இந்துஸ்தான்
வரலாற்றுகாலப் பகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்துஸ்தான்(ⓘ) மற்றும் அதன் சுருங்கிய வடிவமான இந்த்[1] ஆகிய வார்த்தைகள் இந்தியாவை குறிக்க பயன்படுத்தப்படும் பாரசீக பெயர்களாகும். இந்திய பிரிவினைக்கு பிறகு இந்திய குடியரசு பற்றி குறிப்பிட பயன்படுத்தப்படும் வரலாற்று ரீதியான பெயராக இது தொடர்கிறது.[2][3][4] இந்துஸ்தான் என்ற பெயரின் மற்றொரு பொருள் வட இந்தியாவின் இந்தோ-கங்கை சமவெளியை புவியியல் ரீதியாக குறிக்க பயன்படுத்தப்படுகிறது.[5]


Remove ads
சொற்பிறப்பியல்
இந்துஸ்தான் என்ற சொல் பாரசீகச் சொல்லான இந்துவிலிருந்து பெறப்பட்டதாகும். இச்சொல்லும் சமசுகிருத சொல்லான சிந்துவும் ஒரே பொருள் உடையவை ஆகும்.[6] அஸ்கோ பார்ப்போலாவின் கூற்றுப்படி முன் ஈரானிய சத்தமான *சி என்பது இ என்று பொ.ஊ.மு. 850 முதல் 600 ஆம் ஆண்டுகளில் மாற்றமடைந்தது.[7] இவ்வாறாக இருக்கு வேத கால சப்த சிந்தவா (ஏழு ஆறுகளின் நிலம்) அவெத்தாவில் அப்த இந்து என்று மாறியது. இது அகுரா மஸ்தாவால் உருவாக்கப்பட்ட "பதினைந்தாவது இராச்சியம்" எனக் கூறப்பட்டது. 'அதிக வெப்பம்' உடைய நிலம் என்று கூறப்பட்டது.[8] பொ.ஊ.மு. 515 ஆம் ஆண்டு முதலாம் டேரியஸ் சிந்து பகுதி (தற்கால சிந்து மாகாணம்) உள்ளிட்ட சிந்து சமவெளியை தனது அரசில் இணைத்துக்கொண்டார். பாரசீக மொழியில் இந்த இடம் இந்து என்று அழைக்கப்பட்டது.[9] முதலாம் செர்கசின் காலத்தில் சிந்து ஆற்றுக்கு கிழக்கில் இருந்த அனைத்து நிலப்பகுதிகளையும் குறிக்க "இந்து" என்ற பதம் பயன்படுத்தப்பட்டது.[6]
நடு பாரசீக மொழியில், அநேகமாக பொ.ஊ. முதலாம் நூற்றாண்டிலிருந்து பின்னொட்டான -ஸ்தான் என்ற சொல் இணைக்கப்பட்டது. இதற்கு ஒரு நாடு அல்லது பகுதி என்று பொருள். இவ்வாறாக தற்போதைய சொல்லான இந்துஸ்தான் உருவானது.[10] அண். பொ.ஊ. 262 ஆண்டின் போது முதலாம் சாபுரின் நக்சு-இ-ருசுதம் கல்வெட்டில் சிந்து என்பது இந்துஸ்தான் என்று குறிக்கப்பட்டது.[11][12]
வரலாற்றாளர் பி. என். முகர்ஜியின் கூற்றுப்படி ஒரு காலத்தில் சிந்து ஆற்றின் கீழ் வடி நிலத்தை குறிக்கப் பயன்படுத்தப்பட்ட சொல்லான இந்துஸ்தான் படிப்படியாக விரிவடைந்து "கிட்டத்தட்ட அனைத்து இந்திய துணைக் கண்டத்தையும்" குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. கிரேக்க-உரோமானியப் பெயரான "இந்தியா" மற்றும் சீனப் பெயரான சென்டு ஆகியவையும் இதேபோன்ற ஒத்த பரிணாமத்தை பின்பற்றின.[11][13]
பாரசீகச் சொல்லான இந்துவிலிருந்து பெறப்பட்ட அரேபியப் பதமான இந்த் பலுசிஸ்தானில் மக்கரான் கடற்கரையிலிருந்து இந்தோனேசிய தீவுக்கூட்டம் வரை உள்ள இந்தியமயமாக்கப்பட்ட பகுதிகளைக் குறிக்க அரேபியர்களால் பயன்படுத்தப்பட்டது.[14] ஆனால் இறுதியாக அச்சொல்லும் இந்தியத் துணைக் கண்டத்தை அடையாளப்படுத்தக்கூடிய சொல்லாக மாறியது.
Remove ads
உசாத்துணை
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads