இரண்டாம் டேரியஸ்

From Wikipedia, the free encyclopedia

இரண்டாம் டேரியஸ்
Remove ads

இரண்டாம் டேரியஸ் (Darius II) பாரசீக அகாமனிசியப் பேரரசராக கிமு 423 முதல் 404 வரை 19 ஆண்டுகள் ஆட்சி செய்தவர்.[1] மேலும் இவர் பிந்தைய கால எகிப்திய இராச்சியத்தின் பர்வோனாகவும் ஆட்சி செய்தவர்.

விரைவான உண்மைகள் இரண்டாம் டேரியஸ், அகாமனிசியப் பேரரசர் ...
Thumb
இரண்டாம் டேரியஸ் கல்லறையில் போர் வீரர்களின் சிற்பங்கள்
Thumb
அகாமனிசிய வம்சாவளி வரைபடத்தில் இரண்டாம் டேரியசின் பெயர்

அகாமனிசியப் பேரரசர் முதலாம் அர்தசெராக்சஸ் கிமு 424-இல் மறைவான போது இரண்டாம் அர்தசெராக்சஸ் ஆட்சி பீடம் ஏறினார். இரண்டரை மாதம் கழித்து இரன்டாம் அர்தசெராக்சை தனது சகோதரர் சோக்டியானசை கொன்று அகாமனிசியப் பேரரசரசின் ஆட்சி பீடம் ஏறினார்.[2] பின்னர் சோக்டியானசை வீழ்த்திய இரண்டாம் டேரியஸ் கிமு 423-இல் பாரசீகத்தின் அகாமனிசியப் பேரரசராக முடிசூட்டிக் கொண்டார்.

Thumb
இரண்டாம் டேரியசின் கல்லறை, நக்ஸ்-இ-ருஸ்தம்

வரலாற்றாளர்கள் இரண்டாம் டேரியசின் ஆட்சிக் காலம் குறித்து சிறிதளவே அறிந்து வைத்துள்ளனர். மெசொப்பொத்தேமியாவில் இருந்த மீடியர்கள் கிமு 409-இல் அகாமனிசியப் பேரரசர் இரன்டாம் டேரியசுக்கு எதிராக கிளர்ச்சி செய்தனர்.

Remove ads

ஏதன்ஸ் உடன் பிணக்கு

ஏதன்ஸ் நாட்டு கிரேக்கர்கள், இரண்டாம் டேரியசுக்கு எதிராக கிளர்ச்சி செய்ய, கிமு 413-இல் அனத்தோலியா பகுதியில் வாழ்ந்த அமோர்ஜஸ் மக்களை தூண்டி விட்டனர். கிமு 414-இல் ஏஜியன் கடல் பரப்பில் இரண்டாம் டேரியஸ் கப்பற்படைகளை பெருக்கியதுடன், ஏதன்ஸ் படைகளுக்கு எதிராக ஸ்பார்ட்டன்களுடன் கூட்டு சேர்ந்தார். இதனால் ஏதன்ஸ் நாட்டு கிரேக்கர்கள் அதிகம் வாழந்த ஆசியா மைனரின் ஐயோனியா நகரத்தை இரண்டாம் டேரியஸ் கிமு 412-இல் கைப்பற்றினார்.[3]

கிமு 404-இல் இரண்டாம் டேரியஸ் தனது ஆட்சியின் 9-ஆம் ஆண்டின் போது மறைந்த போது, அவரது மகன் இரண்டாம் அர்தசெராக்சஸ் பாரசீக அகாமனிசியப் பேரரசராக முடிசூட்டிக் கொண்டார்.

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads