- அக்டோபர் 15 - சீனா தனது முதலாவது மனித விண்வெளிப்பறப்பை ஆரம்பித்தது.
- அக்டோபர் 24 - கான்கோர்டு விமானம் தனது கடைசிப் பறப்பை மேற்கொண்டது.
- டிசம்பர் 5 - உருசியாவின் தெற்கே இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 44 பேர் கொல்லப்பட்டனர்.
- டிசம்பர் 13 - சதாம் உசேன் கைது செய்யப்பட்டார்.
- டிசம்பர் 26 - ஈரானின் தென்கிழக்கே இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 40,000 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
Remove ads
பிறப்புகள்
இறப்புகள்
- பெப்ரவரி 1 - கல்பனா சாவ்லா, அமெரிக்க விண்வெளி வீராங்கனை (இ. 1961)
- சூலை 30 - கே. பி. சிவானந்தம், வீணை வாத்திய கலைஞர் (பி. 1917)
- ஆகஸ்டு 16 - இடி அமீன், உகாண்டா முன்னாள் அரசுத்தலைவர் (பி. 1924)
- செப்டம்பர் 9 - எட்வர்ட் டெல்லர், அங்கேரிய இயற்பியலாளர் (பி. 1908)
- அக்டோபர் 8 - வீரமணி ஐயர், ஈழத்துக் கலைஞர், பாடலாசிரியர் (பி. 1931)
- அக்டோபர் 9 - ஏ. ரி. பொன்னுத்துரை, இலங்கைத் தமிழ் நாடகக் கலைஞர் (பி. 1928)
நோபல் பரிசுகள்
- இயற்பியல்:
- அலெக்சி ஆப்ரிகோசொவ், உருசியா, ஐக்கிய அமெரிக்கா
- வித்தாலி கீன்ஸ்புர்க், உருசியா
- அந்தோனி லெகெட், ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா
- இரசாயனவியல்:
- பீட்டர் ஏக்ரே, ஐக்கிய அமெரிக்கா
- ரொடெரிக் மெக்கினன், ஐக்கிய அமெரிக்கா
- மருத்துவம்:
- பவுல் லாட்டர்புர், ஐக்கிஅய் அமெரிக்கா
- சர் பீட்டர் மான்ஸ்ஃபீல்ட், ஐக்கிய இராச்சியம்
- இலக்கியம்:
- அமைதி:
- பொருளியல்
- ராபர்ட் எங்கில், ஐக்கிய அமெரிக்கா
- கிளைவ் கிராஙர், ஐக்கிய இராச்சியம்
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads