இமாச்சலப் பிரதேச அரசு

From Wikipedia, the free encyclopedia

Remove ads

இமாச்சலப் பிரதேச அரசு (Government of Himachal Pradesh) அல்லது இமாச்சலப் பிரதேச மாநில அரசு என்பது இந்திய மாநிலமான இமாச்சலப் பிரதேசத்தின் 12 மாவட்டங்களின் உச்ச நிர்வாக அதிகார அமைப்பாகும். இது இமாச்சலப் பிரதேச ஆளுநரால் வழிநடத்தப்படும் ஒரு நிர்வாகத்தைக் கொண்டுள்ளது. முதலமைச்சர், இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் ஆட்சியினை வழிநடத்துகிறார்.

சட்டமன்றம்

சிம்லா இமாச்சலப் பிரதேசத்தின் தலைநகரமாகும்.மேலும் இமாச்சலப் பிரதேச சட்டமன்றமும் தலைமைச் செயலகமும் இங்கு உள்ளது. தர்மசாலா மாநிலத்தின் குளிர்கால தலைநகரமாகும். இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றம் சிம்லாவில் அமைந்துள்ளது, இது இமாச்சலப் பிரதேசம் முழுவதையும் நிர்வகிக்கும் அதிகார வரம்பைக் கொண்டுள்ளது. மாநில சட்டமன்றம் ஒற்றை அவையைக் கொண்டுள்ளது, இது மாநில மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

இமாச்சலப் பிரதேசத்தின் தற்போதைய சட்டமன்றம் ஓர் அவையினைக் கொண்டது. இதில் 68 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். முன்னதாக கலைக்கப்படாவிட்டால் சட்டமன்றத்தின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும்.

Remove ads

முதலமைச்சர்

சுக்விந்தர் சிங் சுகு, இமாச்சலப் பிரதேச மாநில அரசின் தற்போதைய முதலமைச்சராக, இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[1]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads