இரங்காநதி அணை

From Wikipedia, the free encyclopedia

Remove ads

இரங்காநதி அணை (Ranganadi Dam) என்பது கான்கிரீட்டால் ஆன புவியீர்ப்பு அணையாகும். இது ஆற்றின் ஓட்டத்தினை திசை திருப்பும் விதமாக இந்தியாவின் அருணாச்சல பிரதேசம் மாநிலத்தில் இரங்காநதியின் மீது (பனையாறு நதி) கட்டப்பட்டுள்ளது.

விரைவான உண்மைகள் இரங்காநதி அணை, அமைவிடம் ...
Remove ads

உற்பத்தி திறன்

இந்த அணை நீர் மின் ஆற்றல் உற்பத்திக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இரங்காநதி நீர் மின்சார திட்டத்தின் முதல் கட்டத்தின் ஒரு பகுதியாகும். சுமார் 405 மெகாவாட் (543,000 குதிரைத் திறன்) திக்ராங் மின்னாற்றல் நிலையம் இதனால் இயக்கப்படுகிறது. சுமார் 68 மீட்டர் உயரமான அணை தண்ணீரை தெற்கே 10.1 கி. மீ. உயர்மட்ட சுரங்கப்பாதை வழியாகவும் 1062 மீட்டர் விசை நீர்க்குழாய் வழியாக 135மெகா வாட் விசையாழிகளை இயக்கப் பயன்படுகிறது. மின் உற்பத்தி நிலையமானது, வறட்சியின் காரணமாக இதன் திறனை விட மிகக் குறைவாகவே மின்னுற்பத்தி செய்து வருகிறது.[1]

திட்டத்தின் இரண்டாம் நிலை, நிலை I க்கு நீர் சேமிப்பை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 134 மீட்டர், 523,000,000 m3 (1.85×1010 cu ft) நீர் சேமிப்புத் திறன் கொண்ட பாறையுடன் கூடிய நீர் சேமிப்பு பகுதியினைக் கொண்டுள்ளது. இந்த அணை கூடுதலாக 180 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் நிலையமாக உள்ளது.

Remove ads

மேலும் பார்க்கவும்

  • திபாங் அணை

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads