இயக்கு தளம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இயக்கு தளம் (Operating System) என்பது கணினியின் உள் உறுப்புகளையும், கணினியில் உள்ள மென்பொருட்களையும் ஒழுங்குற ஒத்திணக்கத்துடன் இயங்க உதவும் நடுவண் அமைப்பாக இருக்கும் அடிப்படை மென்பொருளாகும். எந்தக் கணினியும் திறமாக இயங்க ஒரு இயக்கு தள மென்பொருள் இருப்பது இன்றியமையாததாகும். இயக்கு தளமானது கணினியின் நினைவகத்தின் இடங்களை முறைப்படி பகிர்ந்தளிப்பது, கோப்புகளை சீருறுத்தி பராமரிப்பது, பல்வேறு பணிகளை கட்டுப்படுத்துவது, வரிசைப்படுத்துவது, மற்றும் கணினியுடன் இணைக்கப்பட்ட தரவு உள்ளீடு கருவிகளையும், தரவு வெளியீடு கருவிகளையும் சீராக பணிப்பது, பிற மின்வலை தொடர்புகளை வழிப்படுத்துவது என கணினியின் பல்வேறு அடிப்படையான நிகழ்வுகளை நடுவாக இருந்து இயக்குவதே இயக்கு தளம் என்னும் கருவான மென்பொருளாகும்.

இயக்கு தளத்தின் முக்கிய தொழிற்பாடுகள்:
Remove ads
வகைகள்
நிகழ்நேர இயக்கு தளம்
நிகழ்நேர நிகழ்வுகளை உள்வாங்கி, அதற்கேற்பக் கணினியின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் இயக்கு தளம், நிகழ்நேர இயக்கு தளம் எனப்படுகிறது. நிகழ்நேர இயக்கு தளங்களில் கணினியின் நிரல்களை அட்டவணைப்படுத்த மேம்பட்ட வினைச்சரம் உபயோகப்படுத்தப்படுகிறது. இந்த வகை இயக்கு தளங்களில் சரியான விடையை விட சரியான நேரத்தில் பெறுவதே அவசியமாகும்.
பற்பயனர் இயக்கு தளம் மற்றும் ஒரு பயனர் இயக்கு தளம்
பற்பயனர் இயக்கு தளம், பல பயனர்களை ஒரே நேரத்தில் கணினியை இயக்க வழி வகுக்கிறது. இந்த வகை இயக்கு தளம் நேரப் பகிர்தல் முறைப்படி, ஒவ்வொரு பயனரின் கட்டளைகளையும் நிறைவேற்றுகிறது. ஒரு பயனர் இயக்கு தளம் ஒரு நேரத்தில் ஒரு பயனரை மட்டுமே கணினியை இயக்க அனுமதிக்கிறது. வின்டோஸ் போன்ற இயக்கு தளங்கள் பல பயனர் கணக்குகள் உருவாக்க அனுமதித்தாலும் அவை ஒரு பயனர் இயக்கு தளங்களே. யுனிக்ஸ் சார்ந்த இயக்கு தளங்கள் பல பயனர்களை ஒரே நேரத்தில் கணினியை இயக்க வழி வகுக்கிறதால் அவை பல பயனர் இயக்கு தளங்கள் ஆகும்.
பற்பணி இயக்கு தளம் மற்றும் ஒரு பணி இயக்கு தளம்
பல்வேறு நிரல்களை ஒரே நேரத்தில் இயக்கும் இயக்கு தளம் பற்பணி இயக்கு தளம் ஆகும். தற்போது உபயோகப்படுத்தப்படும் அனைத்து வகை இயக்கு தளங்களும் இவ்வகையைச் சார்ந்தனவே. ஒரு நேரத்தில் ஒரேயொரு நிரலை மட்டுமே இயக்கவல்ல இயக்கு தளம் ஒரு பணி இயக்கு தளம் ஆகும்.
பதிவேற்றப்பட்ட இயக்கு தளம்
இவ்வகை இயக்கு தளங்கள் பதிகணினியில் இயங்கவல்லன. இவை சிறிய வகை கணினிகளில் இயங்குவதற்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன. குறைந்த ஆற்றல் மற்றும் குறைந்த வளங்களைக் கொண்டு பதிகணினியை இயக்குவதே இவற்றின் முதண்மைப் பணியாகும்.
Remove ads
வரலாறு
முதன்முதல் உருவாக்கப்பட்ட கணினிகள் இயங்கு தளம் இன்றியே இருந்தன. 1950 களின் துவக்கத்தில் கணினி ஒரு நேரத்தில் ஒரே ஒரு நிரலை மட்டுமே செயல்படுத்தும். பின்னர் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக இது படிப்படியாக வளர்ந்தது.
பரவலாக பயன்படும் இயக்கு தளங்கள்

- மைக்ரோசாப்ட் விண்டோசு
- கூகுள் அண்ட்ராய்டு
- யுனிக்ஸ்
- குனூ/லினக்சு
- உபுண்டு
- இலவச பி.எஸ்.டி (FreeBSD)
- சன் மைக்ரோசிஸ்டம்ஸ் சொலாரிஸ்
- மாக் இயக்குதளம்
மேற்கோள்கள்
புற இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads