மைக்ரோசாப்ட்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மைக்ரோசாப்ட் நிறுவனம்(Microsoft Corporation) அமெரிக்காவை மையமாக கொண்டு செயல் படும் ஓர் பன்னாட்டு மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். இது உலகின் மிகப் பெரிய மென்பொருள் தயாரிப்பு நிறுவனமாக விளங்குகிறது. கணினிக்குத் தேவையான பல வகை மென்பொருட்களை தயாரிப்பது, மேம்படுத்துவது, உரிமை மற்றும் ஆதரவு அளிப்பது போன்ற செயற்பாடுகளை உடையது. வாசிங்டனில் உள்ள ரெட்மாண்ட் நகரத்தில் இதன் தலைமை இடம் உள்ளது. இதனை பில் கேட்சும் பவுல் ஆல்லெனும் ஏப்ரல் 4, 1975இல் நிறுவினர். வருமானத்தின் அளவுகொண்டு உலகின் மிகப்பெரும் மென்பொருள் ஆக்குனராக மைக்ரோசாப்ட் விளங்குகிறது.[4] உலகளவில் பங்குச்சந்தையில் மிகக் கூடுதலான மொத்தமதிப்பைக் கொண்டுள்ள நிறுவனமாகவும் இது விளங்குகிறது.[5]விண்டோஸ் இயக்குதளங்கள், மைக்ரோசாப்ட் ஆபிஸ் ஆகியவை இதன் முக்கிய உற்பத்தி பொருட்கள் ஆகும்.
அல்டைர் 8800விற்கு பேசிக் மொழிமாற்றி மென்பொருளை உருவாக்கி விற்கும் நிறுவனமாக மைக்ரோசாப்ட் முதலில் துவங்கப்பட்டது. பின்னர் எம்.எஸ்.டாஸ் எனும் இயக்குதளத்தை 1980களில் அறிமுகப்படுத்தி தனி மேசைக் கணினி இயக்கு தளம் தயாரிப்பில் முன்னணி வகித்தது. இதனையொட்டி மைக்ரோசாப்ட் விண்டோசு எனும் வரைகலைச் சூழல் இயக்குதளங்களை ஒன்றையடுத்து ஒன்றாக உருவாக்கி விற்பனை செய்தது. இதனால் மைக்ரோசாப்ட், "ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு மேசையிலும் மைக்ரோசாப்ட்டின் மென்பொருள்" என்ற நிலையை எட்டியது. 1986இல் வெளியிட்ட முதல் பொதுப்பங்கு வெளியீடு மற்றும் பிந்தைய பங்கு விலை ஏற்றங்கள் காரணமாக மைக்ரோசாப்ட் தனது ஊழியர்களில் மூவரை பில்லியனர்களாகவும் 12000 பேரை மில்லியனர்களாகவும் ஆக்கியது. 1990களிலிருந்து பல நிறுவனங்களை கையகப்படுத்தியும் இணைத்தும் தன்னை இயக்குதள சந்தையிலிருந்து விரிவுபடுத்திக் கொண்டுள்ளது. 2011இல் இசுகைப் தொழில்நுட்ப நிறுவனத்தை $8.5 பில்லியனுக்கு வாங்கியுள்ளது; இதுவரை இதுவே மிகப்பெரும் வாங்குதலாகும்.[6]
2013இல் மைக்ரோசாப்ட் தனிமேசைக் கணினி மற்றும் மடிக்கணினி இயக்குதளங்களிலும் அலுவலக திறன்பெருக்கு மென்பொருள் பயன்பாட்டுச் செயலிகளிலும் (குறிப்பாக மைக்ரோசாப்ட் ஆபிஸ் உடன்) முதன்மைநிலையில் உள்ளது. தவிர தனிமேசைக் கணினிகளுக்கும் கணிவழங்கிகளுக்கும் பல்வேறு மென்பொருள் பயன்பாட்டுச் செயலிகளை உருவாக்கி விற்பனை செய்து வருகிறது. மேலும் இணைய தேடுபொறிகள், நிகழ்பட ஆட்டத் தொழிற்துறை ( எக்ஸ் பாக்ஸ் மற்றும் எக்ஸ் பாக்ஸ் 360 வழங்கல்களுடன்), எண்ணிமச் சேவைகள் சந்தை (எம்எஸ்என் மூலமாக), மற்றும் நகர்பேசிகள் (விண்டோஸ் போன் இயக்குதளம் மூலமாக) போன்றவற்றிலும் முதன்மைநிலை எய்த முயன்று வருகிறது. சூன் 2012இல் முதன்முறையாக மைக்ரோசாப்ட் தனிக்கணினி வழங்குனர் சந்தையில் தனது மைக்ரோசாப்ட் சர்பேஸ் கைக் கணினி யுடன் நுழைந்துள்ளது.
1990களில் மைக்ரோசாப்ட் முற்றுரிமை வணிகச் செயல்பாடுகளையும் போட்டிக்கெதிரான செய்முறைகளிலும் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. தனது மென்பொருளைப் பயன்படுத்த நியாயமற்ற கட்டுப்பாடுகளை கடைபிடித்ததாகவும் தவறான தகவல்களை தனது சந்தைப்படுத்துதல் முயற்சிகளில் பயன்படுத்தியதாகவும் வழக்குகள் போடப்பட்டன. அமெரிக்காவின் நீதித்துறையும் ஐரோப்பியக் குழுமமும் மைக்ரோசாப்ட் சட்டங்களுக்குப் புறம்பாக செயல்பட்டதாக கண்டறிந்தனர்.
Remove ads
நிறுவனம்
"மைக்ரோசாப்ட்" என்ற பெயர் மைக்ரோ கம்ப்யூட்டர் சாப்ட்வேர் என்ற ஆங்கிலச் சொற்களின் இணைப்பாகும். சூலை, 1975இல் பில் கேட்சு பவுல் ஆல்லெனுக்கு எழுதிய கடிதத்தில் முதன்முதலில் "மைக்ரோ-சாப்ட்" எனக் குறிப்பிட்டுள்ளார்.[7]. தற்போதைய வடிவம் நவம்பர் 26, 1976 அன்று நியூ மெக்சிகோ மாநிலத்தில் பதியப்பட்டது[8].. நிறுவனத்தின் தலைமையகம் அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள ரெட்மாண்டில் அமைந்துள்ளது. இதனால் மைக்ரோசாப்ட் சில நேரங்களில் ரெட்மாண்ட் நிறுவனம் என்றழைக்கப்படுகிறது.
இந்த நிறுவனத்தின் இயக்கு தளம் விண்டோசு பல பதிப்புகள் வெளியிடப்பட்டு கணினி உலகில் ஓர் சீர்தரமாக விளங்குகிறது. இந்த நிறுவனத்தில் 88,000 ஊழியர்கள் உலகெங்கும் பல நாடுகளில் பணி புரிகின்றனர். சனவரி 14, 2000 முதல் இசுட்டீவ் பால்மர் இதன் தலைவராக பொறுப்பில் உள்ளார்.
2014 பிப்ரவரி 4ஆம் தேதி அன்று மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரியாக சத்ய நாதெல்லா என்பவர் அமர்த்தப்பட்டார். இவர் ஒரு இந்தியர். அதேபோல் மைக்ரோசாப்ட்டின் புதிய தலைவராக ஜான் தாம்சன் தேர்வு செய்யப்பட்டார். இதுவரை தலைவர் பதவி வகித்த பில்கேட்ஸ் இனிமேல் தொழில்நுட்ப ஆலோசகராகச் செயல்படுவார் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
Remove ads
வரலாறு
வணிகச் சின்னத்தின் கூர்ப்பு
மேற்சான்றுகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads