இரண்டாம் கால்லியாஸ்

அரசியல்வாதி, போர் வீரர், இராசதந்திரி From Wikipedia, the free encyclopedia

Remove ads

கால்லியாஸ் (Callias II, கிரேக்கம்: Καλλίας Καλλίας ) என்பவர் ஒரு பண்டைய கிரேக்க அரசியல்வாதி, போர் வீரர், இராசதந்திரி ஆவார். இவர் கிமு 5 ஆம் நூற்றாண்டில் செயல்பட்டவர். இவரது தாத்தா, முதலாம் கால்லியாஸ் மற்றும் இவரது பேரன், மூன்றாம் கால்லியாஸ் ஆகியோரிடமிருந்து இவரை வேறுபடுத்துவதற்காக இவர் பொதுவாக கால்லியாஸ் II என்று அழைக்கப்படுகிறார்.

அரசுக்கு சொந்தமான வெள்ளிச் சுரங்கமான லாரியனுக்கு அடிமைகளை வழங்கிய பணக்கார ஏதெனியன் குடும்பத்தில் பிறந்த ஏதென்சின் பணக்காரர்களில் ஒருவராக இவர் இருந்தார். [1] காலியாஸ் மராத்தான் போரில் (490) போர் புரிந்தார். [2] போருக்குப் பிறகு, ஒரு எதிரி சிப்பாய் காலியாசை ஒரு மன்னராக கருதி குழப்பி, பெரிய அளவிலான தங்கம் மறைத்து வைக்கப்பட்டுள்ள பள்ளம் எங்கு உள்ளது என்று காட்டினார் என்று புளூட்டாக் கூறுகிறார். காலியஸ் அந்த மனிதனைக் கொன்று, புதையலை இரகசியமாக எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த நிகழ்வு குறித்து வதந்தி பரவியது இதனால் நகைச்சுவைக் கவிஞர்கள் இவரது குடும்பத்திற்கு லாக்கோபுளூட்டி அல்லது "பள்ளத்தால் வளப்படுத்தப்பட்டவர்கள்" என்ற பெயரைக் கொடுத்தனர். அவரது மகன், இப்போனிகஸ், ஒரு இராணுவ தளபதி.

மில்டியாடீசு இறந்த நேரத்தில், சிமோனின் சகோதரியான எல்பினிசை திருமணம் செய்ய விரும்பிய கல்லியாஸ் அதற்கு ஈடாக சிமோன் தனது தந்தையிடமிருந்து மரபுரிமையாக பெற்ற கடனைச் செலுத்த முன்வந்தார். அதற்கு சிமோன் ஒப்புக்கொண்டார்.

இந்த காலகட்டத்தில் ஏதென்சின் திறமையான தலைவராக இருந்த பெரிக்கிள்சின் ஆதரவாளரான கல்லியாஸ், ஏதென்சு மற்றும் டெலியன் கூட்டணியின் தூதுவராகவும் இருந்தார். [1] கிமு 461 இல் இவர் பாரசீக மன்னர் முதலாம் அர்தசெர்க்சசிடம் தூதராக ஒரு பயணத்தை மேற்கொண்டார். [1]

சிமோனின் மரணத்திற்குப் பிறகு, கிமு 449 இல் [1] [3] இவர் சூசாவுக்குச் சென்று முதலாம் அர்தசெர்க்சசுடனான அமைதி ஒப்பந்தத்தை முடித்தார் [2] இது கால்லியாஸ் அமைதி உடன்பாடு என்று அறியப்படுகிறது. இந்த ஒப்பந்தம் கிரேக்க பாரசீகப் போரை முடிவுக்குக் கொண்டுவந்தது மற்றும் பாரசீக தாக்குதல்களிலிருந்து சின்ன ஆசியாவில் இருந்த கிரேக்க நகர அரசுகளை பாதுகாத்தது. [1] ரெஜியன் மற்றும் லியோன்டினோய் உடனான சமாதான உடன்படிக்கைகளுக்கும், முப்பது ஆண்டு அமைதி ஒப்பந்தம் என அழைக்கப்படும் எசுபார்த்தாவுடனான அமைதி உடன்படிக்கைக்கும் காலியாஸ் காரணமாக இருக்கலாம். [4]

ஏதென்சுக்குத் திரும்பிய காலியஸின் தலைவிதி ஒரு மர்மமாகவே உள்ளது மேலும் இவரது பிற்கால ஆண்டுகள் பற்றிய தகவல்கள் துண்டு துண்டாக மட்டுமே உள்ளன. சில ஆதாரங்கள்  அர்தர்செர்க்சிடம் சென்ற இவரது பணி வெற்றியடையவில்லை என்றும், ஏதென்சுக்கு திரும்பியவுடன் இவர் தேசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டு ஐம்பது தாலந்துகள் அபராதம் விதிக்கப்பட்டார் என்றும் குற்றம் சாட்டப்படுகிறது. [2] மற்றவர்கள் கூற்றின்படி, [3] ஏதெனியர்கள் அமைதி உடன்படிக்கையைக் கொண்டுவந்த கலியாசுக்கு சிறப்பு மரியாதை அளித்தனர் என்கின்றனர்.

கலியாஸின் மகன் இப்போனிகஸ் ஒரு குறிப்பிடத்தக்க இராணுவத் தலைவராகவும் இருந்தார், மேலும் அவர் "கிரீஸ் நாட்டின் பணக்காரர்" என்று அறியப்படார். [5]

Remove ads

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads