இரஞ்சித்து சிங் சர்க்காரியா

From Wikipedia, the free encyclopedia

Remove ads

இரஞ்சித்து சிங் சர்க்காரியா (Ranjit Singh Sarkaria) இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதியாக 1973 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி முதல் 1981 ஆம் ஆண்டு சனவரி மாதம் 15 ஆம் தேதிவரை பணியில் இருந்தார் [1]

விரைவான உண்மைகள் நீதிபதிஇரஞ்சித்து சிங் சர்க்காரியாR S Sarkaria, இந்திய உச்சநீதிமன்றத்தின் தற்போதைய நீதிபதிகள் ...
Remove ads

ஆரம்ப கால வாழ்க்கை

இரஞ்சித்து சிங் சர்க்காரியா 1916 ஆம் ஆண்டு சனவரி மாதம் 16 ஆம் தேதியன்று பிறந்தார். பாட்டியாலாவில் உள்ள மொகிந்திரா கல்லூரியில் பயின்றார். பின்னர் லாகூரில் உள்ள அரசு சட்டக்கல்லூரியில் பட்டம் பெற்றார். தற்போது இக்கல்லூரி பாக்கித்தானில் உள்ளது.[1]

தொழில்

சட்டத்தில் பட்டம் பெற்றதும், இரஞ்சித்து சிங் சர்க்காரியா பாட்டியாலாவில் ஒரு வழக்கறிஞராகப் பணியாற்றினார்.

பின்னர் 1940 ஆம் ஆண்டில் பாட்டியாலா உயர் நீதிமன்றத்தின் வழக்கறிஞராகப் பதவியேற்றார். புதிய அரசியலமைப்பை மொழிபெயர்ப்பதற்காக மாநில அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட குழுவில் இருந்த இருவரில் சர்க்காரியாவும் ஒருவராவார். முன்னாள் பாட்டியாலா மற்றும் கிழக்கு பஞ்சாப் மாநிலங்கள் ஒன்றியத்தின் மாநில அரசாங்கம் இக்குழுவை உருவாக்கியது. இந்தியாவின் பஞ்சாபி மொழியில் மொழி பெயர்ப்பது சர்க்காரியாவின் பணியாக இருந்தது.[1]

சர்க்காரியா பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றத்தில் 1967 ஆம் ஆண்டு சூன் மாதம் 13 ஆம் தேதி முதல் 1967 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதி வரை நீதிபதியாக பணியாற்றினார். 27 செப்டம்பர் 1967 முதல் 15 செப்டம்பர் 1973 வரை கீழ்நீதிமன்றத்தில் நீதிபதியாகவும் பணியாற்றினார் [1]

சர்க்காரியா 1973 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதியன்று இந்திய உச்ச நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்டார். 1981 ஆம் ஆண்டு சனவரி மாதம் 15 ஆம் தேதி ஓய்வு பெறும் வரை உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றினார் [1]

ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, சர்க்காரியா 1983 ஆம் ஆண்டு பிரதமர் இந்திரா காந்தியின் அரசாங்கத்தால் இந்தியாவின் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களுக்கு இடையிலான உறவுகளை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்டார். இரஞ்சித்து சிங் சர்க்காரியா தலைமையில் இந்த குழு சர்க்காரியா கமிசன் என அறியப்பட்டது. சர்க்காரியா கமிசன் தனது கண்டுபிடிப்புகளை 1988 ஆம் ஆண்டு சமர்ப்பித்தது [2]

கூடுதலாக, சர்க்காரியா இந்திய பத்திரிகையாளர் மன்றத்தின் முன்னாள் தலைவராகவும் பணியாற்றினார்.[2]

Remove ads

இறப்பு

தனது 91வது வயதில், இந்தியாவின் சண்டிகரில், 2007 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று நீடித்த நோயால் காலமானார் [2][3]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads