முதலாம் செர்கஸ்

பாரசீகத்தின் பழங்கால மன்னர் From Wikipedia, the free encyclopedia

முதலாம் செர்கஸ்
Remove ads

முதலாம் செர்கஸ் (பிறப்பு:கிமு 519 – இறப்பு: கிமு 465) (Xerxes I) மகா செர்கஸ் என்றும் அழைக்கப்படும் இவர் முதலாம் டேரியசின் மகன் ஆவார். அகாமனிசிய பேரரசின் ஐந்தாம் பேரரசர் ஆவார். இவர் அகாமனிசியப் பேரரசை கிமு 486 முதல் கிமு 465 வரை ஆண்டார். இவரது தலைநகரம் பெர்சப்பொலிஸ் ஆகும். யூதர்களின் பழைய எற்பாட்டின் எஸ்தர் நூலில் இப்பேரரசரை அகாசுரர்ஸ் எனக்குறிப்பிட்டுள்ளது. மேலும் இவரது யூத மனைவி எஸ்தர் ஆவார். ஒரு பாரசீகப் படைத்தலைவரிடமிருந்து, யூத மக்களை காப்பாற்றிய பெருமை எஸ்தரை சாரும்.[2][3][4]

விரைவான உண்மைகள் முதலாம் செர்கஸ், பாரசீக மன்னர் ...

அகாமனிசியப் பேரரசுக்கு எதிராக கிரேக்கர்கள், பண்டைய எகிப்து மற்றும் பபிலோனியா பகுதிகளில் நடைபெற்ற கலவரங்களை பேரரசர் செர்கஸ் ஒடுக்கினார்.[5] இவரது ஆட்சியில் சூசா மற்றும் பெர்சப்பொலிஸ் நகரங்கள் கட்டி முடிக்கப்பட்டது. இவரது ஆட்சிக்கு பின் படிப்படியாக அகாமனிசியப் பேரரசு வீழ்ச்சியடைத் துவங்கியது.

Remove ads

படக்காட்சிகள்

அகாமனிசியப் பேரரசர்கள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

ஆதார நூற்பட்டியல்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads