இந்து சமயத்தில் நரபலி

From Wikipedia, the free encyclopedia

Remove ads

நரபலி என்பது இறைவனுக்கு மனிதர்களை பலி கொடுக்கும் சடங்காகும். இம்முறை தொன்மையான மதங்களில் இருந்து வந்துள்ளது. போர்களில் வெல்லவும், கள்ளத்தில் வெற்றிபெறவும் என பல்வேறு காரணங்களுக்காக பலியிடுதல் நடந்து வந்துள்ளது.

சொல்லிலக்கணம்

நரபலி என்பதில் நர- நரன்- மனிதன் எனும் பொருளும், பலி - தியாகம் எனும் பொருளைத் தரும்.

வகைகள்

நரபலி என்பது இறைவனுக்கு மனிதர்களை பலி கொடுக்கும் சடங்காகும். போர்களில் வெல்லவும், கள்ளத்தில் வெற்றிபெறவும், புதையல் எடுக்கவும், பண பிரச்னை தீர்க்கவும், உடல்நலத்தைச் சரி செய்யவும் என பல்வேறு காரணங்களுக்காக பலியிடுதல் நடந்து வந்துள்ளது. இதனை அறிஞர்கள் மூன்று விதமாக பிரிக்கின்றனர்.

  1. இறைவனுக்காக மனிதர்களை பலி தருதல்
  2. சமூக நன்மைக்காக இறைவனுக்கு மனிதர்களை பலி தருதல்
  3. தனி நபர்/ குடும்ப நன்மைக்காக இறைவனுக்கு மனிதர்களை பலி தருதல்

இறைவனுக்காக நரபலி தருதல்

இறைவனுக்காக தேர் அமைத்து திருவிழாவாக கொண்டாடும் போது, தேரோட்டம் சில இடங்களில் தடை படுகிறது. இவ்வாறான நேரங்களில் இறைவனே பலி கேட்பதாக கூறி நரபலி தந்து தேரோட்டத்தினை நடத்தியுள்ளனர்.

இறைவன் நரபலி கேட்பதாக குறிசொல்பவரின் சொல்லைக்கேட்டு இறைவனின் கோபத்தினை தணிப்பதற்கு நரபலி தந்துள்ளனர்.

சமூக நன்மைக்காக நரபலி தருதல்

அரசரின் உடல்நலம், போரில் வெற்றி பெற, புதிய கட்டுமானங்கள் தடையின்றி நடைபெற ஆகிய காரணங்களுக்காக நரபலிகள் தரப்பட்டுள்ளன. பெரிய அளவினான அரண்மனைகள், ஏரி போன்றவைகள் அமைக்கப்படும் போது விபத்துகள் நிகழ்ந்து மனிதர்கள் இறக்காமல் இருக்க தொடக்கத்திலேயே நரபலிகள் தரப்படுகின்றன.

தனி நபர் அல்லது குடும்ப நன்மைக்காக நரபலி தருதல்

புதையல் எடுக்கும் முன்பு அதனை காவல் காக்கும் சக்திகளிடமிருந்து தங்களை காத்துக் கொள்ள நரபலி தரும் வழக்கம் இருந்துள்ளது. தனிநபர்கள் மாந்திரிக சக்திகள் பெறவும், வசிய சக்தி பெறவும், செல்வேந்தர் ஆகவும் என தனிப்பட்ட காரணங்களுக்காக நரபலிகள் தரப்பட்டுள்ளன.

Remove ads

வேதத்தில் நரபலி

Thumb
பலி தேவதையான பார்வதியின் உருவமான பெண் கடவுளான சாமுண்டியின் சிற்பம்

சுனசேபன்

ரிக் வேதத்தின் ஐதேரேய பிரம்மாணத்தில் (7.13-18), அரிச்சந்திரன் நடத்திய வேள்வியில் நர பலியாக கொடுக்கப்பட இருந்த சுனசேபனை ரிக் வேத தேவதைகள் காப்பாற்றியதாகயும், பின்னர் விசுவாமித்திரர் சுனசேபனை தேவராதன் என்ற பெயரில் தனது மூத்த மகனாக வளர்த்ததாகவும் கூறப்பட்டுள்ளது. சுனசேபன் நர பலி நிகழ்வு சில வேறுபாடுகளுடன் வால்மீகி எழுதிய இராமாயண காவியத்தின் பாலகாண்டத்தில் (1. 61), விளக்கப்பட்டுள்ளது.

இந்து சமயத்தில் நரபலி கொடுப்பது ஒரு வழிபாட்டு சடங்காக இருந்து வந்துள்ளது. சாக்த மத பிரிவிலும் நாட்டாறியல் வழிபாட்டிலும் இந்த பலி கொடுத்தல் போற்றப்பட்டுள்ளது.

விக்ரமாதித்தன்

தன்னுடைய வேண்டுதலுக்காக பிற மனிர்தர்களையோ அல்லது தன்னையோ பலியாக கொடுப்பது பற்றி இந்து சமய நூல்களில் குறிப்பிடப் பட்டுள்ளன. விக்ரமாதித்தன் தொன்ம கதையில் மன்னர்களை பலிகொடுக்கும் சாமியாரின் சூழ்ச்சி பிரதானமானது. காளியிடம் வரம் பெற விக்ரமாதித்தன் சுய பலி கொடுப்பது பற்றி கிளைக் கதையில் கூறப்பட்டுள்ளது.

கன்னி பலி

பெண்களில் கன்னிப் பெண்களை பலியிடும் சடங்குகளும் தொன்ம காலத்தில் இருந்துள்ளன.

சூல் பெண் பலி

பெண்களில் கருவுற்ற பெண்ணை (சூல் பெண்) பலி கொடுக்கும் வழக்கம் இருந்துள்ளது. இப்பலியிடும் முறையில் கருவுற்ற பெண்ணின் வயிற்றை கிழித்து உள்ளிருக்கும் பிண்டத்தினை எடுத்து பலியிடுதலும், பின் வெற்று வயிற்றில் திரியிட்டு விளக்கேற்றுவதும் இருந்துள்ளது.[1]

ஆதாரங்களும் மேற்கோள்களும்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads