இரசீத் கான் (இசைக்கலைஞர்)

இந்திய பாரம்பரிய இசைக்கலைஞர் 1968 இல் பிறந்தவர் From Wikipedia, the free encyclopedia

இரசீத் கான் (இசைக்கலைஞர்)
Remove ads

உஸ்தாத் இரசீத் கான் (Rashid Khan, 1 சூலை 1968 – 9 சனவரி 2024) இந்துஸ்தானி இசை பாரம்பரியத்தில் ஒரு இந்திய பாரம்பரிய இசைக்கலைஞராவார் . இவர் இராம்பூர்-சகாசுவான் கரானாவைச் சேர்ந்தவர். (பள்ளி). மேலும் கரானாவின் நிறுவனர் இனாயத் உசேன் கானின் பேரனுமாவார். இவர் சோமா என்பவரை மணந்தார்.

விரைவான உண்மைகள் உஸ்தாத் இரசீத் கான், பின்னணித் தகவல்கள் ...

பல பதிப்புகளில் சொல்லப்பட்ட ஒரு கதையில், பண்டிட் பீம்சன் ஜோஷி ஒருமுறை இவரை "இந்திய குரலிசையின் எதிர்காலத்திற்கான உறுதி" என்று குறிப்பிட்டார்.[1][2] இவருக்கு பத்மசிறீ விருதும், 2006 இல் சங்கீத நாடக அகாடமி விருதும் வழங்கப்பட்டது .

Remove ads

ஆரம்ப கால வாழ்க்கை

உத்தரபிரதேசத்தின் பதாவுனில் பிறந்த இவர் தனது ஆரம்ப பயிற்சியை தனது தாய்வழி மாமா, உஸ்தாத் நிசார் உசைன் கான் (1909-1993) என்பவரிடமிருந்து பெற்றார். இவர் உஸ்தாத் குலாம் முஸ்தபா கானின் மருமகனும் ஆவார்.

சிறுவயதில் இவருக்கு இசையில் அதிக ஆர்வம் இல்லை. இவரது மாமா குலாம் முஸ்தபா கான் இவரது இசை திறமைகளை கவனித்து, சில காலம் இவருக்கு மும்பையில் பயிற்சி அளித்தார்.[3] இருப்பினும், இவர் தனது முக்கிய பயிற்சியை நிசார் உசேன் கானிடமிருந்து பெற்றார்.[4] பாடங்களை ஒரு குழந்தையாக இவர் வெறுத்தாலும், 18 வயதிற்குப் பிறகு தனது இசை பயிற்சியை உண்மையிலேயே ரசிக்கத் தொடங்கினார்.

Remove ads

தொழில்

இரசீத் கான் தனது முதல் இசை நிகழ்ச்சியை பதினொரு வயதில் வழங்கினார். அடுத்த ஆண்டு, 1978 இல், தில்லியில் ஒரு ஐடிசி இசை நிகழ்ச்சியில் பங்கேற்றார். ஏப்ரல் 1980 இல், நிசார் உசேன் கான் கொல்கத்தாவின் ஐ.டி.சி சங்கீத ஆராய்ச்சி ஆராய்ச்சி கழகத்திற்கு (எஸ்.ஆர்.ஏ) சென்றபோது, இவரும் தனது 14 வயதில் அங்கு சேர்ந்தார். 1994 வாக்கில், இவர் அகாதமியில் ஒரு இசைக்கலைஞராக (ஒரு முறையான செயல்முறை) ஒப்புக் கொள்ளப்பட்டார்.

விருதுகள்

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads