இன்ஸ்ட்டாகிராம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இன்ஸ்ட்டாகிராம் (Instagram ) தமிழில் படவரி அக்டோபர் 2010இல் வெளியான ஓர் இலவச, ஒளிப்படங்களை பகிர்ந்துகொள்ள உதவும் மென்பொருளாகும். மெட்டாவின் கீழ் இயங்கும் ஒரு சமூக ஊடகம். பயனர்கள் ஒளிப்படம் எடுக்கவும் எண்ணிம ஒளிவடிகட்டியை செயல்படுத்தவும் இன்ஸ்ட்டாகிராமின் வலைத்தளம் உட்பட பல்வேறு சமூக வலைத்தளங்களில் பகிரவும் உதவுகிறது.[2] நகர்பேசி ஒளிப்படக் கருவிகளில் வழக்கமாக இருக்கும் 4:3 உருவ விகிதம் போலன்றி இதில் சதுரமாக உள்ளது இதனை வேறுபடுத்தும் சிறப்பியல்பாகும் .
இன்ஸ்ட்டாகிராம் துவக்கத்தில் ஐ-போன், ஐ-பேடு, மற்றும் ஐ-பாடு டச்களில் மட்டுமே இருந்தது; ஏப்ரல் 2012 முதல் அண்ட்ராய்டு ஒளிப்படக்கருவி இணைந்த நகர்பேசிகளிலும் இயங்கவல்லதாக உள்ளது. இந்த மென்பொருள் ஆப்பிள் ஸ்டோர் மூலமாகவும் கூகுள் பிளே மூலமாகவும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.[3]
ஏப்ரல் 12, 2012 அன்று ஃபேஸ்புக் நிறுவனம் இன்ஸ்ட்டாகிராம் நிறுவனத்தை, அதன் 13 பணியாளர்கள் உட்பட,[1] ஏறத்தாழ $1 பில்லியன் பணம் கொடுத்து வாங்கியுள்ளது.[4]

Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads