இம்ரான் கான் (நடிகர்)

From Wikipedia, the free encyclopedia

இம்ரான் கான் (நடிகர்)
Remove ads

இம்ரான் கான் ('Imran Khan', Hindi: इम्रान ख़ा,Bengali: ইমরান খান ஓர் இந்திய பாலிவுட் திரைப்பட நடிகராவார். இவர் 1983 வது வருடம் ஜனவரி 13ம் தேதி பிறந்தார். இவரின் இயர் பெயர் இம்ரான் கான் பால் என்பதாகும். இவர் நடிகர் ஆமிர் கான் மற்றும் தயாரிப்பாளரும் இயக்குனருமான மன்சூர் கான் ஆகியோரின் மருமகன் ஆவார். பர்சியன் மற்றும் பிரித்தானிய வம்சாவழியில் வந்தவர்.[1] இவர் 2008வது வருடம் ஜானே து யா ஜானே நா என்ற படத்தில் அறிமுக நாயகனாக நடித்துப் புகழ் பெற்றார்.

விரைவான உண்மைகள் இம்ரான் கான், பிறப்பு ...
Remove ads

வாழ்க்கை வரலாறு

இம்ரான் கான் அனில் பால்[3] என்னும் இந்திய பெங்காலி அமெரிக்கர் மற்றும் நுஜத் கான் ஆகியோரின் மகனாகப் பிறந்தார். அவருடைய தந்தை சிலிகான் வேலியில் நெட்ஃபிக்ஸ் என்னும் நிறுவனத்தில் பொறியியல் செயற்பாட்டு இயக்குநராகப் பணிபுரிகிறார். இவருக்கு, நுஜட்டின் சகோதரரான இயக்குநர் மன்சூர் கான் மும்பை ஐஐடியில் வகுப்புத் தோழராக இருந்தவர். இம்ரானுக்கு ஒன்றரை வயதாகும்போது அவரது பெற்றோர் விவாகரத்து செய்து விட்டனர். இவர் இந்தியாவில் தனது தாயாரிடம் கான் என்னும் குடும்பப் பெயருடன் வளர்ந்தார். இருப்பினும், உயர் நிலைப் பள்ளிக் கல்வியை முடிப்பதற்காக இவர் தனது தந்தையுடன் வசிப்பதற்காகக் கலிஃபோர்னியாவிற்குச் சென்றார். பிறகு லாஸ் ஏஞ்சல்சில் திரைப்படத் தயாரிப்பில் பயிற்சி பெற்றார். இவர் நடிகர் அமீர் கான் மற்றும் இயக்குநர் மன்சூர் கான் ஆகியோரின் மருமகனும் மற்றும் குறிப்பிடத்தக்க இயக்குநரும் தயாரிப்பாளருமான நசீர் ஹுசைனின் பேரனும் ஆவார். இந்தியாவில், இவர் பாம்பே ஸ்காட்டிஷ் ஸ்கூல் என்னும் பள்ளியில் படித்தார். நாலாவது வகுப்பிற்குப் பிறகு இம்ரான் ஸ்காட்டிஷ் பள்ளியை விட்டு ஊட்டியில் ஒரு உறைவிடப் பள்ளியில் சேர்ந்தார்.[4][5]

Remove ads

தொழில்

குழந்தை நட்சத்திரம்

தனது மாமா ஆமீர் கானின் படங்களான கயாமத் ஸே கயாமத் தக் (1988)[6] மற்றும் ஜோ ஜீத்தா வஹி சிக்கந்தர் (1992) ஆகிய படங்களில் இம்ரான் கான் ஒரு குழந்தை நட்சத்திரமாகத் தோன்றினார். இந்த இரண்டு முறையும் அவர் இளைய ஆமிர் கான் வேடமேற்றிருந்தார். அவர் ஒரு இயக்குநராக வேண்டும் என்றே விரும்பினார். ஒரு நடிகராக பாலிவுட்டில் நுழைவதற்கு முன்னால் அதுதான் அவரது அசல் திட்டமாக இருந்தது. மும்பையில் கிஷோர் நமித் கபூரின் நடிப்புப் பயிற்சி நிறுவனத்தில் கான் சேர்ந்தார்.

கட்டுடைத்த வெற்றி (2008)

கான் 2008வது வருடம் ஆமிர் கான் மற்றும் மன்சூர் கான் தயாரித்த ஜானே து யா ஜானே நா என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அரங்கேறினார். இதில் அவருடன் கதாநாயகியாக நடித்தவர் ஜெனிலியா டி'சௌஸா. இந்தத் திரைப்படம் ஆரவாரமான விமர்சனங்களைப் பெற்றது மற்றும் அந்த வருடத்தின் மிகப் பெரும் வெற்றிகளில் ஒன்றாகத் திகழ்ந்தது. மேலும், 54வது பிலிம்பேர் விருதுகளில் சிறந்த அறிமுக ஆண் நடிகர் விருதுக்காகக் கான் பரிந்துரைக்கப்பட்டார்; இதனை அவர் ஃப்ர்ஹான் அக்தருடன் இணைந்து வென்றார். அவருடைய அடுத்த திரைப்படம் சஞ்சய் தத் மற்றும் மினிஷா லம்பாவுடன் நடித்த கிட்நாப். இதில் அவர் ஒரு எதிர்மறையான கதாபாத்திரம் ஏற்று நடித்தார். இது வசூலில் தோல்வியுற்றது. அப்படத்தின் மிகச் சுமாரான இயக்கமே தோல்விக்கு காரணமாக விமர்சகர்களால் கூறப்பட்டது. இருப்பினும், இதில் கானின் நடிப்பு பாராட்டப்பட்டு அவரின் பெயர் 2009வது வருடத்தின் ஐஐஎஃப்ஏ விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டது. அடுத்தபடியாக ஸ்ருதி ஹாசன் மற்றும் சஞ்சய் தத் ஆகியோருடன் லக் என்ற அதிரடி திரைப்படத்தில் கான் நடித்தார்.[7]

சல்மான் கான் நிகழ்த்திய தஸ் கா தம் என்ற பிரபல தொலைக் காட்சி நிகழ்ச்சியில் தனது மாமா ஆமிர் கானுடன் இணைந்து தோன்றினார்.[8]. கரினா கபூருடன் இணைந்து தேரே மேரே பீச் மே என்ற திரைப்படத்திலும் இவர் நடித்தார்.[9].

Remove ads

சொந்த வாழ்க்கை

அவந்திகா மலிக், கானின் நீண்ட காலத் தோழியாக இருந்தவர். 2010வது வருடம் ஜனவரி 16 அன்று கர்ஜத்தில் உள்ள அவந்திகா குடும்பத்தினரின் பண்ணை வீட்டில் கான் திருமண நிச்சயம் செய்து கொண்டார்.[10]

திரைப்பட விவரங்கள்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, திரைப்படம் ...
மேலதிகத் தகவல்கள் விருதுகள், பிலிம்பேர் விருதுகள் ...
Remove ads

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads